பிரபல இந்தி நடிகர் ஜான் ஆப்ரகாம், 12.02.2012 கர்நாடக மாநிலம் மங்களூரில் நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்தார். விழா முடிந்ததும், அந்த வளாகத்தை அவர் சுற்றிப் பார்த்தார். அப்போது, அவரை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.
ஒவ்வொரு ரசிகரும், அவரிடம் கைக்குலுக்கினார்கள். அப்போது ஒரு ரசிகை திடீரென அவர் கையைப் பிடித்து விரலை கடித்துவிட்டார். அலறி அடித்த ஜான் ஆப்ரகாம் ரசிகையை தள்ளிவிட்டார்.
உடனடியாக பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக காரில் ஏற்றி அந்த இடத்தில் இருந்து கொண்டு சென்றனர். நடிகரின் விரலை கடித்த ரசினை ஜான் ஆப்ரகாமை தொண்டு விட்டேன் என்று கூச்சலிட்டவாறு ஓடினார்.
Post a Comment