தென்னிந்திய தொலைக்காட்சியான விஜய் டீவியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஏடெல் சூப்பர் சிங்கர் - 3 நிகழ்ச்சியில் கனடா தமிழ்ப் பெண்ணும் பங்குபற்றி எல்லோர் மனதையும் கொள்ளைகொண்டுள்ளார்.
பல மாதங்களாக விஜய் டீவியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் பாட்டுப்போட்டியில் ஈழப்பெண் கனடாவில் இருந்து குடும்பமாக சென்று கலந்துகொண்டுள்ளார்.
அவர் தனது பாட்டு திறமையால் மட்டுமல்ல, ஊரையும் நினைவுகூர்ந்து, தமிழர்களின் இன்னல்களை கூறி, எல்லோர் மனதிலும் இடம்பிடித்துள்ளதோடு, ஈழப்பாடல்களையும் பாடி அசத்தியுள்ளார்.
சாரிகா தனது திறமையால் சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
2010 இல் இதே பாடலை கனடிய தமிழ் தொலைக்காட்சியான டிவிஐ இலும் பாடியுள்ளார் சாரிகா
Post a Comment