நடிகை நமீதாவுக்கும் மும்பையை சேர்ந்த இளம் வக்கீல் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. ஏற்கனவே பரத்கபூர் என்பவருடன் நெருக்கமாக பழகினார். இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக பேசப்பட்டது. ஆனால் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். தற்போது நமீதா சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகிறார்.
எங்கள் அண்ணா, பில்லா, இளைஞன், சண்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவருக்கு இப்போது பட வாய்ப்புகள் இல்லை. எனவே தான் வேறு தொழிலுக்கு மாறியுள்ளார். மும்பையில் கட்டுமான தொழிலும் செய்து வருகிறார். அவருக்கு அங்குள்ள இளம் வக்கீல் ஒருவர் உதவியாக இருக்கிறார்.
நிலம் வாங்குவது, விற்பது போன்ற அனைத்து தொழில் காரியங்களும் அந்த வக்கீல் மேற்பார்வையிலேயே நடந்து வருகிறது. ஆரம்பத்தில் வக்கீலுடன் நட்பாக பழகிய நமீதா இப்போது காதல் வயப்பட்டுள்ளார். வாழ்க்கைத் துணைக்கு பொருத்தமானவர் அவர் தான் என்ற முடிவுக்கும் வந்துவிட்டாராம். விரைவில் அவர்கள் திருமணம் நடக்கும் என்கின்றனர்.
Post a Comment