பிரபல தெலுங்கு நடிகை பிரதியூஷா கற்பழித்துக் கொல்லப்பட்ட வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பிரதியூஷாவை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட சித்தார்த் ரெட்டிக்கு தண்டனை கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழில் முரளி ஜோடியாக மனுநீதி, கடல் பூக்கள் படங்களில் நடித்தவர் பிரதியூஷா. கடந்த 2002-ல் பிரதியூஷா ஐதராபாத்தில் காரில் பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மருத்துவ பரிசோதனையில் பிரதியூஷா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதை கொலை வழக்காக மாற்றினார்கள். கற்பழித்து பிரதியூஷாவை கொன்று இருப்பதாக கூறப்பட்டது.
பிரதியூஷாவுடன் கவலைக்கிடமான நிலையில் அவரது காதலன் சித்தார்த் ரெட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பிரதியூஷாவை சித்தார்த் கொலை செய்து விட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் சித்தார்த் குணமாகி வீடு திரும்பினார்.
இந்த வழக்கில் மற்ற விவரங்கள் இதுவரை தெரியாமல் இருந்தது. பிரதியூஷா கொலை செய்யப்பட்டதாகவும் கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் அவரது தாயார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது. இரு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தற்போது விசாரணைகள் முடிந்து தீர்ப்பை நீதிபதி நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
பிரதியூஷா கொலையில் சித்தார்த் மாட்டுவாரா என்பது இந்தத் தீர்ப்பில் தெரியவரும்.
Post a Comment