News Update :
Home » » வேலாயுதம், 7ம் அறிவு எது பெஸ்ட்?

வேலாயுதம், 7ம் அறிவு எது பெஸ்ட்?

Penulis : karthik on Monday, 7 November 2011 | 01:34

 
 
இம்முறை தீபாவளியை தித்திப்பாக கொண்டாட வெளிவந்துள்ள இரு பிரமாண்ட திரைப்படங்கள், விஜயின் 'வேலாயுதம்', சூர்யாவின் '7ம் ஆறிவு'.
தீபாவளிக்கு முதல் நாளே, இந்தியா, மலேசியா சிங்கப்பூர், மாத்திரமல்லாது ஐரோப்பிய நாடுகளில் பலவற்றிலும் படத்தின் பிரிமியர் ஷோ காண்பிக்கப்பட்டதால், இதுவரை படம் பார்த்த ரசிகர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற சில ஹாட் விமர்சனங்கள் இவை!
ரோபோ சத்தியா (மாத்தி யோசி பேஸ்புக்) பக்கத்திலிருந்து...
சூர்யா, ஸ்ருதி ஹாசன் நடித்த 'ஏழாம் அறிவு' பற்றி

16வது நூற்றாண்டிலிருந்து ஆரம்பமாகும் படம், ஆச்சரியத்தக்க காட்சி அமைப்புடனும், போதிதர்மனின் வாழ்க்கை பற்றிய கதையுடனும் நகர்கிறது. முதல் பாதியின் இரண்டாவது பகுதி முழுவதும் கொஞ்சம் தொய்வு! பொருந்தாத பாடல்களும், சுமாரான காதல் காட்சிகளும் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். ஆனால் இடைவேளைக்கு 30 நிமிடம் முதல் தொடங்கும் ஸ்கிரீன் பிளே, கிளைமேக்ஸ் காட்சி வரை போட்டு தாக்குகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இந்த ஆராய்ச்சி முயற்சிக்காக சல்யூட் அடிக்கலாம். இது சூர்யாவின் படமல்ல. சூர்யாவின் பக்கபலம், கடின உழைப்புடன் உருவாகியுள்ள பக்கா முருகதாஸின் திரைப்படம். ஸ்ருதி ஹாசனிடமிருந்து இவ்வளவு அழகான பெர்மோஃபன்ஸ் எதிர்பார்த்திருக்க முடியாது.

ஹரிஸ் ஜெயராஸ் இசையில் இன்னும் என்ன தோழா, மற்றும் யெம்மா யெம்மா பாடல்கள் மாத்திரம், ஸ்கோர் பண்ணுகிறது. பின்னணி இசை, ஏ.ஆர்.ரஹ்மானிடம் கொடுத்திருந்தால் போட்டுத்தாக்கியிருப்பார்.

எல்லாரையும் விட கிங் என்றால் அது டோங் லீ தான். ஹிப்னோத்திக் மண்டையனாக ஒவ்வொரு காட்சியிலும் தூள் கிளப்புகிறார். எல்லாவற்றையும் வைத்து பார்க்கும் போது, நல்ல சினிமாவை விரும்புவர்களுக்கு இப்படம் பிடிக்கும். தமிழனுக்கு பெருமை சேர்க்கும் படமாக அமையும்!

ஆனால் படத்தின் பிரிமியர் ஷோ பார்த்த மலேசிய ரசிகர்கள் சிலரிடமிருந்து படத்திற்கு எதிர்மறையான காமெண்டுக்கள் குவிகின்றன. படம் 'மொக்கை',முருகதாஸின் படமா என நம்பவே முடியவில்லை, கிளைமேக்ஸ் காட்சியில் ஹரிஸின் பின்னணி இசை சொதப்பல் என்கிறார்கள்.
ஒருவேளை அனைத்து தரப்பினரையும் கவரும் காமர்ஷியல் ஹிட்டாக இருக்கவில்லை என்பதும் வெற்றியின் காரணியை தீர்மானிக்கும் போல.

மறுபக்கம் விஜயின் வேலாயுதத்துக்கு சல்யூட் காமெண்ட் அடித்து தொடக்கி வைத்திருக்கிறார் ஜெயம் ரவி.

தனது டுவிட்டர் பக்கத்தில், 'ஹாட்ஸ் ஆஃப் விஜய் னா.. இதுவரை வெளிவந்ததில் விஜயின் பெஸ்ட் பெர்மோஃபென்ஸ், வேலாயுதம் + விஜய் : வெற்றி தான் என அனல் பறக்க' டுவிட் அடித்திருக்கிறார்.

காமெடியும், கிளைமேக்ஸ் காட்சியும் அசத்தல் என்கிறார்கள் மேலும் சில விஜய் ரசிகர்கள்!

ஆக இம்முறை தீபாவளி, தமிழ் திரை ரசிகர்களுக்கு நல்ல விருந்து தான். ஆனால் இந்த ரேஸில் அதிக வசூலை குவிக்க போவது எது?, தீர்மானிக்க போவது நீங்கள் தான் என்பதால் பதிலையும் உங்களிடமே விட்டு விடுகிறோம். இரு படங்களையும் பார்த்துவிட்டீர்கள் என்றால் உங்கள் கருத்துக்களையும் காமெண்டுக்களில் தெரிவியுங்களேன்!
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger