ரீசார்ஜ் மோசடி வழக்கில் ரிலையன்ஸ் இன்போகாம் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அனில் அம்பானியின் சொத்துகளை பறிமுதல் செய்ய ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தான்பாத் மாஜிஸ்திரேட் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பிரதாப் குமார் வர்மா என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அவருடைய மனைவி, ரிலையன்ஸ் செல்போன் சிம்கார்டு வாங்கி இருந்தார். அதை 'ஈசி ரீசார்ஜ்' செய்தபோது, அந்த குறிப்பிட்ட திட்டத்துக்கென அறிவிக்கப்பட்ட சலுகைகள் கிடைக்கவில்லை.
இதனால், ரிலையன்ஸ் நிறுவனம், தனது வாக்குறுதியை காப்பாற்றவில்லை என்று கூறி, கடந்த 2009-ம் ஆண்டு பிரதாப் குமார் வர்மா மோசடி வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கில், கடந்த மே 21-ந் தேதி, அனில் அம்பானிக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், அவரது சொத்துகளை பறிமுதல் செய்யுமாறு மாஜிஸ்திரேட் பி.கே.பாண்டே நேற்று உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, இந்த உத்தரவுக்கு தடை கோரி வழக்குத் தொடர தயாராகி வருகிறார் அனில் அம்பானி.
Post a Comment