தனுஷ், ரிச்சா நடித்த ' மயக்கம் என்ன ' படத்தினை இயக்கினார் செல்வராகவன். இப்படம் நேற்று (நவம்பர் 25) வெளியானது. இதுவரை வந்த வரவேற்புகளை பார்த்து பெரும் சந்தோஷத்தில் இருக்கிறாராம் செல்வராகவன்.
'மயக்கம் என்ன' படத்தினை தொடர்ந்து ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் 'இரண்டாம் உலகம்' படத்தினை இயக்க இருக்கிறார். காதல், ஆக்ஷன், காமெடி என அனைத்து அம்சங்களும் கலந்த படமாக இருக்குமாம் 'இரண்டாம் உலகம்'. ஆங்கிலத்தில் வெளிவந்த GLADIATOR மற்றும் தெலுங்கில் வரவேற்பை பெற்ற 'மகாதீரா' போன்ற படங்களின் வரிசையில் 'இரண்டாம் உலகம்' இருக்க வேண்டும் என நினைத்து பணியாற்றி வருகிறாராம் செல்வராகவன்.
நாயகன் பாத்திரத்திற்காக ஆர்யா கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறாராம். அனுஷ்கா இதுவரை தமிழில் இந்த மாதிரி ஒரு பாத்திரம் செய்தது இல்லையாம். அந்தளவிற்கு அனுஷ்காவிற்கு முக்கிய வேடம் அளித்து இருக்கிறார் செல்வராகவன்.
'ஆயிரத்தில் ஒருவன்' படம் போல் தாமதம் ஆக கூடாது என்று கருதி இப்போதே 120 பக்கங்கள் அடங்கிய பட ஸ்கிரிப்ட்டை படக்குழுவினர் அனைவருக்கும் அளித்து இருக்கிறார் செல்வராகவன்.
Post a Comment