இருவரது வீட்டில் சில விஷயங்கள் பேச வேண்டியிருப்பதால், திருமணத் தேதியை தைமாதம் அறிவிக்கிறோம் என்று சினேகாவை திருமணம் செய்ய இருக்கும் பிரசன்னா தெரிவித்துள்ளார். அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடிகர் பிரசன்னாவும், நடிகை சினேகாவும் சேர்ந்து நடித்தனர். அப்போதிலிருந்தே இருவரும் நல்ல நண்பர்களாக பழகத்தொடங்கினர். ஆரம்பத்தில் நட்பாக பழகிய இருவரும், பின்னர் காதலிக்க தொடங்கினர். இருவரும் காதலிப்பதாக ஏற்கனவே பலமுறை கிசுகிசு எழுந்தது. ஆனால் இதை இருவரும் மறுத்து வந்தனர்.
இந்நிலையில் இந்த காதலை பிரசன்னாவே உறுதி செய்தார். சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பிரசன்னாவும், நானும் சினேகாவும் காதலிப்பது உண்மை தான் என்றும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் அறிவித்தார். பிரசன்னா இந்த செய்தியை அறிவித்தபோது நடிகை சினேகா, தன் அண்ணனை பார்க்க தோஹா சென்றிருந்தார். சிலதினங்களுக்கு முன்னர் தான், அவர் சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய சினேகாவிடம் இதுகுறித்து கேட்க முற்பட்டபோது அவர் பேச மறுத்துவிட்டார்.
இதனையடுத்து பிரசன்னாவிடம் கேட்டபோது, நான் ஊரில் இல்லாத போது நம்முடைய செய்தி வெளிவந்தது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. வீட்டில் எல்லாம் பேசி ஓ.கே., ஆன பிறகு, ரெண்டு பேரும் சேர்ந்து பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவிக்கலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனா அது முடியல என்று சினேகா, என்னிடம் சொல்லி வருத்தப்பட்டார். நானும், சினேகாவும் வேறு மதத்தை சேர்ந்தவர்கள். அதனால் இருவரது வீட்டிலும், சில விஷயங்கள் பேசி வருகிறார்கள். அதுஎல்லாம் முடிந்த பின்னர் திருமணத் தேதியை அறிவிக்கிறோம். தைமாதத்திற்குள் எல்லாம் பேசி முடிவாகிவிடும். அப்போது நல்ல செய்தியை தெரிவிக்கிறோம் என்றார்.
Post a Comment