News Update :
Home » » அடுத்தவர் மனைவியை அபகரித்தாரா சினேகன்? பரபரக்கும் கோடம்பாக்கம்!!

அடுத்தவர் மனைவியை அபகரித்தாரா சினேகன்? பரபரக்கும் கோடம்பாக்கம்!!

Penulis : karthik on Tuesday, 22 November 2011 | 04:22

 
 
 
பிரபல பாடலாசிரியரும், நடிகருமான சினேகன் மீது என்ஜினீயர் ஒருவர் பரபரப்பான புகார் மனு கொடுத்துள்ளார். அதில், `எனது மனைவியையும், குழந்தையையும் சினேகன் அபகரித்துக் கொண்டார் என்றும், அவர்களை மீட்டுத் தர வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த புகார் கோடம்பாக்கத்தையே பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது..
 
சென்னை மடிப்பாக்கம், சக்தி நகர், எழில் அவென்யூவை சேர்ந்தவர் பிரபாகரன் (34). என்ஜினீயரான இவர், தனியாக கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மனைவி பெயர் ஜமுனா கலாதேவி (27). இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. பிரபாகரன் சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார்.
 
அதில், நான் சொந்தமாக தொழில் செய்து மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறேன். எனது மனைவி நடனக்கலை நிபுணராக உள்ளார். கீழ்கட்டளையிலும், வேளச்சேரியிலும் குடும்ப பெண்களுக்கு நடனக்கலை கற்றுக்கொடுக்கும் பயிற்சி பள்ளியை நடத்தி வந்தார். நாங்கள் இருவரும் காதல் பதிவு திருமணம் செய்து கொண்டோம். பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி எங்களது திருமண வாழ்க்கையை அமைத்துக் கொண்டோம். எங்களின் இனிதான இல்லற வாழ்க்கையின் பயனாக சஞ்சனா ஸ்ரீ என்ற 5 வயது பெண் குழந்தை இருக்கிறாள். அந்த குழந்தையை யு.கே.ஜி. படிக்க வைத்துள்ளேன். பாம்பு புற்றுக்குள் கருநாகம் புகுந்ததுபோல, நடிகரும், பாடல் ஆசிரியருமான சினேகன் எங்கள் குடும்ப நண்பரானது, எங்கள் இல்லற வாழ்க்கையையே இப்போது புரட்டி போட்டுவிட்டது. எனது மனைவியின் நடன பயிற்சி பள்ளியை சினேகன் திறந்து வைத்தார். அதுமுதல் எங்கள் குடும்ப நண்பரானார். எனது மனைவியை சினிமாவில் நடன இயக்குனராக உருவாக்குவதாக சினேகன் ஆசைவார்த்தை காட்டினார். எனது மனைவி ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டார். அது நடக்கவில்லை. சினேகன் மூலம் நடன இயக்குனர் வாய்ப்பு வந்ததால், எனது மனைவிக்கு அதில் விருப்பம் ஏற்பட்டது. நானும் அதை எதிர்க்கவில்லை. சினேகன் நடித்த `உயர்திரு 420 என்ற படத்தில் எனது மனைவியை நடன இயக்குனராக அறிமுகப்படுத்தினார். நாளடைவில் அவர்களுக்கிடையே உள்ள பழக்கம் தவறாக போனது.
 
எனது மனைவியை நான் கண்டித்தேன். இதனால் எங்களுக்குள் சண்டை ஏற்பட்டது. நாளடைவில் எனது மனைவி, சினேகன் கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டார். கடந்த 2 ஆண்டுகளாக என்னைவிட்டு பிரிந்துவிட்டார். நானும், குழந்தை நலன் கருதி இதுபற்றி புகார் கொடுக்கவில்லை. இப்போது எனது குழந்தையையும், வீட்டில் நான் இல்லாத நேரத்தில் கடத்தி சென்றுவிட்டனர். எவ்வளவோ சமாதானப்படுத்தி பேசியும், எனது மனைவி என்னுடன் வாழ மறுக்கிறார். விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த சூழ்நிலையில், எனது மனைவி திரும்பி வந்தாலும் நான் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன். எனது மனைவியையும், குழந்தையையும் கடத்திச்சென்று எனது குடும்பத்தை சீரழித்த சினேகன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பிரபாகரன் கூறியுள்ளார்.
 
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த பிரபாகரன், `ரூ.20 லட்சம் பணம் தரவேண்டும் என்றும், இல்லாவிட்டால் வரதட்சணை கொடுமை புகார் கொடுப்பேன் என்றும் எனது மனைவி மிரட்டுகிறாள். குழந்தையையும் என்னிடம் தர மறுக்கிறார். என்னையும் தனிப்பட்ட முறையில் மிரட்டுகிறார்கள் என்றார். தவறான உறவுக்கு ஆதாரம் ஏதும் உள்ளதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரபாகரன், `எனது மனைவியும், சினேகனும் ரூ.24 ஆயிரம் பில் வரும் அளவுக்கு செல்போனில் பேசியுள்ளார்கள். அதுதான் ஆதாரம். இருவரும் ஒன்றாக சுற்றுவதை பலரும் பார்த்துள்ளனர். நானே விருகம்பாக்கத்தில் உள்ள சினேகன் வீட்டுக்கு சென்றபோது, அங்கு என் மனைவி, சினேகனுடன் இருப்பதை கண்டுள்ளேன் என்று கூறினார். இந்த புகார் மனு மீது மடிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
 
இந்த புகார் குறித்து கவிஞர் சினேகன் அளித்துள்ள பேட்டியில், பிரபாகரனின் விருப்பத்தோடுதான் அவரது மனைவியை நான் நடித்த படத்தில் நடன இயக்குனராக அறிமுகப்படுத்தினேன். ஒருநாள் தான் அவர் படப்பிடிப்புக்கு வந்தார். அதற்குள் பிரபாகரன் சந்தேகப்பட்டு சண்டை போட ஆரம்பித்துவிட்டார். இதனால் அவரது மனைவியை படப்பிடிப்புக்கு வரவேண்டாம் என்று கூறிவிட்டேன். அவர்களது குடும்ப பிரச்சினையில், என்னை தேவையில்லாமல் இழுத்துள்ளார். என்மீது அவதூறாக புகார் கொடுத்துள்ளார். அவரது மனைவியை நான் கடத்தவில்லை. அவரது தாயார் வீட்டில் இருக்கிறார். குழந்தையை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என்மீது கொடுக்கப்பட்டுள்ள பொய் புகாரை சட்டப்படி சந்திப்பேன். கமிஷனரை சந்தித்து நானும் புகார் மனு கொடுப்பேன், என்று கூறியுள்ளார்.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger