புதிய பட பூஜையை தனது குலதெய்வம் கோயிலில் தொடங்கினார் பாரதிராஜா.
பொம்மலாட்டம் படத்துக்குப்பிறகு பாரதிராஜா இயக்கும் புதிய படம் அன்னக்கொடியும் கொடிவீரனும். இந்த படத்தில் டைரக்டர் அமீர் நாயகனாக நடிக்கிறார். இனியா, கார்த்திகா நாயகிகளாக நடிக்கின்றனர். இந்த படத்தின் பூஜை இன்று காலை தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் இனிதே துவங்கியது. பாரதிராஜாவின் குலதெய்வமான அய்யனார் கோயிலில் கிடா வெட்டி பொங்கல் வைத்து பூஜை தொடங்கப்பட்டது.
இந்த விழா காரணமாக, அல்லிநகரமே விழாக்கோலம் பூண்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment