ரிட்ஸ் இதழின் சார்பில் திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த சாதனையாளர்களுக்கு 'ஐகான் 2011' விருது வழங்கப்பட்டது.
சென்னையிலிருந்து வெளிவரும் ரிட்ஸ் ஆங்கிலப் பத்திரிகை சார்பில் ஆண்டுதோறும் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டுக்கான திரைத்துறை சாதனையாளர்களில், சிறந்த இயக்குநருக்கான விருது மதராசப்பட்டினம், தெய்வத் திருமகள் படங்களின் இயக்குநர் ஏஎல் விஜய்க்கு வழங்கப்பட்டது. இதனை ரிட்ஸ் சார்பில் டேவிட் தெய்வ சகாயம் வழங்கினார்.
விருதினைப் பெற்றுக் கொண்ட விஜய் பேசுகையில், "மதராசப் பட்டினம் படத்துக்காக தேசிய விருது கிடைக்கவில்லையே என்று பலரும் என்னிடம் வருத்தப்பட்டனர். எனக்கு அந்த வருத்தமில்லை. இயக்குநர் பாலச்சந்தர் வாயால் சிறந்த படம் என்ற பாராட்டை அந்தப் படம் பெற்றுவிட்டது. அவர் இருக்கும் இந்த மேடையில் நான் கவுரவிக்கப்பட்டிருப்பது எனக்கு கிடைத்த இன்னுமொரு சிறப்பு," என்றார்.
அடுத்து நடிகர் விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான விருதினை இயக்குநர் அமீர் வழங்கினார்.
'எவர்கீன் ஐகான்' விருது இயக்குநர் கே பாலச்சந்தருக்கு வழங்கப்பட்டது. அவரிடம் உதவி இயக்குநர்களாக இருந்து பின்னர் இயக்குநர்களான வசந்த், சரண், தாமிரா, நடிகை சுஹாசினி ஆகியோர் இந்த விருதினை அவருக்கு வழங்கினர்.
விழாவுக்கு வந்த விருந்தினர்களை மக்கள் தொடர்பாளர் நிகில் வரவேற்றார்.
Post a Comment