News Update :
Powered by Blogger.

கேரளா ரயிலில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு தரும் பரிசோதகர்கள்

Penulis : Tamil on Friday, 15 March 2013 | 09:23

Friday, 15 March 2013

ரயிலில் பயணம் செய்த பெண் பயணியிடம் டிக்கெட் பரிசோதகர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லம் பகுதியை சேர்ந்தவர் ஜெயகீதா. கொல்லத்திலிருந்து 50 கிமீ தொலைவில் உள்ள அரசு அலுவலகத்தில் எழுத்தராக அவர் பணிபுரிந்து
வருகிறார். இவர் கவிஞரும் கூட.
கொல்லம்-சென்னை ரயிலில் பணிக்கு செல்வது வழக்கம். ரயிலில் பணிக்கு செல்லும் போது டிக்கெட் பரிசோதகர்கள் ஜாபர், பிரவீன் ஆகிய 2
பேரும் வழக்கமாக பயணிக்கும் பெண்களிடம் பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கின்றனர்.
இந்த தொல்லையை ஜெயகீதாவும் நாள்தோறும் எதிர்கொண்டிருக்கிறார். பரிசோதகர்களின் அத்துமீறல் அதிகரித்த நிலையில் ரயில்வே மேலாளர்
மஜீத்திடம் அவர் புகார் கொடுத்துள்ளார்.
சர்ச்சைக்குரிய பரிசோதகர்கள் இருவரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Tags: பெண் பயணிகளை பாலியல் தொந்தரவு செய்த டிக்கெட் பரிசோதகர்கள்!

comments | | Read More...

இளசுகளை குறிவைக்கும் எஸ்.எம்.எஸ்

Penulis : Tamil on Tuesday, 12 March 2013 | 18:28

Tuesday, 12 March 2013

அந்த நகரை சேர்ந்த அரசு அதிகாரியின் மகன் ஒரு சாப்ட்வேர் பொறியாளர். மொபைல் போனில் எஸ்.எம்.எஸ்., அனுப்பி, ஒரு பெண்ணிடம் நட்பு வயப்பட்டார்.
கொடைக்கானலில் சந்திக்க விரும்புவதாக அப்பெண்ணிடமிருந்து வந்த எஸ்.எம்.எஸ்.,ஐ நம்பி சென்றார். அவரை அழைத்தது பணம் பறிப்புக் கும்பல் என அங்கு சென்ற போதுதான் தெரிந்தது. பின் அக்கும்பலால் அவர் கொலை செய்யப்பட்டார்.
மதுரை வாலிபர் செந்தில்: கிருஷ்ணன் மொபைல் போனில் உங்களுக்கு ஏழரை லட்சம் பவுன்ட் (இந்திய மதிப்பு ரூ.5.50 கோடி) பரிசு தொகை விழுந்திருப்பதாக எஸ்.எம்.எஸ்., தகவல் வந்தது. பரிசுதொகை வழங்க ரூ.ஐந்தரை லட்சம் பண பரிவர்த்தனை செலவுக்கு கொடுக்கும்படியும் தெரிவிக்கப்பட்டது.
அவரும் அத்தொகையை இரு தவணைகளாக அனுப்பி வைத்தார். ஆனால் பரிசு தொகை கிடைக்கவில்லை. பின்னர் ஏமாற்றப்பட்டது தெரிந்து புகார் செய்தார்.
மொபைல் போன், இன்டர்நெட், கிரெடிட், ஏ.டி.எம்., கார்டுகள் மூலம் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப நவீன மோசடிகள் ஒவ்வொரு நாளும் அரங்கேறி வருகின்றன. அறுபது சதவீத இளைஞர்கள் மொபைல் போன்களில், ஆபாச படங்களை டவுன் லோடு செய்கின்றனர் என ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

comments | | Read More...

மாணிகளிடம் சில்மிஷம் செய்யும் ஆசிரியர்

Penulis : Tamil on Saturday, 9 March 2013 | 23:01

Saturday, 9 March 2013

தமிழகத்தின் மதுரை அருகே, குலமங்கலத்திலுள்ள அரச மேல்நிலைப்பள்ளியில் சில மாணவிகளிடம் ஒரு சில ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக புகார் எழுந்தது.
இதுபற்றி பாதிப்புக்குள்ளான மாணவிகளின் பெற்றோர்கள் கூடல் புதூர் பொலிசில் புகார் தெரிவித்தனர்.
இந்த புகாரில் பள்ளியில் பணியாற்றி வரும் சில ஆசிரியர்கள் மாணவிகளை தனியாக அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொந்தரபு கொடுப்பதாகவும், செல்போனில் ஆபாசமாக படம் எடுத்ததாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.
இதை தொடர்ந்து பொலிசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதில் ஆங்கில பாட ஆசிரியர் டெரன்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாட ஆசிரியர் விஜயகுமார் ஆகிய 2 பேர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
பாதிப்புக்குள்ளான மாணவிகளின் பெற்றோர்கள் அப்பகுதியில் உள்ள இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் பொன்னுத்தாயிடம் தெரிவித்தனர்.
மாணவிகளின் பெற்றோர்கள் சார்பில் பொன்னுத்தாயி பொலிசில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: மாணவிகளிடம் சில்மிசம் செய்த ஆசிரியர்கள்!

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger