News Update :
Powered by Blogger.

'கல்யாணத்தை' பெரும் தொகைக்கு விற்ற சினேகா - பிரசன்னா ஜோடி!

Penulis : karthik on Wednesday, 9 May 2012 | 09:40

Wednesday, 9 May 2012




கோடம்பாக்க நட்சத்திரங்களுக்கு புதிதாக ஒரு வருவாய் வழியைக் காட்டியிருக்கிறார்கள், நாளை மறுநாள் தம்பதியராகப் போகும் சினேகாவும் பிரசன்னாவும்.

தங்களின் திருமண நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமையையை விஜய் டிவிக்கு நல்ல விலைக்கு விற்றிருக்கிறார்கள் இந்த இருவரும்.

பொதுவாக முன்பெல்லாம் இந்த மாதிரி நிகழ்ச்சியின் வீடியோவை இலவசமாகத்தான் கொடுத்து வந்தார்கள் டிவிக்களுக்கு.

ஆனால் இந்த நிகழ்ச்சிக்கும் ஸ்பான்சர்கள் பிடித்து டிவி நிறுவனங்கள் கல்லா கட்டுவதைப் பார்த்ததால், 'நாம லட்சக்கணக்கில் செலவு செய்து நடத்தும் திருமண நிகழ்ச்சியை வைத்து இவர்கள் சம்பாதிக்கும்போது, அதில் கணிசமான பங்கை நமக்குக் கொடுத்தால் என்ன?' என்ற எண்ணத்தோடு சினேகாவும் பிரசன்னாவும் ரேட் பேச, டிவி நிறுவனமும் பெரும் தொகை தர சம்மதித்துவிட்டதாம்.

மொய் வருதோ இல்லையோ, திருமண வாழ்க்கை ஆரம்பிக்கும் முன்பே பெரும் தொகை கல்யாண வீடியோவுக்கு விலையாகக் கிடைத்திருப்பதில் சினேகாவுக்கும் பிரசன்னாவுக்கும் செம சந்தோஷமாம் .

போகிற போக்கைப் பார்த்தால் வரும் நாட்களில் நடிகர் நடிகைகள் வீட்டு, காது குத்து, பிறந்த நாள் கொண்டாட்டங்கள், வளைகாப்புகள் என எல்லா நிகழ்வுகளின் வீடியோக்களுமே விற்பனைக்கு வரும் போலிருக்கிறது!



comments | | Read More...

நிர்வாண விளம்பரத்தில் ப்ரியா ஆனந்த்?




அசல் தமிழ் நடிகைகளில் ஒருவர் ப்ரியா ஆனந்த். வாமனன், 180 என சில படங்களில் நடித்திருக்கிறார். இயல்பாக நடிக்கும் திறமை மிக்கவர். தெலுங்கிலும் சில படங்கள் கைவசம் உள்ளன.

விஷயம் அவர் திறமை குறித்ததல்ல... சமீபத்தில் அவர் செய்துள்ள ஒரு ஒப்பந்தம் குறித்தது.

விலங்கு வதைக்கு எதிரான PETA அமைப்பின் விளம்பரங்களில் விரைவில் தோன்றப் போகிறார் ப்ரியா ஆனந்த்.

இந்த விளம்பரங்கள் சர்வதேச அளவில் மிகப் புகழ் பெற்றவை. பல பிரபலங்கள் உடம்பில் ஆடையணியாமல், விலங்குகளை வதைக்காதீர்கள் என்ற விளம்பர பட்டையை மட்டும் அணிந்தபடி போஸ் கொடு� �்பார்கள்.

அப்படீன்னா ப்ரியா ஆனந்தும் இப்படித்தான் போஸ் கொடுக்கப் போகிறாரா?

ஏற்கெனவே இவரைப் பற்றி ஒரு வதந்தி உண்டு. அந்த மாதிரி வீடியோ ஒன்றில் அச்சு அசலாக இவரின் உருவத்தையொத்த ஒரு பெண் இருக்கும் காட்சிகள் கொஞ்ச காலம் இணையத்தில் உலாவந்ததும், ந� �ன் அவள் இல்லை என ப்ரியா மறுத்ததும் நினைவிக்கலாம்!



comments | | Read More...

100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியா: பொக்கிஷமாக கிடைத்த 178 படங்கள்!



 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்து இந்தியா எப்படி இருந்திருக்கும்? உங்களிடம் திடீரென 200 கறுப்பு-வெள்ளைக் கால புகைப்பட ங்களைக் கொடுத்தால்....எப்படி துள்ளுவீர்கள்?

இந்த மகிழ்ச்சிதான் பழமை விரும்பிகளுக்கும் வரலாற்று ஆர்வர்களுக்கும் இப்போது! ஸ்காட்லாந்தின் எடின்பரோ நகரில் உள்ள ராயல் கமிஷன் அலுவலகத்தில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த ஒரு ஷூ பெட்டியை எதேச்சையாக திறந்திருக்கிறார்கள்..

அதில் கட்டுக்கட்டாக கிளாஸ் பிளேட் நெகட்டிவ்கள்.. பிரிண்ட் போட்டுப் பார்த்தால் அந்தக் காலத்து இந்தியா...

பெரும்பகுதி புகைப்படங்கள் கொல்கத்தா நகரில் எடுக்கப்பட்டவை.. சென்னை புகைப்படங்களும் கூட இதில் அடக்கம்! அனேகமாக இந்த புகைப்படங்கள் 1912-ம் ஆண்டு எடுக்கப்பட்டவை என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் இங்கிலாந்து அரசர் ஐந்தாம் ஜார்ஜ், ராணி மேரி ஆகியோர் கொல்கத்தா வந்தபோது எடுக்கப்பட்ட படங்களும் இருக்கின்றன. அவ� �்கள் கொல்கத்தாவுக்கு வந்தது 1912தான்!

எடின்பரோ நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் தற்போது இந்த அரிய புகைப்படங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.











































comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger