News Update :
Powered by Blogger.

பெனாசிர் கொலை வழக்கு:முஷாரப்பை ஒப்படைக்க முடியாது என இங்கிலாந்து அறிவிப்பு

Penulis : karthik on Wednesday, 25 April 2012 | 21:44

Wednesday, 25 April 2012




பாகிஸ்தானின் முன்னாள் � �ிரதமர் பெனாசிர் பூட்டோ தேர்தல் பிரச்சாரத்தின் போது சுட்டுக்கொல்லப்பட்டார். சரியான பாதுகாப்பு வழங்கப்படாததுதான் அவர் கொலைக்கு காரணம் எனக் கூறி, அப்போதைய அதிபரான முஷாரப் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் முஷாரப் உச்ச நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கபட்டார்.
 
முஷாரப் மீது இரண்டாவது முறையாக எப்.ஐ.ஆர். பதிவு செய� �யப்பட்டது. இதனை முஷாரப்புக்கு தெரியப்படுத்துவதற்காக, அவர் வீட்டில் எப்.ஐ.ஆர். நோட்டீஸ் ஒட்ட பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. முஷாரப் தற்போது லண்டன் மற்றும் துபாயில் வசித்து வருகிறார்.
 
இந்த வழக்கில் ஏற்கனவே, கடந்த மாதம் வழங்கப்பட்ட முதல் நோட்டீசுக்கு, முஷாரப் தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை, அதனால் 2-வது நோட்டீ� ��் அவரது வீட்டிலேயே ஒட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அவர் தேடப்பட்டு வருவதால், அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு சர்வதேச போலீஸ் மூலமாக இங்கிலாந்து அரசுக்கு பாகிஸ்தான் அரசு கடிதம் அனுப்பி இருந்தது.
 
ஆனால், இந்த கோரிக்கையை இங்கிலாந்து அரசு நிராகரித்துள்ளது. மரண தண்டனை அமலில் உள்ள நாடுகளிடம் எந்த தனிநபரையும் ஒப்படைக்க மாட்டோம் என்ற ு இங்கிலாந்து திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.



comments | | Read More...

குரு பெயர்ச்சி 2012 – மேட ராசிப் பலன்



Ariesவரும் 17.5.2012 அன்று குரு மேஷம் ராசியில் இருந்து ரிசபம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்…இதனால் 12 ராசியினருக்கும் என்ன மாதிரியான பலன்களை குரு தருவார் என்பதை பார்ப்போம்…!!
அசுவினி,பரணி,கார்� ��்திகை 1 ஆம் பாதம்..
வைகாசி மாதம் நடக்கவிருக்கும் குரு பெயர்ச்சி யால் அதிக நன்மைகள் மேஷம் ராசியினர் பெறுவார்கள்…ராசிக்கு,இரண்டாம் இடமாகிய தனஸ்தானத்திற்கு மாறும் குருவால்,தனலாபம் உண்டாகும்..பண வரவு தாராளமாக இருக்கும் நீண்ட நாள் எதிர்பார்த்த நல்லது ஒன்றும் நடக்கும்..வீட்டுஇல் சுபகாரியங்கள் நடைபெரும்…
அலுவலகத்தில் நெருக்கடி கொடுத்து வந்த பிரச்சினைகள் � ��ீரும்..
உங்கள் ராசிக்கு 6,8,10 ஆம் இடங்களை குரு பார்ப்பதால் பண நெருக்கடிகள் தீரும்,,நஷ்டம்,காரிய தடை என சங்கடத்தில் இருந்து வந்த நீங்கள் அந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள்..இதுவரை மந்தமாக இருந்து வந்த தொழில் இனி சுறு சுறுப்படையும்..
பதவி உயர்வு கிடைக்கும்…குடும்ப பிரச்சினைகள் தீரும்.மருத்துவ செலவுகள்,கடன் பிரச்சினை தீரும்…திருமணம் ஆகாதவர்களுக்கு திரும� �ம் கைகூடச் செய்யும், குருபலம் வந்துவிட்டது..உங்கள் ராசிக்கு வசியமான நட்பான ராசியினரை திருமணம் செய்துகொள்ளுங்கள்..உங்கள் பிறன்ப்த தேதிக்கு நியூமராலஜி படி அமையும் திருமண பொருத்தம் பார்த்து திருமணம் செய்யுங்கள்…பெண்களுக்கு நிறைய நகைகள் சேரும்…வாக்கு ஸ்தானத்தில் குரு இருப்பதால் உங்கள் பேச்சில் இனிமை கூடும்..உங்கள் திறமையால் சாதூர்யத்தால் நிறைய சம்பாதிப்பீர்க� �்..மகான்களின் ஆசி கிடைக்கும்…இதுவரை நிலவிய இறுக்கம் தளர்ந்து உங்கள் வாழ்வில் புதிய மறுமலர்ச்சி உண்டாகும்!!!
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆற்றின் ஓரத்தில் உள்ள சிவன் ஆலயம் சென்று உங்கள் நட்சத்திரம் வரும் நாளில் சிவனுக்கு 5 விதமான அபிஷேகம் செய்தால் சொந்த வீடு அமையும்..எவ்வளவு நாள் தடையான கல்யாண தோசமும் நீங்கும்.தொழில் அமையும்…கோபம்,பிடிவ்பாதத்தை விடுங� �கள்.உறவினர் நண்பர்களிடம் அன்பாக பழகுங்கள்…
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர் பாலினரிடம் கவனமாக பழகுங்கள்..அதாவது ஆன்களாக இருப்பின் பெண்கள் விசயத்தில் எச்சரிக்கை தேவை..எதையும் உடனே செய்து முடிக்கும் அவசரம் உங்களின் கூட பிறந்தது..பொறுமையும்,விடா முயற்சியும் வெற்றியை தரும்…அம்பாள் சன்னதியில் 27 நெய் தீபம் ஏற்றி பரணி நட்சத்திரம் வரும் நாளில் வழிபடவும்…
� ��ிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முருகன் அருள் பெற்றவர்கள்….பலருக்கும் நன்மை செய்யக்கூடியவர்கள்…27 அல்லது 108 பேர்க்கு முருகன் சன்னதியில் அன்னதானம் செய்தால் உங்கள் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும்..மலைமேல் இருக்கும் வெற்றிவேலனை வழிபடுங்கள்..பழனி,திருத்தணி,மருதமலை,திருப்பரங்குன்றம் போன்ற முருகன் ஆலயங்களில் ஒன்றில் வழிபடலாம்…சனி பெயர்ச்சியும் சாதகமாக இருப்பதால்; பிரச்சினை இல்லை..


http://thevadiyal.blogspot.in




comments | | Read More...

பதவிக்கு பின் முதல் சினிமா நிகழ்ச்சி: ஜெயலலிதா!



jjபிலிம்சேம்பர் அமைப்புக்கு அண்ணா சாலையில் சினிமா நூற்றாண்டு மாளிகை என்ற புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. தலைமை செயல� �த்தில் இருந்து முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்து புதிதாக கட்டப்பட உள்ள இன்னொரு மாளிகைக்கு அடிக்கல்லும் நாட்டினார்.
முன்னதாக ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் சி.கல்யாண், செயலாளர்கள் ரவிகொட்டாரக்கரா, எல். சுரேஷ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஜெயலலிதா, "தென்னிந்திய திரைப்� ��ட வர்த்தக சபையால் கட்டப்பட்டுள்ள சினிமா நூற்றாண்டு மாளிகையை, இந்திய திரைப்பட நூற்றாண்டு விழா தொடங்கும் வேளையில் திறந்து வைப்பதிலும், மற்றொரு சினிமா நூற்றாண்டு மாளிகைக்கு அடிக்கல் நாட்டுவதிலும் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
நம்மை எல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் அண்ணாவால் இந்த வர்த்தக சபையின் சொந்தக் கட்டடம் 15.6.1968 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதயதெய்வம் புரட்ச� �த் தலைவர் எம்.ஜி.ஆர்., இந்த வர்த்தக சபையின் திரையரங்குகளில் திரையிடப்பட்ட திரைப்படங்களை பார்த்து, அங்கே நடைபெற்ற விழாக்களில் பல்வேறு காலக்கட்டங்களில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
நானும் இச்சபையில் நடைபெற்ற விழாக்களில் பங்கேற்று இருக்கின்றேன். குறிப்பாக, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் பொன் விழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட நிகழ்வுகளை நான் இன்று ம் நினைத்து பெருமை கொள்கின்றேன்.
இந்த சபை திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கும் மற்றும் இத்துறையைச் சார்ந்த அனைத்து பிரிவினரின் நலனுக்காகவும் பாடுபட்டு வரும் ஒரு சிறந்த அமைப்பாகும். இந்த தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை பல நூற்றாண்டுகளை கடந்து திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இங்கே எனக்கு முன்னால் பேசிய அன ்பர், இன்றைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட புதிய நூற்றாண்டு விழா மாளிகை கட்டப்பட்ட பின்னர், அதையும் நானே திறந்து வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தப் புதிய மாளிகை கட்டி முடிக்கப்பட்டதும், நானே நேரில் வந்து திறந்து வைக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய தினம் வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்தக் கட்டடத்தை திறந்து வைத்துள்ளேன். புதிய கட்டடத்தை திறந் து வைக்க நானே நேரில் வருகிறேன் என்பதை தெரிவித்து, உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு விடைபெறுகிறேன்," என்றார்.
புதிய கட்டிடத்தை ஜெயலலிதா திறந்து வைத்தபோது கட்டிட வளாகத்தில் திரையுலகினர் ஏராளமானோர் திரண்டு நின்று திரையில் பார்த்து கைதட்டினர்.
தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், அட்ஹாக் கமிட்டி தலைவர் இப்ராகிம் ராவுத்தர், ந ிர்வாகிகள் கலைப்புலி தாணு, பிஎல் தேனப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


http://thevadiyal.blogspot.in




comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger