News Update :
Powered by Blogger.

பில்லா 2 வெளியீட்டு உரிமையை வாங்கினார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்!

Penulis : karthik on Sunday, 22 April 2012 | 23:07

Sunday, 22 April 2012




அஜீத் நடித்த பில்லா 2 படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெரும் விலைக்கு வாங்கினார் ஆஸ்கர் ரவிச்சந்த ிரன்.

படத்தின் தயாரிப்பாளர் சுனீர் கேடர்பால் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். கேரளா தவிர்த்து மற்ற அனைத்துப் பகுதி வெளியீட்டு உரிமைகளும் விற்கப்பட்டு விட்டன என்றார் சுனீர்.

நமக்குக் கிடைத்த தகவல்படி, தமிழக உரிமைக்கு மட்டும் ரூ 24.11 கோடியும், புதுவைக்கு ரூ 2 கோடியும் சேர்த்து, ரூ 26.11 கோடிக்கு ஆஸ்கர் ரவிச்சந்திரன் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

உலக உரிமை, தொலைக்காட்சி உரிமை மற்றும் பிற மாநில உரிமைகள் அனைத்தும் சேர்த்து பெரும் தொகையை இந்தப் படம் தயாரிப்பாளருக்கு பெற்றுத் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வரும் மே மாதத்திலிருந்து படத்துக்கான விளம்பர வேலைகளைத் தொடங்குவதாக படத்தைத் தயாரிக்கும் இன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.




comments | | Read More...

அழகிரி ஆதரவாளர்கள் நீக்கம் தொடங்கியது... அவைத் தலைவருக்கு முதல் 'ஆப்பு'!




மதுரையில் மு.க.ஸ்டாலின் வருகையின்போது பங்கேற்காத மு.க.அழகிரி ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை தொடங்கியுள்ளது. முதல் நபராக, மதுரை மாநகர் மாவட்ட திமுக அவைத் தலைவர் இசக்கிமுத்துவை நீக்கியுள்ளனர்.

மனப்பால் குடிக்கும் மதோன்மத்தர்கள்

இதுதொடர்பாக தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

மதுரை மாநகர் மாவட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகளை தேர்வு செய்ய தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை தலைமைக்கழகம் அனுப்பி வைத்தபோதும், அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஏற்� �னவே தலைமைக் கழகத்தின் அறிவிப்பின்படி நடைபெறவிருந்த மதுரை பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டபோதும், மதுரை மாநகர கழக நிர்வாகிகள் சிலர் அவற்றிலே கலந்துகொள்ளவில்லை என்பதை பத்திரிகைகளில் வெளியிட்டிருந்தனர்.

அதைப்பற்றி விவரம் கேட்டு அந்த நிர்வாகிகளுக்கு தலைமைக் கழகத்தின் சார்பில், தலைமைக் கழக அமைப்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் மூலம் கடிதம் அனுப்பப்பட்டது. இதற்குள்ளாக த� ��.மு.கழகத்தை ஏதேதோ காரணங்கள் சொல்லி அழித்துவிடலாம் என்று மனப்பால் குடிக்கின்ற சில மதோன்மத்தர்களும், அவர்களுக்குத் துணையாக வெளியிடப்படுகின்ற ஏடுகளும் கற்பனைச் செய்திகளை வெளியிடுவதன் மூலம் தி.மு.கழகத்தில் பெரும் குழப்பம் இருப்பதை போல பாவனை செய்திருப்பதைக் கண்டு இந்த அறிக்� ��ை வெளியிடப்படுகிறது.

தலைமைக் கழகத்தின் சார்பில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் இளைஞர் அணி பொறுப்பாளர்கள் தேர்வுக்காக மதுரை சென்றபோதும், அங்கு தலைமைக்கழகம் அறிவித்த பொதுக் கூட்டத்தில் கல ந்து கொண்ட போதும், மதுரை மாநகரக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளாததற்கு என்ன காரணம் என்று விளக்கம் கேட்டு அதற்கான கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அந்தக் கடிதங்களை சிலர் மதிக்கவில்லை என்பதுடன் ஓரிருவர் "எங்களை விவரம் கேட்கவோ விளக்கம் கேட்கவோ தலைமைக்கழகத்தின் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவனுக்கு சட்டப்படி உரிமை இல்லை'' என்பதைப் போன்று தெரிவித்து, அதையே தங்களுடைய விளக்கமாக அனுப்பியிருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக மதுரை மாநகர் மாவட்ட அவைத் தலைவர் க.இசக்கிமுத்து எழுதியுள்ள கடிதத்தில் இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கிறார். அவர் தலைமைக் கழகத்தை மதிக்காமல் இவ்வாறு எழுதியிருப்பது கழகத்தின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை மீறிய செயலாகும்.

எனவே மதுரை மாநகர் மாவட்ட அவைத் தலைவர் க.இசக்கிமுத்து கழகத்தின் சாதாரண உறுப்பினர் உள்பட எல்லா பொறுப்புகளில் இருந்தும் விலக்கி வைக்கப்படுவதோடு, அடுத்து புதிய உறுப்பின ர்கள் சேர்க்கும் போதும், அவர் உறுப்பினராகச் சேர்ந்திட தகுதியற்றவர் என்று தலைமைக்கழகம் அறிவிக்கின்றது. அவரை தவிர்த்து மற்றவர்களிடம் கேட்கப்பட்டுள்ள விளக்கங்களுக்கு அவர்கள் அனுப்புகின்ற விளக்கத்தைப் பொறுத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.



comments | | Read More...

எரிமலையாக வெடிக்கும் அழகிரி, ஸ்டாலின் மோதல்-தத்தளிக்கும் கருணாநிதி!




மகன்கள் மு.க.அழகிரி, ம ு.க.ஸ்டாலின் இடையிலான பதவிப் போர் பெரும் உச்சத்தை எட்டியுள்ளது. இவர்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு இரு தலைக் கொள்ளி எறும்பு போல தத்தளித்து வருகிறார் கருணாநிதி.

எத்தனையோ பெரிய பெரிய எதிரிகளை, சவால்களை, சங்கடங்களை, சஞ்சலங்களை, சலசலப்புகளைப் பார்த்தவர் கருணாநிதி. ஆனால் இன்று அவரது பிள்ளைகள் ரூபத்தில் எழுந்து நிற்கும் சவாலை சந்திக்க முடியாமல், முடிவு காண முடியாமல் பெரும் குழப்பத்திலும், கலக்கத்திலும் இருக்கிறார் கருணாநிதி.

தற்போது இந்தப் பிரச்சினை மேலும் ஒரு புதிய மெருகோடு வெடிக்க ஆரம்பித்துள்ளது. மதுரைக்கு வந்த ஸ்டாலினுக்கு உரிய மரியாதையை அழகிரி ஆதரவாளர்கள் கொடுக்கவில்லை என்பதே புதிய சர்ச்சை. இதுதொடர்பாக அழகிரி ஆதரவாளர்களுக்கு தலைமைக் கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற� �கு அழகிரி கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் நேற்று திமுக தலைவர் கருணாநிதி வீட்டில் பெரும் பிரச்சினை வெடித்ததாக கூறப்படுகிறது. அழகிரி விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலினை சமாதானப்படுத்த கருணாநிதி முயன்றபோதுதான் பிரச்சினை பெரிதாகி விட்டதாக செய்திகள் கூறுகின்றன.

இந்த நிலையில் இன்றுகாலை திடீரென மு.க.அழகிரி சென்னைக்குக் கிளம்பி வந்தார். அவர் கருணாநிதியை சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக பேசவுள்ளார்.

2 நாட்கள் சென்னையிலேயே முகாமிட்டிருக்கப் போகும் அவர் இந்த விவகாரத்தில் ஒரு முடிவைத் தெரிந்து கொண்ட பின்னர் டெல்லி புறப்படப் போவதாக கூறப்படுகிறது.

மேலும், தனது மத்திய அமைச்சர் பதவி, தென் மண்டல திமுக அமைப்பாளர் பதவி ஆகியவற்றை � ��ாஜினாமா செய்யப் போவதாக அவர் ஏற்கனவே கருணாநிதியிடம் கூறி விட்டதாகவும் தெரிகிறது. இதனால் அழகிரியை எப்படி கருணாநிதி சமாதானப்படுத்தி அமைதிப்படுத்துவார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருணாநிதி வீட்டுக்குள் நடந்து வரும் இந்த சண்டையால், திமுகவினர் அனைவரும் பெரும் அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் உள்ளனர். எதிரிகளுடன்தான் நாம் இத்தனை நாளும் மோதி வந்தோம். ஆனால் இன்று நமக்குள்ளேயே மோதிக் கொண்டிருக்கிறோமே என்று அவர்கள் புலம்புகின்றனர்.

கட்சி நலனை மட்டும் கருத்தில் கொண்டு, கருணாநிதி மிகவும் துணிச்சலோடு, அதிரடியா� �� சில நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்சினைக்கு முடிவு வரும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger