News Update :
Powered by Blogger.

வங்கி கொள்ளையன் பற்றி போலீசார் வெளியிட்ட பரபரப்பான வீடியோ காட்சி

Penulis : karthik on Wednesday, 22 February 2012 | 03:49

Wednesday, 22 February 2012

 
 
பெருங்குடி மற்றும் கீழ்க்கட்டளை வங்கி கொள்ளை தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சந்தேகத்துக்கு இடமான வங்கி கொள்ளையன் பற்றி 1 நிமிடம் ஓடக்கூடிய பரபரப்பான வீடியோவை வெளியிட்டார்.
 
அந்த வீடியோவில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் மீசை மற்றும் குறுந்தாடியுடன் காட்சி அளிக்கிறார். இளம் சிவப்பு, கறுப்பு வெள்ளை கட்டம் போட்ட முழுக்கை சட்டை அணிந்துள்ள அவர் ஜீன்ஸ் பேண்டு போட்டுள்ளார். அவரது கையில் பேனா போன்ற தோற்றத்தில் ஒரு பொருளும் உள்ளது. வங்கியினுள் அங்கும், இங்கும் சென்றவாறு நாலா புறமும் அவர் நோட்டமிடு வது தெளிவாக தெரிகிறது.
 
தென்சென்னை பகுதியில் உள்ள வங்கி கேமிரா ஒன்றில் இருந்து இந்த காட்சியை போலீசார் பதிவு செய்து உள்ளனர். இந்த வீடியோ காட்சிகளை யும், கொள்ளையனின் போட் டோக்களையும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி களுக்கு போலீஸ் கமிஷனர் திரிபாதி வழங்கினார். பின்னர் அவர் நிருபர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
சென்னையில் மொத்தம் 1,300 வங்கிகள் உள்ளன. இவற்றில் சுமார் 400 வங்கிகளில் தான் காமிரா பொருத்தப்படாமல் உள் ளது. பெருங்குடி வங்கி கொள்ளை சம்பவத்துக்கு பிறகு சென்னையில் உள்ள வங்கிகளில் கேமிராக்களை ஆய்வு செய்தோம். அப்போது வீடியோவில் காணப்படும் வாலிபர் பல்வேறு வங்கிகளில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றி திரிந்தது தெரிய வந்தது.
 
இதையடுத்து அந்த வாலிபரின் போட்டோவை பிரிண்ட் எடுத்து பெருங்குடி மற்றும் கீழ்க்கட்டளை வங்கி ஊழியர்களிடம் காட்டினோம். அவர்கள் கொள்ளையர்களில் ஒருவன் இதுபோன்ற தோற்றத்தில் இருந்ததாக தெரிவித்தார் கள். இதனால் இந்த வாலிபர் மீது வலுவான சந்தேகம் ஏற்பட்டது.
 
இந்த வாலிபர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர் என்பது பற்றிய எந்த விவரங்களும் தெரியவில்லை. இந்த போட்டோக்களை சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து மாவட்டங் களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். வெளி மாநிலங்களுக்கும் இந்த போட்டோக்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்த வாலிபர் பற்றி தகவல் தெரிந்த பொது மக்கள் நாங்கள் அறிவித்த கட்டண மில்லா 24 மணி நேர தொலைபேசி எண்களில் தகவல்களை தெரிவிக்கலாம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
பேட்டியின் போது, கூடுதல் கமிஷனர் தாமரைக் கண்ணன், இணை கமிஷனர்கள் சண்முக ராஜேஸ்வரன், சேஷசாயி, நல்லசிவம் (உளவுப்பிரிவு), செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி மோகன்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.



comments | | Read More...

Super Baby World Record !!!

 

HAVE A LOOK!!!!
Age: 11 Months
Weight: 52..5kg
Per Day Diet: 1 kg Rice and 5 liters Milk, 2kg Beef

Birth Place:
India-Rajasthan

Super Baby World Record: Age 11 months, Weight 52.5 kgs

.

comments | | Read More...

சமந்தாவை காதல் தொல்லை செய்யும் சந்தானம்…!

 

நடிகை சமந்தாவுக்கு, காமெடி நடிகர் சந்தானம் காதல் தொ‌ல்லை கொடுத்து இம்சை பண்ணுகிறாராம்.இது நிஜத்தில் அல்ல, சினிமாவில் தான். தெலுங்கில் மஹதீரா எனும் மாபெரும் வெற்றி படத்தை இயக்கிய ராஜ மெளலி,

அடுத்து நான் ஈ என்ற படத்தை தமிழ்மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழியிலும் இயக்கி வருகிறார். இதில் தெலுங்கு நடிகர் நானி, சமந்தா, சந்தானம் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

படம்குறித்து டைரக்டர் ராஜ மெளலி கூறுகையில், படத்தின் கதைப்படி ஹீரோயின் சமந்தா, ஏழ்மையான ஹீரோ நானியை லவ் பண்ணுகிறார். அதேப்போல் வில்லன் சுதீப்பும் சமந்தாவை லவ் பண்ண, சமந்தா அவரது காதலை ஏற்க மறுக்கிறார். இதனால் ஆத்திமுற்ற வில்லன் சுதீப், ஹீரோ நானியை கொன்று விடுகிறார். பின்னர் ஹீரோ நானி மறுபிறவியில் ஈ -ஆக பிறவியெடுத்து எதிரியை எப்படி அழிக்கிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறேன். இதில் விஷேசம் என்னவென்றால் தமிழ் சினிமாவில் ஈ-யை வைத்து படம் வருவது இதுதான் முதல்முறை. அதுமட்டுமல்ல இந்தபடத்தில் சந்தானத்தை லவ் பண்ணும் கேரக்டரில் சமந்தா நடிக்கிறார். நானி கொல்லப்பட்டதும், மறுபிறவியில் சந்தானத்தை, ஹீரோ நானியாக நினைத்து லவ் பண்ணுகிறார் சமந்தா. அதேபோல் சந்தானமும், சமந்தாவை துரத்தி, துரத்தி லவ் பண்ணுகிறார். சந்தானம் இதுவரை நடித்த படங்களிலேயே, இந்தபடத்தில் தான் அவருக்கு டயலாக் ரொம்ப கம்மி, அதேசமயம் அவருடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் விதமாக இப்படம் அமையும் என்றார்.

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger