News Update :
Powered by Blogger.

குமுளியில்திரண்டு 50,000 தமிழர்கள் போராட்டம்- ஓ.பன்னீர்செல்வம் கார் மீது தாக்குதல்

Penulis : karthik on Tuesday, 13 December 2011 | 04:45

Tuesday, 13 December 2011

 
 
வரலாறு காணாத வகையில் கேரளாவுக்கு எதிராக கடும் கொந்தளிப்பில் உள்ள தேனி மாவட்ட மக்கள் நேற்று யாரும் எதிர்பாராத வகையில் கிட்டத்தட்ட 50,000 பேர் பேரணியாக கேரளாவை நோக்கி படையெடுத்த நிலையில், இன்று மீண்டும் அதே அளவிலான மக்கள் பெரும் பேரணியாக கேரளாவை நோக்கி சென்று குமுளியில், தமிழகப் பகுதியில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. போலீஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
 
இந்த நிலையில், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குமுளிக்கு வந்தபோது அவரது காரை மறித்து கூட்டத்தினர் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீஸார் கல்வீசியவர்களை தடியடி நடத்திக் கலைத்தனர்.
 
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் கேரள அரசின் மீதும், கேரளாவில் தமிழர்களைத் தாக்கியவர்கள் மீதும் மக்கள் வரலாறு காணாத கோபத்திலும், கொந்தளிப்பிலும் உள்ளனர். இந்த கோபமும், கொந்தளிப்பும், தேனி மாவட்டத்தில்தான் அதிகம் உள்ளது.
 
முல்லைப் பெரியாறு பாசன மாவட்டம் என்பதோடு மட்டுமல்லாமல், இத்தனை காலமாக தங்களிடமிருந்து பால், காய்கறி, அரிசி, பருப்பு என அத்தனையையும் பெற்று விட்டு நமது பெண்கள் மீதே கை வைத்து விட்டார்களே என்ற கொந்தளிப்புதான் அது.
 
இதனால்தான் தமிழகத்தின் பிற பகுதிகளை விட தேனி மாவட்ட எல்லைப் பகுதிகளில் கேறரளாவுக்கு எதிராக அறிவிக்கப்படாத பொருளாதாரத் தடையை இப்பகுதி மக்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
 
ஒரு வாரமாக கடும் போராட்டம்
 
குறிப்பாக கம்பம், கூடலூர், உத்தமபாளையம், போடி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் தொடர்ந்து ஒரு வாரமாக கடைகளை அடைத்தும், கேரளாவுக்கு ஒரு பொருளையும் அனுப்பாமலும், வாகனப் போக்குவரத்தை முற்றிலும் தடுத்து வைத்தும் போராடி வருகின்றனர்.
 
இந்த நிலையில் நேற்றுயாரும் எதிர்பாராத வகையில் கிட்டத்தட்ட 50,000 பேர் அலைகடலென திரண்டு கேரளாவை நோக்கி பேரணி நடத்தியதால் கேரளாவிலும் பதட்டம் ஏற்பட்டது. இந்தப் பேரணிக்கு யாரும் ஏற்பாடு செய்யவலில்லை. மக்களே திரண்டு பேரணியாக உருமாறி கேரளாவை நோக்கி படையெடுத்து விட்டனர்.
 
மாவட்ட ஆட்சித் தலைவர் பழனிச்சாமி, தென் மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் ஆகியோர் கடும் சிரமப்பட்டு மக்களைத் தடுக்க முயன்றனர். இருப்பினும் குமுளி வரை மக்கள் முன்னேறிப் போய் விட்டனர். இதனால் பெரும் பதட்டம் ஏற்பட்டு விட்டது. பின்னர் கலெக்டரின் சமாதானப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மக்கள் அவருக்கு்க கட்டுப்பட்டு மீண்டும் திரும்பி வந்தனர்.
 
2வது நாளாக மக்கள் எழுச்சிப் பேரணி
 
இந்த நிலையில், இன்றும் மக்கள் பேரணியாக கிளம்பினர். ராயப்பன்பட்டி, அணைப்பட்டி, கோகிலாபுரம், கே.கே.பட்டி உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த மக்கள் பெரும் ஊர்வலமாக கிளம்பினர்.
 
விவசாயிகள், பொதுமக்கள், தொழிலாளர்கள் என கிட்டத்தட்ட 15,000 பேர் மோட்டார்சைக்கிள், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் கிளம்பியுள்ளதால் பெரும் பதட்டம் காணப்படுகிறது. நூற்றுக்கணக்கானோர் நடந்தே சென்றனர்.
 
அத்தனை பேரும் குமுளியை நோக்கிச் சென்றனர்.ஆனால் அவர்கள் கேரள எல்லைக்குள் நுழையக் கூடாது என்று போலீஸார் தடுத்து நிறுத்தினர்.இதையடுத்து குமுளிக்கு முன்பு உள்ள தமிழக அரசின் போக்குவரத்துக்க கழக டிப்போ முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 
இந்தப் போராட்டத்தால் எல்லைப் பகுதியில் பெரும் பதட்டமான நிலை காணப்பட்டது.
 
ஓ.பன்னீர்செல்வம் கார் மீது தாக்குதல்
 
இந்த நிலையில் போராட்டம் நடத்தியவர்களை சந்தித்து சமரசம் பேசுவதற்காக அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கார் மூலம் குமுளி புறப்பட்டுச் சென்றார். ஆனால் அவரது காரைப் பார்த்த போராட்டக்காரர்கள், இத்தனை நாட்களாக வராமல் இப்போது வருகிறாரா என்று கூறி கார் மீது கல்வீசித் தாக்கினர்.
 
இதையடுத்து கல்வீச்சில் இறங்கியவர்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்து விரட்டினர். பின்னர் பன்னீர்செல்வத்தை பத்திரமாக அங்கிருந்து அழைத்துச் சென்றது போலீஸ்.
 
சுடத் தயார் நிலையில் இருந்த கேரள போலீஸ்
 
முன்னதாக, கேரள எல்லைக்குள் யாரேனும் அத்துமீறி நுழைந்தால் சுடுமாறு இடுக்கி மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து அங்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
 
தமிழக எல்லைப் பகுதியில் குமுளிக்கு முன்பாக கிட்டத்தட்ட 10 ஆயிரம் போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
 
மக்களின் இந்த எழுச்சிமிக்க போராட்டத்தால் தமிழக, கேரள எல்லையில் தொடர்ந்து இன்றும் பெரும் பரபரப்பு நிலவியது.



comments | | Read More...

முல்லை பெரியாறு அணை பிரச்சினை: ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய், உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு

 
 
 
 
 
முல்லை பெரியாறு அணை பிரச்சினை காரணமாக கடந்த ஒரு வாரமாக தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதிகளில் போராட்டம் நடந்து வருகிறது. தேனி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் போடி மெட்டு, கம்பம் மெட்டு, குமுளி வழியாக போக்கு வரத்து முழுமையாக தடை செய்யப்பட்டு உள்ளது.
 
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு தினமும் 50 ஆயிரம் கிலோ காய்கறிகள், 50 லட்சம் லிட்டர் பால் அனுப்பப்பட்டு வந்தது. ஆனால் தற்போது நடந்து வரும் போராட்டம் காரணமாக காய்கறிகள், பால் சப்ளை கடந்த 6 நாட்களாக தடைபட்டு உள்ளது. இதனால் கேரளாவில் காய்கறிகளின் விலை 5 மடங்கு உயர்ந்து உள்ளது. கத்தரிக்காய், தக்காளி, சாம்பார் வெள்ளரி ஆகியவை கிலோ 120 முதல் 150 வரை விற்கப்படுகிறது. 10 ரூபாய்க்கு விற்ற பூசணிக்காய், புடலங்காய் கிலோ 60 முதல் 80 ரூபாய் வரை சில்லறையில் விற்கப்படுகிறது.
 
கேரளா, இடுக்கி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி நடக்கிறது. இதில் குறிப்பிட்ட அளவு எஸ்டேட்கள் தமிழகத்தை சேர்ந்தவர் களிடம் உள்ளன. முல்லை பெரியாறு பிரச்சினையால் தமிழக கூலி தொழிலாளர்கள் யாரும் வேலைக்கு செல்ல வில்லை. இதனால் செடி களில் பழுத்த பழங்கள் அழுகி வீணாவதால் விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. வாகன போக்குவரத்து தடைப்பட்டு உள்ளதால் ஏல மையங்களில் 10 லட்சம் கிலோ ஏலக்காய் விற்பனை யாகாமல் தேங்கி உள்ளது. இதனால் 50 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
 
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து கேரளா வுக்கு அனுப்பப்படும் காய் கறிகளை அனுப்புவதை நிறுத்தி வைக்க தமிழக வியாபாரிகள் முடிவு செய்தனர். இது தொடர்பாக ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் சங்கம் சார்பாக செயற்குழு கூட்டம் கூடியது. கூட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) ஒரு நாள் மட்டும் கடை விடுமுறை விட வேண்டும்.
 
இதனால் கேரளாவிற்கு அனுப்ப கூடிய சுமார் 1000 டன் காய்கறிகளை நிறுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதனால் அன்று ஒருநாள் மட்டும் சுமார் 3 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்படையும் நிலை ஏற்பட்டு உள்ளது



comments | | Read More...

மீண்டும் நடிக்க வருகிறார் ஐஸ்வர்யா ராய்!

 
 
 
 
 
பிரபல இந்திப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் கனவுப் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார். சல்மான் கானுக்கு பதிலாக இப்படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கிறார். உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது. கர்ப்பமாக இருந்ததால் கடந்த ஒரு ஆண்டாக நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார் ஐஸ். குழந்தை பிறந்த பிறகு, தொடர்ந்து அவர் நடிப்பாரா, இல்லையா என்ற சந்தேகம் ரசிகர்களை வாட்டி வதைத்து வந்தது. இந்த சந்தேகத்துக்கு இப்போது விடை கிடைத்துள்ளது. பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் 1999-ல் வெளிவந்த சூப்பர்ஹிட் படம் ஹம் தில் தே சுகே சனம். இதில் சல்மான்கான், ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தனர். இதே ஜோடியை வைத்து தனது கனவு படமான பாஜிராவ் மஸ்தானி என்ற படத்தை இயக்க இருப்பதாக பன்சாலி 2003-ம் ஆண்டு அறிவித்திருந்தார். வெறும் அறிவிப்போடு நின்றிருந்த அந்த பிராஜக்ட்டை மீண்டும் தூசி தட்டி எடுத்திருக்கிறார் பன்சாலி. ஏற்கனவே திட்டமிட்டபடி, ஹீரோயின் ஐஸ்தான். ஹீரோ.. சல்மான் கான் அல்ல. அவருக்கு பதிலாக ஷாருக் கான். ஐஸ்வர்யாவுக்கும், சல்மானுக்கும் ஆகாது என்பதால் இந்த அதிரடி மாற்றம். குழந்தை பெற்ற ஐஸ்வர்யா ராயை சமீபத்தில் சந்தித்து வாழ்த்து சொன்ன பன்சாலி, படம் சம்பந்தமாகவும் அவர் காதில் போட்டு வைத்தார். குழந்தையை கவனிப்பதில் முழு நேரத்தையும் செலவிட்டு வரும் ஐஸ், இடையே கதை பற்றி பேச நேரம் ஒதுக்கினார். இயக்குநர் சொன்ன கதையை ரசித்து கேட்ட அவர், உடனே ஓகே சொல்லிவிட்டார். அடுத்த ஆண்டு ஏப்ரல் வாக்கில் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.

 


comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger