News Update :
Powered by Blogger.

என்னை முதல்வராக்கிப் பாருங்கள்- விஜயகாந்த் அதிரடி பிரசாரம்

Penulis : karthik on Tuesday, 4 October 2011 | 00:22

Tuesday, 4 October 2011

 
 
 
மக்களே, என்னை ஒருமுறை ஆட்சியில் அமர்த்திப் பாருங்கள். எனக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள் என்று தன்னை முதல்வராக்குமாறு மக்களிடம் முதல் முறையாக மறைமுகமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
 
இதுவரை எனது கட்சிக்கு வாய்ப்பளியுங்கள் என்றுதான் விஜயகாந்த் பிரசாரம் செய்து வந்தார். இந்த நிலையில் முதல் முறையாக தன்னை ஒருமுறை ஆட்சியில் அமர்த்திப் பாருங்கள் என்று மறைமுகமாக தன்னை முதல்வராக்குமாறு கோரி பிரசாரம் செய்துள்ளார் விஜயகாந்த்.
 
ராமநாதபுரத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு விஜயகாந்த் பேசுகையில்,
 
உள்ளாட்சித் தேர்தலில் எனது கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். எனக்கு வாய்ப்பு தந்தால் லஞ்சத்தை ஒழிப்பேன். வெற்றிபெற்று வரும் என் கட்சி வேட்பாளர்கள் யாரையும் லஞ்சம் வாங்க விடமாட்டேன். லஞ்சம் வாங்கினால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பேன்.
 
நான் கட்சி ஆரம்பித்த புதிதில் என்னை விலைக்கு வாங்கப் பார்த்தார்கள். லஞ்சம் வாங்கியிருந்தால், குறுகிய காலத்தில் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்திருக்கலாம். ஆனால், மக்களுக்காக குரல் கொடுக்க முடியாமல் போயிருக்கும். நான் போராட்ட குணம் உடையவன். போராடி, போராடித்தான் இதுவரை வெற்றி பெற்று வந்திருக்கிறேன்.
 
ஒரே ஒரு முறை என்னை ஆட்சியில் அமர்த்திப் பாருங்கள். எனக்கு சந்தர்ப்பம் தந்து பாருங்கள். ஆட்சியில் இல்லாமல் இருக்கும்போதே எனது சொந்தப் பணத்தில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை செய்து வருகிறேன்.
 
என் பிறந்த நாளன்று பிறக்கும் குழந்தைகளுக்கு ரூ.10 ஆயிரம் பரிசாகத் தந்து, அக்குழந்தை திருமண வயதை எட்டும்போது பெரிய தொகை கிடைக்கும் வகையில் செய்திருக்கிறேன். இலவசமாக கணினிக் கல்வியை ஏழை மாணவர்களுக்கு வழங்கி வருகிறேன்.
 
வேலை இல்லாமல் இருப்பதால்தான் தீவிரவாதம் உருவாகிறது. எனவே, வேலை இல்லாமல் இருக்கும் அனைவருக்கும் வேலைவாய்ப்பு தர வேண்டும்.
 
நான் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பேன். ரேஷன் பொருள்கள் வீடுதேடி வரும்படி செய்வேன் என்றார் விஜயகாந்த்.
 
இதுவரை இருந்த பிரசாரப் பேச்சு மாறி, என்னை ஒருமுறை ஆட்சியில் அமர்த்திப் பாருங்கள் என்று விஜயகாந்த் பேசியிருப்பது தேமுதிகவினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


comments | | Read More...

நண்பர் வீட்டில் அழகியுடன் உல்லாசம்- அக்கம்பக்கத்தினர் பிடித்து 'சாத்துப்படி'

 
 
 
வெளியூருக்குப் போவதால் வீட்டைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிச் சென்ற நண்பரின் வீட்டுக்கு, விபச்சார அழியை கூட்டிக் கொண்டு உல்லாசமாக இருக்க வந்த வாலிபரை அக்கம் பக்கத்தினர் பிடித்து தர்ம அடி கொடுத்து பின்னர் போலீஸில் ஒப்படைத்தனர்.
 
நெல்லை பாலபாக்கியா நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவரது நண்பரின் வீடு பேட்டை சாஸ்திரி நகரில் உள்ளது. காலாண்டு விடுமுறை என்பதால் சரவணனின் நண்பர் தனது குடும்பத்தோடு வெளியூர் போய் விட்டார். போகும்போது வீட்டைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறி சாவியையும் கொடுத்துச் சென்றார்.
 
இந்த நிலையில் சரவணன் மனதில் குயுக்தியான யோசனை தோன்றியது. விபச்சார அழகியை அழைத்து வந்து நண்பர் வீட்டில் உல்லாசமாக இருக்க முடிவு செய்த அவர் இதற்காக துர்கா என்ற பெண்ணை வரவழைத்தார்.
 
இரவு 11 மணிக்கு மேல் நண்பர் வீட்டுக்கு விபச்சாரப் பெண்ணுடன் வந்தார் சரவணன். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். விரைந்து வந்து இருவரையும் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
 
பின்னர் இருவரையும் போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் இருவரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். சரவணனை நம்பி வீட்டை ஒப்படைத்துச் சென்ற நண்பருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

 


comments | | Read More...

சுவர் ஏறி குதித்து வேட்புமனுவை வாபஸ் பெற முயன்ற தேமுதிக வேட்பாளர்

Penulis : karthik on Monday, 3 October 2011 | 18:53

Monday, 3 October 2011

 
 
உசிலம்பட்டி அருகே கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் மற்றொரு வேட்பாளருக்கு ஆதரவாக வேட்புமனுவை வாபஸ் பெற சென்றபோது, தேமுதிகவினரே அவரை தடுத்து தாக்கி நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.
 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்துள்ள அல்லிக்குண்டம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தேமுதிக சார்பில், போட்டியிடுபவர் கண்ணன். இவர் அதே பகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு தெரிவித்து, வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கு உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குச் சென்றுள்ளார்.
 
 
அப்போது பணம் பெற்றுக்கொண்டு மனுவை திரும்பப் பெற வந்துள்ளதாக கூறி, தேமுதிகவினர் கண்ணனை தடுத்து நிறுத்தினர். இதை மீறி சுவர் ஏறி குதித்து வேட்புமனுவை வாபஸ் பெற முயன்றார் கண்ணன். அப்போது கண்ணனை தேமுதிகவினர் சுற்றி நின்றுக்கொண்டு தாக்கியதால் பரபரப்பு நிலவியது.
 
 
அதையும் மீறி கண்ணன் வேட்பு மனுவை வாபஸ் வாங்குவதாக அதிகாரிகளிடம் சென்று தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கான நேரம் முடிந்துவிட்டதால், இனி வேட்பு மனுவை வாபஸ் பெற முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
 
உள்ளாட்சி தேர்தலில் தேர்வாகும் தேமுதிகவினர் ஊழலில் ஈடுபட்டால் தாமே முன்வந்து நடவடிக்கை எடுக்கப்போவதாக அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் ஊர் ஊராக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் உசிலம்பட்டி தேமுதிக வேட்பாளர் தேர்தலுக்கு முன்பாகவே பணம் பெற்றுக்கொண்டு வேட்பு மனுவை வாபஸ் பெற முயன்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger