News Update :
Powered by Blogger.

ஜெயலலிதா முயற்சியால் பாய்லின் புயலில் சிக்கி தவித்த 18 மீனவர்கள் மீட்பு 18 fishermen recovery jayalalitha from Phailin storm

Penulis : Tamil on Monday, 14 October 2013 | 00:42

Monday, 14 October 2013

ஜெயலலிதா முயற்சியால் பாய்லின் புயலில் சிக்கி தவித்த 18 மீனவர்கள் மீட்பு 18 fishermen recovery jayalalitha from Phailin storm

சென்னை, அக். 14–

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் தூத்தூர், ஏழுதேசம் சின்னத் துறை, இரையுமன்துறை, மேல்பிடாலம் மற்றும் கோடிமுனை பகுதிகளைச் சேர்ந்த 18 தமிழக மீனவர்கள், அவர்களது இரண்டு மீன்பிடி விசைப் படகுகளில் கடந்த 22–09–2013 முதல் ஒடிசா மாநில கடற்பகுதியிலிருந்து ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

வங்கக் கடலில் உருவான பாய்லின் புயல், ஒடிசா மாநிலம் பாரதீப் மற்றும் கோபால் பகுதியில் கரையை கடக்கவிருப்பதை அறிந்த மீனவர்கள் தங்களது இரு படகுகளுடன் 12–10–2013 அன்று கரை திரும்ப முயன்றுள்ளனர்.

மேற்படி கடும் புயலின் காரணமாக கடலின் சீற்றம் மற்றும் கடல் அலை அதிக உயரத்திற்கு எழுந்ததாலும், இவற்றுடன் பெருமழை பெய்ததாலும், மீன்பிடி விசைப் படகுகளில் கரை திரும்புவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டு நடுக்கடலில் தத்தளித்த வண்ணம் இருந்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் இவர்களது படகிலிருந்த எரிபொருள் முழுவதும் தீர்ந்துவிட, தங்களையும் தங்களது படகுகளையும் காப்பாற்றிட கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உறவினர்களுக்கு கைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேற்படி தகவல் முதல்– அமைச்சர் ஜெயலலிதா கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடனே முதல்– அமைச்சர் ஜெயலலிதா துரித நடவடிக்கை மேற்கொண்டு தலைமை செயலர், கால்நடை பராமரிப்பு பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலர் ஆகியோருக்கு இந்திய கடலோர காவற்படை, கப்பற்படை மற்றும் ஒடிசா மாநில உயர் அதிகாரிகளுடன் உடனடியாக தொடர்பு கொண்டு புயலில் சிக்கித் தவிக்கும் 18 மீனவர்களை பத்திரமாக மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் போர் கால அடிப்படையில் மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து தமிழக அரசின் உயர் அதிகாரிகள் சென்னையிலுள்ள இந்திய கடலோர காவற்படை மற்றும் கப்பற்படை ஆகியவற்றின் உயர் அதிகாரிகளுடன் உடனடியாக தொடர்பு கொண்டு நடுக்கடலில் புயலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை உடனடியாக மீட்க அனைத்து நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

மேலும் ஒடிசா மாநில சிறப்பு மீட்பு பணி ஆணையரையும், ஒடிசா மாநில மீன்வளத்துறை உயர் அலுவலர்களையும் தொடர்பு கொண்டு மீனவர்களை உடனடியாக மீட்க கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள கடலோர காவற்படை, கொல்கத்தாவிலுள்ள கடலோர காவற்படையினரை தொடர்பு கொண்டு நடுக்கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை உடனடியாக கண்டுபிடிக்கவும் உடனடியாக மீட்கவும் நடவடிக்கை மேற்கொண்டது.

ஒடிசா மாநிலம் கோபால்பூர் அருகே கரையை கடந்த பாய்லின் புயலின் சீற்றத்தில் மேற்படி மீனவர்களது படகு சேதமுற்று, அப்படகிலிருந்த 18 மீனவர்களும் ஒடிசா மாநிலம் பாரதீப் துறைமுகத்திற்கு அருகிலுள்ள ஜகசன்பூர் மாவட்டத்தின் கடலோர குக்கிராமமான இராமத்துரா எனும் இடத்திற்கு பத்திரமாக வந்து சேர்ந்தனர்.

இக்குக்கிராமமானது புயலின் தாக்கத்தால் தொலை தொடர்பு, போக்குவரத்து மற்றும் மின்சாரம் ஆகியவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்ததால், கரைசேர்ந்த மீனவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி, உணவு மற்றும் குடிநீர் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது.

இவ்விவரம் உடனடியாக ஒடிசா மாநில நிர்வாகத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, மாவட்ட நிர்வாகமும் கடலோர காவற்படையும் இணைந்து மருத்துவ வசதிகளுடனான மீட்புகுழு அக்கிராமத்திற்கு விரைந்து சென்று 18 மீனவர்களுக்கும் அனைத்துவிதமான மருத்துவ உதவிகளை அளித்தது மட்டுமல்லாமல், அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் உடைகளை வழங்கி அவர்களை பத்திரமாக மீட்டு மாவட்டத்தின் தலைமை இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் சீரிய முயற்சியால் தமிழகத்தைச் சேர்ந்த 18 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

...

shared via

comments | | Read More...

சோனியாவும் பிரதமரும் என் அரசியல் குரு: ராகுல் காந்தி Sonia Gandhi and Prime Minister of my political guru Rahul Gandhi

Penulis : Tamil on Thursday, 10 October 2013 | 09:11

Thursday, 10 October 2013

சோனியாவும் பிரதமரும் என் அரசியல் குரு: ராகுல் காந்தி Sonia Gandhi and Prime Minister of my political guru Rahul Gandhi
Tamil NewsToday, 23:35

சண்டிகர், அக். 10-

பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, இன்று பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் நடந்த கூட்டத்தில் பேசியதாவது:-

தண்டனை பெறும் எம்.பி. எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்தற்கு சரியான நேரத்தில்தான் நான் எதிர்ப்பு தெரிவித்தேன். உணமையைப் பேசுவதற்கு நேரம் காலம் எல்லாம் பார்க்க முடியாது.

பெண்களுக்கு அதிகாரம் தருவது நாட்டின் வளர்ச்சிக்கு அவசியமாகும். உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின பங்களிப்பு தேவை.

சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் எனக்கு அரசியல் குருவாக உள்ளனர். நாட்டின் வளர்ச்சிக்கு பிரதமர் மன்மோகன் சிங் பெரும் பங்காற்றியுள்ளார்.

போதைப் பழக்கத்தால் பஞ்சாப் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இருந்து அவர்கள் விடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
...
Show commentsOpen link

comments | | Read More...

புத்தூர் ஆபரேசன்: படுகாயம் அடைந்த ஆய்வாளர் லட்சுமணனுக்கு முதல்வர் ஜெயலலிதா நேரில் ஆறுதல் CM Jayalalithaa Consoling injured inspector in hospital

Penulis : Tamil on Wednesday, 9 October 2013 | 17:13

Wednesday, 9 October 2013

புத்தூர் ஆபரேசன்: படுகாயம் அடைந்த ஆய்வாளர் லட்சுமணனுக்கு முதல்வர் ஜெயலலிதா நேரில் ஆறுதல் CM Jayalalithaa Consoling injured inspector in hospital

Tamil NewsToday,

சென்னை, அக். 9-

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோர் ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கியிருந்தனர். அவர்களை கைது செய்ய தனிப்படையினர் புத்தூர் விரைந்து 5.10.2013 அன்று மேற்படி தலைமறைவு எதிரிகள் பதுங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். காவல் துறையினரின் தீவிர முயற்சியின் பலனாக எதிரிகள் பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது, சிறப்புப் பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர் லட்சுமணன் எதிரிகளால் கொடூரமான ஆயுதங்களால் கடுமையாக தாக்கப்பட்டதையடுத்து அவர் உடனடியாக சென்னை போரூர் இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சென்னை, சிறப்புப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளர் லட்சுமணனின் துணிச்சலைப் பாராட்டி தமிழக அரசின் சார்பாக ரொக்கப் பரிசாக 15 லட்சம் ரூபாயும், அவருடைய மருத்துவச் செலவு அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்வதோடு, ஒரு படி பதவி உயர்வும் அளிக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா 8.10.2013 அன்று அறிவித்தார்.

இந்நிலையில், சென்னை போரூர் இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை, சிறப்புப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை ஆய்வாளர் லட்சுமணனை இன்று முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு தனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொண்டார்.

மேலும், ஆய்வாளர் லட்சுமணனின் வீரதீரச் செயலைப் பாராட்டி, தமிழக மக்களின் நன்றியை தெரிவிக்கும் வகையில், 15 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்படுகிறது என்று தெரிவித்து அதற்கான காசோலையினை அவரது மனைவி மதுபென் அவர்களிடம் வழங்கினார்.

மருத்துவமனையில் லட்சுமணனுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்ததோடு இயல்பு நிலைக்கு விரைந்து திரும்பிடத் தேவையான அனைத்து சிறப்பு சிகிச்சைகளையும் அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

...
Show commentsOpen link

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger