News Update :
Powered by Blogger.

அமெரிக்காவுடன் போருக்கு தயாராகும் பாகிஸ்தான்

Penulis : karthik on Friday, 2 December 2011 | 03:11

Friday, 2 December 2011

 
 
 
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் பாகிஸ்தான் ராணுவ நிலைகளைத் தாக்கினால், பதிலடி கொடுக்க மேலிடத்து உத்தரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை என்று பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி அஸ்பாக் பர்வேஸ் கயானி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
 
இந்த உத்தரவால் பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் நேரடிப் போர் மூளும் அபாயம் எழுந்துள்ளது.
 
நேட்டோ படையினர் சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவ நிலை மீது தாக்குதல் நடத்தியதில் 24 பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதனால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு நிலவுகிறது.
 
இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவ நிலைகளை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் தாக்கினால் திருப்பித் தாக்குமாறு கயானி உத்தரவிட்டுள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறுகையில், ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் நிலை கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவத்தினரை எதிராளிகள் தாக்கினால், திருப்பித் தாக்கலாம். எதிரி யாராக இருந்தாலும் சரி, என்ன செய்ய வேண்டும் என்று மேலிடத்தின் உத்தரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை. உங்களிடம் உள்ள அனைத்துப் பலத்தையும் பிரயோகித்து பதிலடி கொடுக்க உங்களுக்கு உரிமை உள்ளது.
 
நேட்டோ படையினரே தாக்கினாலும் கூட தயங்காமல் பதிலடி கொடுங்கள். இதில் எந்தவித தயக்கமும் தேவையில்லை. இதற்காக யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை. எந்த மட்டத்திலும் அனுமதிக்காக காத்திருக்கத் தேவையில்லை. கையில் இருக்கும் ஆயுத பலத்தை பயன்படுத்தி முழுமையான பதிலடியைக் கொடுங்கள் என்றார் கயானி.



comments | | Read More...

வடிவேலு திமுகவுக்கு 'குட் பை' அ.தி.மு.க.வில் சேருகிறார்?

 
 
 
நடிகர் வடிவேலு அ.தி. மு.க.வில் சேர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல காமெடி நடிகர் வடிவேலு கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அப்போது விஜயகாந்த் எனது எதிரி என்று பலமாக சாடினார். அ.தி.மு.க. வையோ, ஜெயலலிதா வையோ, கூட்டங்களில் விமர்சித்து பேசவில்லை.
 
தேர்தலில் தி.மு.க. தோற்றதால் வடிவேலு அதிர்ச்சியானார். தற்போது படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார். உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக அவர் பிரசாரத்தில் ஈடுபடவில்லை.
 
இதற்கிடையில் வடிவேலு அ.தி.மு.க.வில் சேர முடிவு செய்துள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தரும், அ.தி.மு.க.வில் சேரப்போவதாக கூறப்படுகிறது.
 
இப்ராகிம்ராவுத்தரும், விஜயகாந்தும் ஆரம்பத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். விஜயகாந்தை வைத்து ராவுத்தர் நிறைய படங்கள் தயாரித்துள்ளார். பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இப்ராகிம் ராவுத்தர் காங்கிரசில் இணைந்து செயல்பட்டார். மூப்பனாருக்கு நெருக்க மானவராகவும், இருந்தார். இப்போது அவர் அ.தி.மு.க.வில் சேர முடிவு செய்துள்ளார்.
 
வடிவேலுவும், இப்ராகிம் ராவுத்தரும் நேரில் சந்தித்து அ.தி.மு.க.வில் சேருவது குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. விரைவில் இணைப்பு விழா நடக்கும் என தெரிகிறது.



comments | | Read More...

விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜித் நடிக்கும் புதிய படம்!

 
 
பழம் பெரும் தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் அஜீத்.
 
இந்தப் படத்தை 'சிறுத்தை' படத்தை இயக்கிய ஷிவா இயக்குகிறார்.
 
எங்க வீட்டுப் பிள்ளை, நம்நாடு, உழைப்பாளி என பிரமாண்ட படங்களைத் தயாரித்த இந்த நிறுவனத்தின் நிறுவனரும் அதிபருமான மறைந்த பி நாகிரெட்டியின் 100 வது பிறந்த நாளையொட்டி, அவருக்கு மரியாதை செய்யும் விதத்தில் இந்தப் படம் தயாரிக்கப்படுகிறது.
 
இந்தப் படத்தின் முறையான அறிவிப்பு இன்று விஜயா ஸ்டுடியோவில் வெளியிடப்பட்டது. இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தை பி வெங்கட்ராம ரெட்டி, பி பாரதி ரெட்டி தயாரிக்கின்றனர்.
 
படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
 
2012-ல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.



comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger