News Update :
Powered by Blogger.
Showing posts with label பெட்ரோல் விலை. Show all posts
Showing posts with label பெட்ரோல் விலை. Show all posts

பெட்ரோல் விலையையும் ரூ. 5 அதிகரிக்க ஆலோசனை Petrol Price rs 5 to increase consultation

Penulis : Tamil on Wednesday, 28 August 2013 | 22:08

Wednesday, 28 August 2013

எண்ணை நிறுவனங்களுக்கு கடும் இழப்பு: பெட்ரோல் விலையையும் ரூ. 5 அதிகரிக்க ஆலோசனை Heavy loss of oil companies Petrol Price rs 5 to increase consultation 

 

சிரியா மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற சூழ்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்த படி உள்ளது. நேற்று முன்தினம் ஒரு பேரல் கச்சா எண்ணை 116.27 டாலராக இருந்தது. நேற்று அது 118.04 டாலராக உயர்ந்தது. இதற்கிடையே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி அடைந்து வருகிறது.

இத்தகைய காரணங்களால் இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு அதிகரித்தப்படி உள்ளது. தற்போது எண்ணை நிறுவனங்கள் டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.10.22, மண் எண்ணையில் லிட்டருக்கு ரூ.33.54, சமையல் கியாஸ் விற்பனையில் சிலிண்டருக்கு ரூ.412 இழப்பை சந்தித்து வருகின்றன.

அந்த வகையில் தினமும் இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு ரூ.389 கோடி இழப்பு ஏற்படுகிறது. எனவே டீசல், சமையல் கியாஸ் விலையை உயர்த்தா விட்டால், இந்த ஆண்டு எண்ணை நிறுவனங்களின் மொத்த இழப்பு ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிகட்ட டீசல் விலையை ரூ.5 முதல் ரூ.6 வரை உயர்த்த ஆலோசனை நடந்து வருகிறது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 6-ந்தேதி பாராளுமன்ற கூட்டம் முடிந்ததும் டீசல் விலை உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது.

இந்த நிலையில் பெட்ரோல் விலையையும் உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகி வருகிறது. செப்டம்பர் முதல் 2 வாரங்களில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தாவிட்டால் எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பு மீட்க முடியாத அளவுக்கு போய் விடும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

எனவே பெட்ரோல் விலையையும் லிட்டருக்கு ரூ.5 வரை உயர்த்தலாமா என்று மத்திய அரசின் பல்வேறு அமைச்சக அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள். இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்து விட்டன.

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினால், அது அத்தியாவசியப் பொருட்களின் விலையில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு கருதுகிறது. எனவே ஒரே நேரத்தில் ஒரேயடியாக பெட்ரோல், டீசல் விலையை 5 ரூபாய் உயர்த்த மத்திய அரசிடம் தயக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஓரளவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger