Wednesday, 7 August 2013
அசாம் மாநிலத்தில்தான் உலகிலேயே அதிக காரம் உள்ள மிளகாய் விளைவிக்கப்படுகிறது. இந்த மிளகாய்ச்சாறில் இருந்துதான் இந்த தெளிப்பான் (ஸ்பிரே) உருவாக்கப்பட்டுள்ளது. பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல் உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நடக்கக்கூடிய தருணத்தில் இந்த தெளிப்பானை எதிர் தரப்பினர் மீது தெளிக்க ஆயுதமாகப் பயன்படுத்தலாம்.
டெல்லி மேல்-சபையில் ஒரு கேள்விக்கு எழுத்து மூலம் பதில் அளித்தபோது இந்த தகவலை ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி வெளியிட்டார். இந்த தெளிப்பான் சோதனைகளில் பயன்படுத்தப்பட்டபின்னர், டி.ஆர்.டி.ஓ. அமைப்பே இதை பிரபலப்படுத்தும் எனவும் ஏ.கே.அந்தோணி தெரிவித்தார்.