News Update :
Home » » இந்தியாவில் மின்சாரத் தட்டுப்பாடு அதிகமாக உள்ளபோது பங்களாதேஷ்க்கு தாராளம்! Very worst goverment

இந்தியாவில் மின்சாரத் தட்டுப்பாடு அதிகமாக உள்ளபோது பங்களாதேஷ்க்கு தாராளம்! Very worst goverment

Penulis : Tamil on Saturday 5 October 2013 | 23:30

இந்தியாவில் மின்சாரத் தட்டுப்பாடு அதிகமாக உள்ளபோது பங்களாதேஷ்க்கு தாராளம்!

by veni
is Tamil news, Tamil culture, செய்திகள் ...Yesterday,

கூட்டு மின் திட்டங்கள் பற்றி மன்மோகன்-ஹசீனா நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்டது.

சமீபத்தில் ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்ற இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளிடையே எரிசக்தி திட்டங்களை தொடங்குவது என முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி நட்புறவு நாடான வங்காளதேசத்துடன் மின் திட்டங்களை தொடங்க இந்தியா முடிவு செய்தது. மேற்கு வங்கத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் வங்காளதேசத்துக்கு வழங்குவது மற்றும் 1300 மெகாவாட் அனல் மின் திட்டத்தை வங்காளதேசத்தில் தொடங்குவது என இரு கூட்டு திட்டங்களை இன்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர்.

அப்போது பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:-

நமது இரு நாடுகளுடைய வளர்ச்சிக்காக இன்று புதிய கூட்டு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இதன் மூலம் இரு நாடுகளின் விதிகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படுகிறது.

இன்று எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகள் இந்தியா-வங்காளதேசம் இடையே உறவை மேலும் வலுப்படுத்தும். இரு நாட்டு உறவுகளில் ஒரு புதிய பரிமாணத்தை இது கொண்டுவரும். நாடுகளின் நட்புறவிற்கு இது ஒரு மைல் கல்லாக விளங்கும்.

தெற்கு ஆசியாவின் பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டங்கள், பகிர்ந்தளிக்கப்பட்ட வளர்ச்சியின் மேம்பாட்டிற்கு பயனுள்ளதாக இருக்கும். வங்காளதேச மேம்பாட்டிற்காக இந்தியா தொடர்ந்து உதவும்.

தனக்கு போகத்தான் தானம் என்று ஒரு முதுமொழி  உண்டு. ஆனால் இந்த விடயத்தில் மொத்தமாக இந்தியாவிற்குத் திண்டாட்டம… பங்களாதேஷ்க்கு கொண்டாட்டம்!!

The post இந்தியாவில் மின்சாரத் தட்டுப்பாடு அதிகமாக உள்ளபோது பங்களாதேஷ்க்கு தாராளம்! appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger