வாழ்நாள் சாதனையாளர் விருது எனக்கெதற்கு – கமல் விளக்கம் !!
மும்பையில் நடைபெற உள்ள சர்வதேசத் திரைப்படவிழாவின் போது நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள்சாதனையாளர் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, ஓய்வுபெற்ற நடிகர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுவந்த இந்த விருது தற்போது திரைக்களத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கமல்ஹாசனுக்கு வழங்கப்படுவது பற்றி செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் பேசுகையில், "
இந்த விருதுக்கு நான் தகுதியானவனா என்பது தெரியாது" என்று கூறினார். தொடர்ந்து,"இந்த விருதுக்கு என்னைப் பரிந்துரை செய்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.
இது எனக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். இன்னும் உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டி விடுவதாகவும் இருக்கும். ஆயினும் வயதான நடிகர்களுக்கு கொடுக்கும் இந்த விருதை வயது குறைந்த கமலஹாசனுக்கு கொடுக்கலாமா என்று பேசுபவர்களுக்கு நான் ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
நீங்கள் கொஞ்சம் பொறுத்து இருங்கள் இந்த விருதை வேண்டாம் என்று மறுக்கவும் வேறு வயதான நடிகர்களுக்கு கொடுங்கள் என்று பரிந்துரை செய்யவும் நான் யோசித்துக் கொண்டு இருக்கிறேன்" என்றும் கமல் கூறினார். இனி அதிக இந்திப் படங்களில் நடிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
The post
home
Home
Post a Comment