முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவு 10 நாட்களில் வெளியாகும் Post graduate teachers Examination results released in 10 days
Tamil NewsYesterday
சென்னை, செப்.16- முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான தேர்வு முடிவு மிக விரைவில் வெளியிடப்படுகிறது. அடுத்த 10 நாட்களுக்குள் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் மிக விரைவில் வெளியிடப்பட உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்பவும், பட்டதாரி ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களை நிரப்பவும் அரசு முடிவு செய்து அதற்கான ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தியது. இந்த தேர்வை 8 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினார்கள். இந்த தேர்வு விடைத்தாள்கள் அனைத்தும், ஸ்கேன் செய்யப்படும் பணி முடிவடைந்தது. மேலும், கம்ப்யூட்டர்களில் நிபுணத்துவம் வாய்ந்த குழு வரவழைக்கப்பட்டு இந்த விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட உள்ளது. இந்த மதிப்பீடு 3 மணி நேரத்திற்குள் முடிந்து விடும். அதன் பின்னர் தேர்ச்சி பெற்றவர்கள் யார்? யார்? என்ற பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் தயாரிக்க உள்ளது. இந்த தேர்வு முடிவு அடுத்த 10 நாட்களுக்குள் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் விபு நய்யார், உறுப்பினர் செயலாளர் வசுந்தரா தேவி, உறுப்பினர் க.அறிவொளி ஆகியோர் மும்முரமாக பணியில் ஈடுபட்டு உள்ளனர். ...
Show commentsOpen link
Post a Comment