குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் பாரதீய � �னதாவில் இருந்து பிரிந்து சென்று புதிய கட்சி தொடங்கிய குஜராத் முன்னாள் முதல்-மந்திரி கேசுபாய் பட்டேலும் நரேந்திர மோடிக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறார். இவற்றுக்கு பதிலடி கொடுக்க நரேந்திர மோடி திட்ட மிட்டுள்ளார். மீடியாக்கள் மூலம் பதிலடி கொடுத்து சண்டை போட விரும்பாத நரேந்திர மோடி இணைய தளம் தொடங்கி அதன் மூலம் எதிர்க்கட்சிகள் பிரசாரத்தை முறியடிக்க முடிவு செய ்துள்ளார்.
இந்த இணைய தளத்துக்கு "நமோ பாரத்" என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கு பொறுப்பாளர்களாக நரேந்திரமோடியின் நம்பிக்கைக்கு பாத்திரமான மனிஷ் பர்தியா, பரிந்து பகத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இணைய தளத்தில் நரேந்திர மோடி அரசின் சாதனைகளும் இடம் பெற்று இருக்கும். மனிஷ் பர்தியா ஏற்கனவே நரேந்திர மோடியின் பேச்சுக்கள், சாதனைகள் அடங்கிய ஏராளமான சி.டி.க்கள் தயாரித்து வைத்துள்ளார். இவையும் புதிய இணைய தளத்துக்கு பயன்படுத்தப்படும். அவ்வப் போது கிளப்பி விடப்படும் புகார்கள் குற்றச்சாட்டுகளுக்கு நரே� �்திர மோடியின் பதில் நேரடியாக இடம் பெறும். இந்த இணைய தளம் உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலம் வீடுகளுக்கும் கேபிளில் ஒளிபரப்பு செய்யப்படும். இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
Post a Comment