கலை பண்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
கலை பண்பாட்டுத் துறையின் கீழ், திருச்சி, திருவண்ணாமலை, நெல்லை, தூத்துக்குடி, திருவாரூர், சேலம், கடலூர், விழுப்புரம், கரூர், பெரம்பலூர், காஞ்சீபுரம், புதுக்கோட்டை, சீர்காழி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, ஈரோடு, ராமநாதபுரம் ஆகிய 17 இடங்களில் மாவட்ட அரசு இசைப் பள்ளிக்கூடங்கள் இயங்கி வருகின்றன.
இந்தப் பள்ளிக்கூடங்களில் குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மி� �ுதங்கம் ஆகிய துறைகளில் பாடங்கள் கற்பிக்கப்பட்டு, 996 மாணவ, மாணவிகள் இசை பயின்று வருகின்றனர். இந்த மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ரூ.200-ல் இரு� �்து ரூ.400 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டசபையில் சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையின் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு, கலை பண்பாட்டுத் துறை ஆணையரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துருவை அரசு கவனத்துடன் பரிசீலித்தது.
அதையடுத்து கலை பண்பாட்டுத் துறையின் கீழ் 17 இடங்களில் இயங்கும் மாவட்ட அரசு இசைப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் 996 மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்த தற்போது மாதந்தோறும் வழங்கப்� ��டும் கல்வி உதவித் தொகையை 2012-2013-ம் ஆண்டுமுதல் ரூ.200-ல் இருந்து ரூ.400 ஆக உயர்த்தி 10 மாதங்களுக்கு வழங்க உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment