இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி 'நான்' என்ற படம் மூலம் கதாநாயகனாகியுள்ளார். நாயகியாக ரூபா மஞ்சரி மற்றும் சித்தார்த், அனுயா ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தை ஜீவசங்கர் இயக்கியுள்ளார்.
'நான்' படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பின்னர் விஜய் ஆண்டனி பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
இதுவரை 25 படங்களுக்கு இசை அமைத்து விட்டேன். நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் இருந்தது. 'நான்' படம் மூலம் அது நிறைவேறியுள்ளது. நடிகனாக விரும்பியதுமே நிறைய பேர் கதையுடன் வந்தார்கள். அவை இசை சார்ந்தே இருந்தன.
தில்லானா மோகனம்பாள் அளவுக்கெல்லாம் அவை இருந்தன. ஆனால் எனக்கு அந்த கதைகளில் உடன்பாடு இல்லை. 'நான்' படத்தின் கதை திருப்தியாக இருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன். படம் நன்றாக வந்துள்ளது.
கதாநாயகி ரூபாவுக்கும், எனக்கும் கெமஸ்டரி இல்லை. என்னை அவர் அண்ணன் என்றே அழைத்தார். என் மனைவி பாத்திமாவால்தான் இப்படம் உருவாகியுள்ளது. ஒருவன் நல்லவனாக வாழ்வதை சூழ்நில� ��கள் தீர்மானிக்கின்றன. அத்தகு சூழ்நிலை அமையாத ஒரு இளைஞனின் வாழ்க்கையே 'நான்' படத்தின் கதை. இந்த படத்தில் பாடல்கள் வரவேற்பு பெற்றுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment