இலங்கையுடனான 4வது ஒருநாள் போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 3,1 என முன்னிலை பெற்றதுடன் தொடரை கைப்பற்றி அசத்தியது. அபாரமாக விளையாடிய கோஹ்லி 128 ரன் விளாசினார். கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று பகல்/ இரவு ஆட்டமாக நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக தில்ஷன், தரங்கா கள மிறங்கினர். பொறுப்புடன் விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 91 ரன் சேர்த்தனர். தில்ஷன் 42, தரங்கா 51 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். திரிமன்னே , சண்டிமால் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 50 ரன் சேர்த்தது. சண்டிமால் 28, கேப்டன் ஜெயவர்தனே 3, மேத்யூஸ் 14, ஜீவன் மெண்டிஸ் 17 ரன்எடுத்து மனோஜ் திவாரி சுழலில் வெளியேறினர்.
பெரேரா 2 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் போராடிய திரிமன்னே 47 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். இலங்கை அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்� ��ுக்கு 251 ரன் எடுத்தது. ஹெராத் 17, மலிங்கா 15 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் மனோஜ் திவாரி 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். அஷ்வின் 2, சேவக், டிண்டா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து 50 ஓவரில் 252 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. முதல் ஓவரிலேயே கம்பீர் டக் அவுட் ஆகி வெளியேற, இந்தியாவுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. � �ேவக் 34 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ரோகித் 4, திவாரி 21 ரன்னில் வெளியேறினர்.
இதை தொடர்ந்து கோஹ்லி , ரெய்னா ஜோடி 5வது விக்கெட்டுக்கு அபாரமாக விளையாடி ரன் சேர்த்தது. கோஹ்லி 128 ரன் (13வது சதம்), ரெய்னா 58 ரன் விளாசினர். இந்தியா 42.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன் எடுத்து வென்றது. கோஹ்லி ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்தியா 3,1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய நிலையில், சம்பிரதாயமான கடைசி போட்டி 4ம் தேதி நடக்கிறது.
Post a Comment