இப்போதெல்லாம் 'நான் ஈ' படத்தின் இயக்குனர் ராஜமெளலியை போனில் யாராவது அழைத்தால், பல நேரங்களில் அவரது எண் பிஸியாக இருக்கிறது.
காரணம் ஒட்டுமொத்த தென்னந்திய திரையுலகமும் படத்தினை பார்த்து விட்டு அவரது எண்ணை தொடர்பு கொண்டு அழைத்து புகழ்ந்து தள்ளுகிறார்களாம்.
பிரபாஸ், மகேஷ், ரவிதேஜா, வெங்கடேஷ், நாகார்ஜுனா, சித்தார்த், ராணா, விக்ரம், சூர்யா, கார்த்தி, தனுஷ், ரஜினி, இயக்குனர்கள் ராம் கோபால் வர்மா, விநாயக், பூரி ஜெகந்நாத், ஹரிஸ் சங்கர், க்ரிஷ், பிரகாஷ் ராஜ், நந்தினி, லிங்குசாமி, ஷங்கர் � ��ார் என அனைவருமே படம் பார்த்துவிட்டு ராஜமெளலியை தொடர்பு கொண்டு பாராட்டி இருக்கிறார்கள்.
தற்போது அந்த வரிசையில் இன்னொரு ஸ்டாரும் சேர்ந்திருக்கிறார். அவர் அஜீத். தமிழ்நாட்டில் ' நான் ஈ ' படம் பட்டிதொட்டியும் எங்கும் ஹிட்டடித்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில், அஜீத்தின் பாராட்டு ராஜமௌலிக்கு மேலும் தெம்பூட்டியிருக்கிறதாம்.
'நான் ஈ' படத்தினை பார்த்த அஜீத், இயக்குனர் ராஜமெளலியை தொடர்பு கொண்டு புகழ்ந்து தள்ளி விட்டாராம்.
தமிழில் இந்த கிராஃபிக்ஸ் ஈ வரவேற்பைப் பெற்றிருப்பதால், அடுத்த படம், அநேகமாக நேரடித் தமிழ் படமாக இருக்கலாம் என்கிறது கோலிவுட் தகவல். படத்தின் நாயகன்? 'நான் ஈ' இசையை வெளியிட்டாரே அவர் தானாம்.!
Post a Comment