இலங்கை யாழ்பாணத்தை சேர்ந்தவர் நிமலரூபன் (வயது 28). அரசியல் தலைவராக இருந்து வந்தார். இவரை இலங்கை படையினர் கைது செய்து வவுனியா ஜெயிலில் அடைத்தனர். இவருடன் ஏராளமான தமிழ் கைதிகளும் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரையும் வவுனியாவில் இருந்து அனுராதாபுரம் மகர சிறைக்கு மாற்றினார்கள். அங்கு அவர்கள் போராட்ட� ��்தில் ஈடுபட்டனர். அவர்களை ராணுவத்தினரும், ஜெயில் காவலர்களும் கண் மூடித்தனமாக தாக்கினார்கள்.
இதில் நிமலரூபன் உயிரிழந்தார். மேலும் 6 தமிழர்கள் படுகாயம் அடைந்தள்ளனர். அதில் ஒருவர் கோமா நிலையில் இருக்கிறார். 2 பேருடைய கால் எலும்பு உடைக்கப்பட்டுள்ளது. ஒருவருடைய காலில் துப்பாக்கி குண்டு காயங்கள் இருந்தன.
இலங்கை சிறைகளிலிருந்து தமிழர்களை சிங்கள படையினர் தொடர்ந்து சித்ரவதை செய்து வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக நிமலரூபன் அடித்து கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இலங்கை தமிழர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை எம்.பி. சுரேஷ், ஹேமச்சந்திரன், நிமலரூபன் கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Post a Comment