News Update :
Home » » குடியரசுத் தலைவராகும் பிரணாப் முகர்ஜி முன்பு உள்ள சவால்கள் என்ன?

குடியரசுத் தலைவராகும் பிரணாப் முகர்ஜி முன்பு உள்ள சவால்கள் என்ன?

Penulis : karthik on Sunday, 22 July 2012 | 21:05





நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்கும் பிரணாப் முகர்ஜி முன்பு உள்ள முக்கிய சவால்களில் ஒன்று அப்சல் � ��ுரு உள்ளிட்டோரின் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதுதான்.

2001-ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் பலியாகினர். இத்தாக்குதலில் தொடர்புடைய அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமது தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி அப்சல் குரு கருணை மனு கொடுத்திருக்கிறார் . இம்மனு மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இதேபோல் பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங் கொலை வழக்கில் தொடர்புடைய பல்வந்த்சிங் ரஜோனாவுக்கும் தூக்கு தண்டனை விதிக்கபப்ட்டிருந்தது. அவர் சார்பில் பஞ்சாப் மாநில அரசே கருணை மனு தாக்கல் செய்துள்ளது.

இதுபோல் 10க்கும் மேற்பட்ட கருணை மனுக்கள் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளன. இந்த கருணை மனுக்கள் மீது அவ்வளவு சீக்கிரமாக குடியரசுத் தலைவராக பொறுப்பேற்கும் பிரணாப் முகர்ஜி முடிவெடுத்துவிட முடியாது.

இதேபோல் அவர் முன் உள்ள மற்றொரு சவால் அடுத்த பொதுத்தேர்தல்.
2014-ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. பொதுத்தேர்தலில் நிச்சய மாக தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கப் போவது இல்லை. தொங்கு நாடாளுமன்றம்தான் அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எந்தக் கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை முடிவு செய்யப் போவதும் குடியரசுத் தலைவர்தான். அப்படி ஆட்சி அமைந்து ஏதாவது ஒரு கட்சி ஆதரவை விலக்கும்போது ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டியதும் குடியரசுத் தலைவர்தான்.

கடந்த காலங்களில் குடியரசுத் தலைவர் பதவி வகித்தவர்கள் பலர் காங்கிரஸ் கட்சிக்காரர்களாக இருந்தாலும் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டவர்களும் உண்டு.
1980களில் விஸ்வரூபெமெடுத்த போபர்ஸ் பீரங்கி ஊழலால் ராஜீவ் காந்தி அரசாங்கத்தை கலைக்கவும் கூட அப்போதைய ஜைல்சிங் ரகசியமாக திட்டமிட்டிருந்தார் என்று கூறப்படுவது உண்டு. ஆனால் அவர் ஆட்சியைக் கலைக்கவில்லை. அவர் பதவிக் காலம் முடிவடைந்துபோனதால் அந்த விவகாரம் கைவிடப்பட்டுவிட்டது.

1996-ல் பாஜகவின் வாஜ்பாயின் புகழ்மிக்க 13 நாள் ஆட்சிக்கு காரணமாக இருந்ததும் சங்கர் தயாள் சர்மா.

1999-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளுமாக சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கான 272 இடங்களைப் பெற்றிருந்தது. காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க அழைக்குமாறு குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சோனியாவே சென்றிருந்தார். ஆனால் அப்போதைய குடியரச ுத் தலைவராக இருந்த கே.ஆர். நாராயணன், பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க அழைத்து ஷாக் கொடுத்திருந்தார்.

2014-ம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிவு என்னவாகப் போகிறதோ? அப்போதைய குடியரசுத் தலைவராக இருக்கும் பிரணாப் முகர்ஜி என்ன முடிவு எடுப்பாரோ?








Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger