மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா ஹீரோவாக நடித்து வெளிவரவிருக்கும் சூப்பர் ஹீரோ படம் 'முகமூடி'. முகமூடி படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 20-ஆம் தேதி நடக்கவிருக்கிறது. முகமூடி படத்தின் இசையை விஜய் வெளியிடுகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
இசை வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழை விஜய்க்கு அனுப்பிவிட்டு அவரது பதிலுக்காக காத்திருந்தது முகமூடி யூனிட். விஜய் வருகிறாரா இல்லையா என அறிந்துகொள்ள ஜீவா விஜய்யின் மொபைலுக்கு மெசேஜ் அனுப்பி, அதுபற்றி கேட்ட போது நடிகர் விஜய் " நண்பனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்' என பதிலளித்திருக்கிறார்.
விஜய்யின் பதில் ஜீவாவின் மனதை தொட்டு அவரை உணர்ச்சிவசப்படச் செய்துவிட்டதாம். எந்த அலட்டலும் இல்லாமல் விஜய் நிகழ்ச்சிக்கு வர ஒப்புக்கொண்டதை நினைத்து மகிழ்ச்சியில் இருக்கிறார் ஜீவா. முகமூடி படத்தின் இசையை விஜய் வெளியிட கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் பெற்� �ுக்கொள்கிறார்.
Post a Comment