30-வது ஒலிம்பிக் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இன்று கோலாகலமாக கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்குகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்பே கால்பந்து போட்ட� �� தொடங்கி விட்டது. ஆனால் இன்று கால்பந்து போட்டிக்கு ஓய்வு நாளாகும். தொடக்க விழா நாளான இன்று வில்வித்தை பந்தயம் மட்டும் நடைபெறுகிறது.
பழம்பெருமை வாய்ந்த கிரிக்கெட் ஸ்டேடியமான லார்ட்ஸ் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. முதல்நாளில் பிற்பகல் 1.30 மணியளவில் தொடங்கும் இந்த பந� �தயம் மாலை 7 மணி வரை நடக்கிறது. 6 வீரர்-வீராங்கனைகள் ஆண்கள் தனிநபர், அணிகள், பெண்கள் தனிநபர், அணிகள் ஆகிய 4 பிரிவுகளில் தொடக்க சுற்று (ரேங்கிங் ரவுண்ட்) இன்று நடக்கிறது.
இதன் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர்கள் ஜெயந்தா தலுத்கர், தருண்தீப்ராய், ராகுல் பானர்ஜி ஆகியோரும், பெண்கள் பிரிவில ் இந்திய வீராங்கனைகள் தீபிகா குமாரி, பாம்பைல்யா தேவி, செய்க்ரோஸ்வாலு ஆகியோரும் இந்த போட்டியில் களம் காணுகிறார்கள். இந்தியா இரண்டு பதக்கம் வெல்ல நல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் வில்வித்தையில் இந்திய வீரர்-வீராங்கனைகள் தனிநபர் மற்றும் அணிகள் பிரிவு பந்தயங்களில் பங்கேற்கிறார்கள்.
தனிநபர் பிரிவில் தலா 62 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். அணிகள் பிரிவில் தலா 12 அணிகள் பங்கேற்கின்றன. ஆண்கள் அணிகள் பிரிவில் நாளை (28-ந் தேதி) பதக்க சுற்று பந்தயங்கள் நடக்கிறது. பெண்கள் அணிகள் பிரிவில் பதக்க சுற்று 29-ந் தேதி நடக்கிறது. தனிநபர் ஆண்கள் பிரிவில் பதக்க சுற்று ஆகஸ்டு 2-ந் தேதியும், தனிநபர் பெண்கள் பிரிவில் பதக்க சுற்று ஆகஸ்டு 3-ந் தேதியும் ந� �க்கிறது.
சாதித்து காட்டுவோம் என்ற முனைப்புடன் சென்றுள்ள வில்வித்தை வீரர்-வீராங்கனைகள் நெருக்கடிக்கு ஆளாகாமல் அம்பை எய்தால் புகழ் பெற்ற மைதானத்தில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதுடன், அடுத்த தலைமுறைக்கு உத்வேகமும் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment