News Update :
Home » » மூளை காய்ச்சலுக்கு 47 பேர் பலி

மூளை காய்ச்சலுக்கு 47 பேர் பலி

Penulis : karthik on Sunday, 1 July 2012 | 03:26

அசாம் மாநிலத்தில் ஜப்பான் என்சபலிட்டிஸ் எனும் மூளை காய்ச்சல் நோய் சமீப காலமாக பரவி வருகிறது. அங்குள்ள நல்பாரி, காம்ரூப், சிவ்சாகர், மாரிகான், தாரங் ஆகிய மாவட்டங்களில் பரவலாக இந்த நோய் தாக்கியுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பலர் உயிரிழந்து உள்ளனர். இதுவரை 47 பேர் உயிரிழந்து இருப்பதாக மாநில சுகாதார துறை கூறியுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டுமே 11 பேர் உயிரிழந்து உள்ளனர். 332 ப ேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர் அவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த நோய் விலங்குகளிடம் இருந்த மனிதனுக்கு பரவுகிறது. நோய் ஏற்பட்டவரை கடிக்கும் கொசு மற்றவரை கடிக்கும்போது அவருக்கும் நோய் பரவுகிறது. நோய் ஏற்பட்டதும் கடுமையான காய்ச்சல், தலைவலி ஏற்படுகிறது. மூளைப்பகுதியில் வீக்கமும் ஏற்படுகிறது. உடனடியாக சிகிச்சை பெற்றால் மட்டுமே நோ ய் குணமாகிறது. இல்லை என்றால் உயிரிழப்பு ஏற்படுகிறது. மேலும் நோய் தாக்கியவர்களுக்கு மூளை பாதிப்பும் உருவாகிறது. தொடர்ந்து பல இடங்களிலும் நோய் பரவி வருவதால் அசாம் மக்களிடையே பீதி ஏற்பட்டு உளளது.

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger