News Update :
Home » » முதல் கணவரை விவாகரத்து செய்யாமல் 2-ம் திருமணம் செய்த கர்ப்பிணி பெண் எம்.எல்.ஏ.வுக்கு அடி-உதை

முதல் கணவரை விவாகரத்து செய்யாமல் 2-ம் திருமணம் செய்த கர்ப்பிணி பெண் எம்.எல்.ஏ.வுக்கு அடி-உதை

Penulis : karthik on Saturday, 30 June 2012 | 23:01

அசாம் மாநிலத்தில், பாரக் பள்ளத்தாக்கில் உள்ள போர்கோலா தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ. ஆக தேர்ந்து எடுக்கப்பட்டவர் ரூமி நாத் (வயது 33). காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற இவருக்கு, ராகேஷ் சிங் என்ற கணவரும், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். கணவருடன் ஒன்றாக வசித்து வந்த ரூமி நாத், `பேஸ் புக்' இணைய தளத்தில் அடிக்கடி உரையாடுவார். பலருடன் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொ ள்வார்.   அப்படி இணைய தளத்தில் பலருடன் பழகி வந்த ரூமி நாத்துக்கு, ஜகி ஜாகீர் என்பவருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. இது அவர்களுக்குள் காதலாக மலர்ந்தது. இந்த காதல் திருமணம் செய்யும்வரை நீண்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், ஜாகீர் வேறு மதத்தை சேர்ந்தவர். ரூமிநாத்தை விட ஜாகீர் 5 வயது இளையவரும்கூட. ஜாகீரால் ஈர்க்கப்பட்ட ரூமி நாத், வீட்டை விட்டு வெளியேறி, முஸ்லிம் மத த்துக்கு மாறினார். பின்னர், கடந்த மாதம் அவர் ஜாகீரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், முதல் கணவரை விவாகரத்து செய்யவில்லை. தற்போது ரூமி நாத் கர்ப்பமாக உள்ளார். இவர்களது திருமணம் அசாம் மாநிலத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கிடையே, தனது மனைவியை காணவில்லை என்று ரூமி நாத்தின் முதல் கணவர் ராகேஷ் சிங் போலீசில் புகார் செய்தார்.  நேற்று முன்தினம் ரூமி நாத் தனத� � 2-வது கணவருடன் கரீம் கஞ்ச் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தார். அவர் அங்கு தங்கி இருப்பதை அறிந்த 200-க்கும் மேற்பட்டோர் இரவில் அங்கு திரண்டு வந்தனர். அவர்களின் அறைக்குள் புகுந்த கும்பல், ரூமி நாத்தையும், ஜாகீரையும் சரமாரியாக அடித்து, உதைத்தது. ரூமி நாத்தை சிலர் முகத்திலேயே எட்டி உதைத்து, கீழே தள்ளினர். சிலர் இருவரையும் கீழே தள்ளி, கண் மூடித்தனமாக அடித்து, உதைத்� �னர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். ரூமி நாத் 2-வது திருமணம் செய்து கொண்டதையும், குறிப்பாக இந்துவான அவர் முஸ்லிம் மதத்துக்கு மாறியதையும் பொறுக்க முடியாத கும்பல்தான் அவர்களை தாக்கியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். கர்ப்பிணியான ரூமி நாத்துக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டு, துடி துடித்தார்.   இ ந்த தாக்குதல் சம்பவம் பற்றி அறிந்த போலீசார் அங்கு சென்று ரூமி நாத்தையும், அவரது 2-வது கணவரையும் மீட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தலைநகர் கவுகாத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கவுகாத்தி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில், அவர்களுக்கு 4 சிறப்ப� � டாக்டர்கள் கொண்ட குழு தீவிர சிகிச்சை அளித்தது. அவர்கள் நன்றாக இருப்பதாகவும், அவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் டாக்டர்கள் குழு தெரிவித்தது. பின்னர் அவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எம்.எல்.ஏ. விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களது அறைக்கும், வீட்டுக்கும் தொடர்ந்து ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. தான் தாக்கப்பட்டது குறி� �்து ரூமிநாத் எம்.எல்.ஏ. கண்ணீர் மல்க பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருமணம் என்பது எனது சொந்த விஷயம். இதில் மற்றவர்கள் தலையிட உரிமை இல்லை. என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியில் தாக்குதல் நடத்தி உள்ளனர். என்னை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தாக்குதல் நடந்து உள்ளது. சிலர் என்னை தொடக்கூடாத இடங்களில் தொட்டு, சில்மிஷம் செய்தனர். உடல் ரீதியாக ப� �வந்தம் செய்தனர். அடக்கமுள்ள, மரியாதை உள்ள, பண்புள்ள ஒரு பெண் மீது நடந்த இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது 2-வது கணவரான ஜாகீரும் உடன் இருந்தார். ரூமி நாத் எம்.எல்.ஏ. தாக்கப்பட்டது அசாம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாநிலத்தில் ஒரு பெண் எம்.எல்.ஏ. தாக்கப்படு வது இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது. ரூமி நாத் தற்போது எம்.எல்.ஏ. ஆகி இருப்பது 2-வது தடவையாகும். இதற்கு முன்னர் இவர் பா.ஜனதா சார்பில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger