Saturday, 30 June 2012
அசாம் மாநிலத்தில், பாரக் பள்ளத்தாக்கில் உள்ள போர்கோலா தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ. ஆக தேர்ந்து எடுக்கப்பட்டவர் ரூமி நாத் (வயது 33). காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற இவருக்கு, ராகேஷ் சிங் என்ற கணவரும், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். கணவருடன் ஒன்றாக வசித்து வந்த ரூமி நாத், `பேஸ் புக்' இணைய தளத்தில் அடிக்கடி உரையாடுவார். பலருடன் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொ ள்வார். அப்படி இணைய தளத்தில் பலருடன் பழகி வந்த ரூமி நாத்துக்கு, ஜகி ஜாகீர் என்பவருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. இது அவர்களுக்குள் காதலாக மலர்ந்தது. இந்த காதல் திருமணம் செய்யும்வரை நீண்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், ஜாகீர் வேறு மதத்தை சேர்ந்தவர். ரூமிநாத்தை விட ஜாகீர் 5 வயது இளையவரும்கூட. ஜாகீரால் ஈர்க்கப்பட்ட ரூமி நாத், வீட்டை விட்டு வெளியேறி, முஸ்லிம் மத த்துக்கு மாறினார். பின்னர், கடந்த மாதம் அவர் ஜாகீரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், முதல் கணவரை விவாகரத்து செய்யவில்லை. தற்போது ரூமி நாத் கர்ப்பமாக உள்ளார். இவர்களது திருமணம் அசாம் மாநிலத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கிடையே, தனது மனைவியை காணவில்லை என்று ரூமி நாத்தின் முதல் கணவர் ராகேஷ் சிங் போலீசில் புகார் செய்தார். நேற்று முன்தினம் ரூமி நாத் தனத� � 2-வது கணவருடன் கரீம் கஞ்ச் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தார். அவர் அங்கு தங்கி இருப்பதை அறிந்த 200-க்கும் மேற்பட்டோர் இரவில் அங்கு திரண்டு வந்தனர். அவர்களின் அறைக்குள் புகுந்த கும்பல், ரூமி நாத்தையும், ஜாகீரையும் சரமாரியாக அடித்து, உதைத்தது. ரூமி நாத்தை சிலர் முகத்திலேயே எட்டி உதைத்து, கீழே தள்ளினர். சிலர் இருவரையும் கீழே தள்ளி, கண் மூடித்தனமாக அடித்து, உதைத்� �னர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். ரூமி நாத் 2-வது திருமணம் செய்து கொண்டதையும், குறிப்பாக இந்துவான அவர் முஸ்லிம் மதத்துக்கு மாறியதையும் பொறுக்க முடியாத கும்பல்தான் அவர்களை தாக்கியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். கர்ப்பிணியான ரூமி நாத்துக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டு, துடி துடித்தார். இ ந்த தாக்குதல் சம்பவம் பற்றி அறிந்த போலீசார் அங்கு சென்று ரூமி நாத்தையும், அவரது 2-வது கணவரையும் மீட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தலைநகர் கவுகாத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கவுகாத்தி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில், அவர்களுக்கு 4 சிறப்ப� � டாக்டர்கள் கொண்ட குழு தீவிர சிகிச்சை அளித்தது. அவர்கள் நன்றாக இருப்பதாகவும், அவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் டாக்டர்கள் குழு தெரிவித்தது. பின்னர் அவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எம்.எல்.ஏ. விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களது அறைக்கும், வீட்டுக்கும் தொடர்ந்து ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. தான் தாக்கப்பட்டது குறி� �்து ரூமிநாத் எம்.எல்.ஏ. கண்ணீர் மல்க பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருமணம் என்பது எனது சொந்த விஷயம். இதில் மற்றவர்கள் தலையிட உரிமை இல்லை. என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியில் தாக்குதல் நடத்தி உள்ளனர். என்னை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தாக்குதல் நடந்து உள்ளது. சிலர் என்னை தொடக்கூடாத இடங்களில் தொட்டு, சில்மிஷம் செய்தனர். உடல் ரீதியாக ப� �வந்தம் செய்தனர். அடக்கமுள்ள, மரியாதை உள்ள, பண்புள்ள ஒரு பெண் மீது நடந்த இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது 2-வது கணவரான ஜாகீரும் உடன் இருந்தார். ரூமி நாத் எம்.எல்.ஏ. தாக்கப்பட்டது அசாம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாநிலத்தில் ஒரு பெண் எம்.எல்.ஏ. தாக்கப்படு வது இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது. ரூமி நாத் தற்போது எம்.எல்.ஏ. ஆகி இருப்பது 2-வது தடவையாகும். இதற்கு முன்னர் இவர் பா.ஜனதா சார்பில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
home
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பஸ்நிலையம் அருகே உள்ள சந்தை மைதானத்தில் தே.மு.தி.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பொதுமக்களிடம் குறைகேட்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறை கேட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:- மக்களை நம்பி, மக்களுக்காக நடத்தப்படும் கட்சி தே.மு.தி.க. இந்த ஆட்சியில் க� �்வியையும், விவசாயத்தையும் ஒழுங்காக வளர்ச்சியடைய செய்யாமல், அதைப்பற்றி முன்கூட்டி திட்டமிடாமல் செயல்படுகிறார்கள். 40 சதவீதம் மாணவர்களுக்கு மட்டும் புத்தகம், ஜாமென்ட்ரி பாக்ஸ் வழங்கி இருக்கிறார்கள். மீதி 60 சதவீதம் பேருக்கு புத்தகம் மற்றும் எந்தப்பொருளும் வழங்காமலும் உள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ்உள்ள மக்கள் வாடி வதைகின்றனரே தவிர வளர்ந்தபாடில்லை. தண்ணீருக்கும� ��, மின்சாரத்திற்கும் மக்கள் அல்லல்படவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஓரளவு அனுமதிபெற்று, அதைவிட பன்மடங்கு அதிகமாக மணல் ஏற்றி கொள்ளை அடித்து தமிழக மக்களின் பணத்தை தண்ணீராக உறிஞ்சுகிறார்கள். 2014-ல் பாராளுமன்ற தேர்தலில் வெற்றியை படைப்போம். அப்போது கூட்டணியில் யார் இருந்தால் வெற்றி, யாரால் வெற்றி என்பதை பார்ப்போம். அந்த வெற்றியை தடுக்க விஜயகாந்தை ஜெயிலுக� �கு அனுப்ப திட்டமிடுகிறார்கள். நான் எதற்கும் அஞ்சமாட்டேன். தமிழ்நாடு பிழைக்க, நாட்டு மக்கள் முன்னேற வரும் பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள். உங்கள் குறைகளை தீர்த்து வைப்பது என்னுடைய கடமையாகும் மேற்கண்டவாறு விஜயகாந்த் பேசினார்.
கடந்த 2004-ல் சோனியா காந்தியை பிரதமராக்குவதில் எனக்கு ஆட்சேபணை ஏதும் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தனது 'டர்னிங் பாயிண்ட்ஸ்' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டில் பிறந்த சோனியா காந்தி இந்த நாட்டின் பிரதமர் ஆகக்கூடாது என்று ஏற்கனவே போர்க்கொடி உயர்த்தி, காங்கிரஸ் கட்சியிலிருந� ��து வெளியேறியவர் பி.ஏ. சங்மா. அந்த அவரது நிலைப்பாட்டில் இப்போதும் மாற்றம் இல்லை என்பதை அவர் உறுதிபடக் கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி கட்சியின் வேட்பாளரான பிரணாப் முகர்ஜியை எதிர்த்து போட்டியிடும் பி.ஏ. சங்மா, அசாமில் உள்ள கவுகாத்தியில் இன்று தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் இது குறித்து கூறியதாவது, "வெளிநாட்டில் பிறந்த யாரும் ஜனாத� �பதி, பிரதமர் ஆவதை நான் ஆதரிக்க மாட்டேன். இந்த எனது கருத்து அன்றும், இன்றும், என்றும் மாறாது. வரும் ஜனாதிபதி தேர்தலில் எனக்கு ஆதரவளிக்க வேண்டும்'' இவ்வாறு அவர் கூறினார்.
ஜனாதிபதி தேர்தலில் மம்தா பானர்ஜியும் என்னை ஆதரிப்பார் என்று நம்புகிறேன் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி நம்பிக்கை தெரிவித்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி வருகையையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது. சத்தியமூர்த்தி பவன் வண்ண ம� �ர்களாலும், கொடி தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நுழைவுவாயிலில் இருந்த காந்தி, காமராஜர் படத்திற்கு ரோஜாப்பூ மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. பிரணாப் முகர்ஜியை வரவேற்பதற்காக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முன்னதாகவே வந்து குவிந்திருந்தனர். பிரணாப் முகர்ஜி நேற்றிரவு 7.35 மணிக்கு சத்தியமூர்த்தி பவன் வந்தார். அப்போது அதிர்வேட்டுகள் வெடித்த� ��ம், மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் பிரணாப் முகர்ஜிக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், ஜி.கே.வாசன், குலாம் நபி ஆசாத், நாராயணசாமி, முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் பிரணாப் முகர்ஜிக்கு வாழ்த்து தெரிவித்தனர். ப ின்னர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களிடம் பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தனக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதைத்தொடர்ந்து பிரணாப் முகர்ஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ள எனக்கு ஏற� ��கனவே பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தோழமைக் கட்சிகள் மட்டுமல்லாமல், பாராளுமன்றத்தில் எதிர்வரிசையில் இருக்கும் பல கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய கட்சிகளும் எனக்கு ஆதரவு தெரிவி த்துள்ளன. அதுபோல தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் சிவசேனா கட்சி, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இவைதவிர மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன. ஒரு நாட்டின் ஜனாதிபதி என்பவர் அந்த நாட்டின் ஒட்டுமொத்த கவுரவத்தை பிரதிபலிப்பவராக இருக்க வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், நாட்டின் நிர்வாக ரீதியான திட்டங்களை தீட்டுவது, கொள்கைகளை வகுப்பது ஆகியவை ஜனாதிபதியின் அதிகார வரம்பிற்குள் இல்லை. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் பலம். இந்தியாவில் சாதி, மதம், மொழி, இனம், கட்சிகள் என்று பன்முகத்தன்மை இருந்தாலும், வேற்றுமையில் ஒற்றுமை இருக்கிறது. அந்த அடிப்படை தத்துவத்தை பிரதிபலிப்பவராக ஜனாதிபதி இருக்கிறார். இந்திய ஜனநாயகத்தின் வலிமை, இத்தனை வ� �றுபாடுகளுக்கு இடையில் உள்ள ஒற்றுமையில்தான் அடங்கியிருக்கிறது. அதுதான் இந்திய ஜனநாயகத்தின் தனித்தன்மை ஆகும். எல்லோரும் பெருமைப்படும் விஷயமும் இதுதான். இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார். அதையடுத்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு பிரணாப் முகர்ஜி அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி: நீங்கள் ஜனாதிபதியாக வந்த பிறகு எதற்கு முன்னுரிமை அளிப்பீர்கள்? ராஜீவ்க� �ந்தி கொலையாளிகள் கருணை மனு பற்றி முடிவு எடுக்கப்படுமா? பதில்: இந்திய ஜனாதிபதிக்கு என்னென்ன அதிகாரம் இருக்கிறது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 53-ல் இருந்து பல்வேறு ஷரத்துகளில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. ஜனாதிபதியாக இருப்பவர் என்ன செய்ய வேண்டும் என்பதை, முன்னாள் ஜனாதிபதிகள் ராஜேந்திர பிரசாத், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஜாகீர் உசேன் மற்றும் அவர்� �ளைத் தொடர்ந்து இருந்த ஜனாதிபதிகள் பல்வேறு விஷயங்களை கையாண்ட விதத்தில் முன்உதாரணங்கள் இருக்கின்றன. அவர்களது வழிகாட்டுதலின்படி நான் செயல்படுவேன்.எனவே, எனக்கென்று ஒரு புதிய இலக்கை வகுத்துக் கொள்ளத் தேவையில்லை. கேள்வி: தமிழ்நாட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் ஜனாதிபதி தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக சொல்லியிருக்கிறார்களே? அவர்களிடம் ஆதர� ��ு கோருவீர்களா? பதில்: அவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து கட்சியினரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரான என்னை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுள்ளேன். திரிணாமூல் காங்கிரஸ் தலைவியும், மேற்கு வங்காள முதல்-அமைச்சருமான மம்தா பானர்ஜி, ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. அவரும் என்னை ஆதரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத� �துள்ளேன். அவரும் என்னை ஆதரிப்பார் என்று நம்புகிறேன். இவ்வாறு பிரணாப் முகர்ஜி பதில் அளித்தார். பேட்டிக்குப் பிறகு சத்தியமூர்த்தி பவனில் உள்ள அரங்கத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடையே பிரணாப் முகர்ஜி பேசினார். இதில், முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள� �, தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
சீனாவின் வடமேற்கில் அமைந்துள்ள சிஞ்சியாங் பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. சிஞ்சியாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் உரும்கியில் காலை ஐந்து மணிக்கு ஏற்ப்பட்ட இந்த நிலநடுக்கம் 6 .6 ரிக்டர் அளவில் என பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் தூங்கிகொண்டிருந்தவர்கள் மீது வீடுகள் சரிந்து விழுந்� �தில் 24 பேர் படுகாயமடைந்தனர். பெரும்பான்மையான வீடுகள் சேதமடைந்து விழுந்ததில் நிறைய கால்நடைகள் இறந்துபோயின. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து கடுமையான பாதிப்புக்குள்ளானது.இந்த நிலநடுக்கம் மையம் கடல் மட்டத்திலிருந்து 3500 கி.மீ. உயர மலைப்பகுதியில் ஏற்பட்டது என்றும் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் உடனடியாக மீட்புக் குழுவினர் அனுப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வர� �ம் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஜீத்தின் 'பில்லா-2' படம் ஜூலை 13-ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் முதல் டிரெய்லர் ஏற்கனவே வெளியானது. இரண்டாவது டிரெய்லரை பிரமாண்ட விழா நடத்தி வெளியிட ஏற்பாடுகள் நடக்கிறது. வருகிற 2-ந்தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு விழா நூலக அரங்கில் இந்த விழா நடக்கிறது. இதில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். கதாநாயகி பார்வதி ஓமன குட்டனும் பங்கேற்கிறார். அஜீத் இவ்விழாவில் கலந்து கொள்வாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. அவர் இதுபோன்ற விழாக்களில் முன்பெல்லாம் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 'பில்லா-2' படத்துக்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. வன்முறை, கவர்ச்சி சீன்கள் அதிகம் இருப்பதால் இச்சான்றிதழ் அளிக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் முடிவை படக்குழுவினர் கைவிட்டு விட்டனர். 'பில்லா-2' படத்தை சக்ரி டோலட்டி இயக்கி உள்ளார். ஹாலிவுட் ஸ்டண்ட் நடிகர்களின் அதிநவீன சண்டைக் காட்சிகளுடன் இப்படம் தயாராகியுள்ளது.
தி.மு.க. சார்பில் வருகிற ஆகஸ்டு 5-ந்தேதி "டெசோ" மாநாடு விழுப்புரத்தில் நடக்கிறது. இதுதொடர்பாக இலங்கையில் ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜே.எச்.யூ. (ஜதீகா ஹீலா உருமையா) கட்சி தலைவர் ஒமல்பெ ஷோபிதா தெரோ பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் தி.மு.க. நடத்த உள்ள "டெசோ" அமைப்பின் மாநாட்டை தடுத்து நிறுத்துங்கள். ஏனெனில் சுதந்திரமான தனி ஈழம் கோரிக்கை விடுப்பதன் மூலம் அது இலங்கையில் இறையாண்மைக்கும், ஒரு மைப்பாட்டுக்கும் நேரடி அச்சுறுத்தலாக அமையும். மேலும் தனிஈழம் கோரிக்கையின் மூலம் இறுதிகட்ட போருக்கு பின்பு உருவான நல்லெண்ணம், நல்லுறவு போன்றவை அழிந்து மீண்டும் � �ோசமான விளைவுகள் ஏற்படும். 1976-ம் ஆண்டில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் கொண்டு வந்த தனிஈழம் தீர்மானத்தினால் இலங்கையில் 30 ஆண்டுகளாக தீவிரவாதமும், போரும் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த காலத்தில் இந்தியாவுக்குள் எதிர்ப்பு சக்திகள் ஊடுருவ இலங்கை ஒருபோதும் அனுமதித்த தில்லை என்பதை தங்களுக்கு (மன்மோகன்சிங்குக்கு) நினைவுபடுத்த விரும்புகிறேன். மேலும் எதி� �்காலத்திலும் அந்த நிலை தொடர்ந்து நீடிக்கும் என உறுதி அளிக்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா பிரதமராக விருப்பம் தெரிவித்திருந்தால் நான் பதவியேற்பு செய்து வைத்திருப்பேன் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் தெரிவித்துள்ளார்.அப்துல் கலாமின் டர்னிங் பாயிண்ட்ஸ் என்ற புதிய நூலில் இடம்பெற்றுள்ள தகவல்கள்: சோனியாவும் பிரதமர் பதவியும் 2004- தேர்தல் முடிவடைந்த நிலையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது பல்வேறு தரப்புகளிடமிருந்து சோனியா காந்தி பிரதமராக ஒப்புதல் தரக்கூடாது என்று வலியுறுத்தி மின் அஞ்சல்கள் குவிந்தன. ஆனால் சோனியா காந்தியை ஆட்சி அமைக்க அழைக்கும் கடிதத்தை அனுப்பவும் நான் தயாராக இருந்தேன். சோனியா காந்தி பிரதமராக பொறுப்பேற்க விருப்பம் தெரிவித்து இருந்திருந் தால் நானும் பதவியேற்பு செய்து வைத்திருப்பேன். ஆனால் ஆச்சரியப்படும்படியாக அவர் மன்மோகன்சிங்கை பிரதமராக பரிந்துரைத்துவிட்டார் பீகார் பேரவை கலைப்பு 2005-ம் ஆண்டு பீகார் மாநில சட்டப்பேரவை கலைக்கப்பட்டது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் கூறியபோது குடியரசுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தேன். இது தொடர்பாக ராஜினாமா கடிதமும் எழுதியிருந்தேன். ஆனால் பிரதமர் மன்மோகன்சிங் என்னை சமாதானப்படுத்தி அரசாங்கம் கவிழ்ந்துவிடும் நிலை ஏற்படும் எனக் கூறினார். இதையடுத்து ராஜினாமா முடிவை கைவிட்டேன் என� �று அப்துல்கலாம் அந்த நூலில் எழுதியுள்ளார்.
மும்பை தாக்குதலை நடத்திய தீவிரவாதி அபுஜிண்டால் சமீபத்தில் டெல்லி போலீசாரிடம் பிடிபட்டான். அவனை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். பாகிஸ்தானில் இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் பற்றி பல்வேறு புதிய தகவல்கள் ஜிண்டால் மூலம் கிடைத்து வருகிறது. லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளிடம் நவீன கடற்படை இருக்கும் தகவலை அபுஜிண்டால் நேற்று வெளியிட்� �ான். அந்த கடற்படையை லஷ்கர் தீவிரவாதிகள் சமீபத்தில் சீரமைத்து மேலும் நவீனப்படுத்தி உள்ளனர்.அந்த படையில் உள்ள தீவிரவாதிகள் அனைவரும் தற்கொலை படையைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மிர்பூரில் உள்ள மங்களா அணைக்கட்டில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடல் வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்தவும், இந்திய கடற்படை மீது தாக்குதல் நடத்தவும் அ ந்த அணைக்கட்டில் பயிற்சிகள் அளிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. இதை தீவிரவாதி ஜிண்டால் உறுதிபடுத்தினான். மங்களா அணைக்கட்டு பகுதியில் பயிற்சி பெற்று வரும் தற்கொலை கடற்படை தீவிரவாதிகளில் 8 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலையும் ஜிண்டால் தெரிவித்துள்ளான். அந்த 8 வாலிபர்களுக்கும் தானே நேரில் பயிற்சி கொடுத்ததாகவும் அவன் டெல்லி போலீசாரிடம் கூறினான். மராட� �டியம், குஜராத், கடலோர பகுதிகளை தாக்கும் நோக்கத்துடன்தான் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சதி திட்ட பயிற்சியில் இந்திய வாலிபர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மும்பை தாக்குதல் நடத்தப்பட்ட கசாப் உயிருடன் சிக்கிக் கொண்டதால் பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. எதிர்காலத்தில் அத்தகைய நெருக்கடி ஏற்படகூடாது என்பதற்காகவே இந்திய இளைஞர்� ��ளை கடற்படையில் ஐ.எஸ்.ஐ. சேர்த்து பயிற்சி அளித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பே கடற்படை தீவிரவாதிகள் மூலம் தாக்குதல் நடத்த லஷ்கர் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் மீண்டும் தாக்குதல் நடத்த இது சரியான நேரம் அல்ல என்று ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு தடுத்து விட்டதால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்தே வேறு ஒரு திட்டத்துடன் ஜிண்டால் சவுதி அரேபியாவு� �்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தான். ஆனால் இணையத்தளத்தை பயன்படுத்தியதால் உளவுத் துறையின் வலையில் சிக்கிக் கொண்டான்.
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- அரசு நிர்வாகத்தின் அச்சாணியாகவும், அரசுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாகவும் விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். இதேபோன்று, என் கடன் பணி செய்து கிடப்பது என்ற அப்பர் பெருமானின் வாக்கிற்கு இணங்க அயராது பாடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் ஆசிரியர் பெருமக்கள். நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல ும் வண்ணம் ஏழ்மையும், கல்வியறிவின்மையும் முற்றிலும் நீங்குவதற்காக அல்லும் பகலும் அயராது பாடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நலன்களைப் பாதுகாக்கும் பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முதல்- அமைச்சர் ஜெயலலிதா எடுத்து வருகிறார். அந்த வகையில், தற்பொழுது அதிகரித்து வரும் கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்தைக் கருத்தில் கொண்டு, 1.4.2012 முதல் அரசு ஊழியர்களுக்காக வழங ்கப்படும் வீடு கட்டும் முன்பணக் கடன் உச்ச வரம்பினை 15 லட்சம் ரூபாயிலிருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தியும், அகில இந்திய பணி அலுவலர்களுக்கான வீடு கட்டும் முன்பண உச்ச வரம்பினை 25 லட்சம் ரூபாயிலிருந்து 40 லட்சம் ரூபாயாக உயர்த்தியும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுபோன்று, அரசு பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மேம்படுத்தி வரும் நான்க ு ஆண்டுகளுக்கு, அதாவது 1.7.2012 முதல் 30.6.2016 வரை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்திட, முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த மேம்படுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஏற்கெனவே ஒப்புதலளிக்கப்பட்ட 52 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளுடன், கூடுதலாக 61 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளுக்க� �ம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி 113 மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.அதுபோல் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச மருத்துவக் காப்பீட்டு நிதி உதவியான 2 லட்சம் ரூபாய் என்பது 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அளவிற்குட்பட்டு எத்தனை முறை வேண்டுமானாலும் அரசு ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தின� �் சிகிச்சை பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் அரசு பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், கிராம உதவியாளர்கள் போன்ற பணியாளர்கள், உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்படியான வாரியங்கள், மாநில அரசின் கீழ் வரும் பல்கலைக் கழகங்கள் ஆகிவற்றைச் சேர்ந்த பதிமூன்று லட்சத்து ஐம்பதாயிரம் பணியாளர்கள் மற்றும் அவர் தம் க ுடும்பத்தினர் பயன்பெறுவார்கள். அரசின் இந்த நடவடிக்கைகள், அரசு ஊழியர்கள் சொந்த வீடு கட்டுவதற்கும், தங்களது உடல் நலத்தை நன்கு பாதுகாப்பதற்கும் மிகுந்த பயன் உள்ளதாக அமையும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற திடீர் குண்டு வெடிப்பில், 2 துப்பரவு தொழிலாளர்கள் காயமடைந்தார். நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கொல்கத்தாவில் உள்ள தேசிய மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இன்று காலை 8 மணி அளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. அதன்பிறகு அப்பகுதியில் பரவிய தீ உடனடியாக அணைக்கப்பட்டது. பலத்த சத்தம் ஏற்பட்டதில், மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் மற்றும் டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த தகவல் அறிந்த குண்டு செயலழப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆதாரங்களை கைப்பற்றினர். விசாரணையில் 2 துப்பரவு பணியாள் காயமடைந்ததாக தெரிய வந்தது. இச்சம்பவம் மருத்துவமனையின் அவசர சிகிச்சை வார்டிற்கு வெளியே நடைபெற்றதாக தெரிகிறது. மருத்துவமனைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளில் வெடிக்கும் தன்மை கொண்ட பொருள் வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து மேற்கு வங்க மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சந்திரிமா பட்டாச்சரியா கூறியதாவது, குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒரு துப்புறவு பணியாளருக்கு அதிக காயம் அடைந்து, சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மற்றொரு துப்பரவு பணியாளருக்கு கையில் மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரணையில் வெடிக்கும் தன்மை கொண்ட ஏதோ பொருள் மருத்துவமனை நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்தாகவும், அதனை அப்புறப்படுத்த முயன்ற போது வெடித்ததாகவும் தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசாரும், வெடி குண்டு செயலிழப்பு குழுவினரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. என்றார். இது குறித்து கொல்கத்தா மருத்துவ கல்லூரி முதல்வர் சித்தார்த் சக்கரவர்த்தி கூறியதாவது, மருத்துவமனையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு, இங்கு பணியாற்றும் பணியாளர்களில் யாருக்காவது தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து விசாரித்து வருகிறேன். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குண்டு வெடிப்பு சம்பவத்தால் மருத்துவப் பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்றார்.
இந்த வருடம் என்ஜினீயரிங் படிப்புக்காக 1 லட்சத்து 80 ஆயிரத்து 71 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவ- மாணவிகளுக்கான "ரேண்டம்" எண் திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையிலான "ரேங்க்" பட்டியல் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று வெளியிடப்பட்டது. இதில் திருவண்ணா மலையை சேர்ந்த மாணவர் தேவபிரசாத் முதலிடத்தை பிடித்துள்ளார், வேலூர் சிவகுமார் 2-வது இடம் பெற்றார் (பிற்படுத்தப்பட்டோர் வகுப்புக்கான ஒதுக்கீட்டில் முதலிடம் பெற்றுள்ளார்) திருச்சி கவுதம் 3 வது இடம் பெற்றார். (பிற்படுத்தப்பட்டோர் வகுப்புக்கான ஒதுக்கீட்டில் 2-வது இடம்) இவர்கள் உள்பட 32 பேர் 200க்கு 200 கட்-ஆப் மதிப் பெண் பெற்றுள்ளனர். தமிழக அரசு உயர் கல்வித்துறை செயலாளர் ஸ்ரீதர் இந்த ரேங்க் பட்டியலை வெளியிட்டார். அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் சண்முகவேல், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்திரியராஜ் , பேராசிரியர் சேகர் ஆகியோர் உடன் இருந்தனர். என்ஜினீயரிங் பட்டப் படிப்பில் சேரும் விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சிலிங் வருகிற 5-ந்தேதி நடக்கிறது. பொது கவுன்சிலிங் 13-ந்தேதி தொடங்குகிறது. ரேங்க் பட்டியல் அடிப்படையில் மாணவர� ��கள் கவுன்சிலிங்குக்கு அழைக்கப்படுவார்கள். விண்ணப்பித்த மாணவர்கள தங்கள் கவுன்சிலிங் தேதியை அண்ணா பல்கலைக் கழக இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். இந்த ஆண்டு விண்ணப்பித்த அனைவருக்கும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கையில் தமிழர்களின் பூர்வீக பிரதேசமான வடக்கில் நிலத்தை ராணுவம் ஆக்கிரமித்திருப்பது, ராணுவ நடமாட்டத்தை குறைக்காதது, இனப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வு காணபதில் முட்டுக்கட்டைகளை அகற்றாதது ஆகியவறை தொடர்பாக இந்தியாவின் அதிருப்தியை தேசிய பாதுகாப்பு செயலாளர் சிவசங்கர் மேனன் தமது கொழும்பு பயணத்தின் போது வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை சென்ற சிவசங்கர் மேனன் அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமைச்சர் பசில் ராஜபக்ச, பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்புகளின் போது இனப்பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண இந்திய தரப்பில் அதிகம் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனையும் சிவசங்கர் மேனன் சந்தித்தார். இந்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவசங்கர் மேனன், அரசியல் நல்லிணக்கம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இலங்கை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது என்றார்.
இசைஞானி இளையராஜாவைத் தொடர்ந்து இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடலும் ஒலிம்பிக் தொடக்க விழாவில் இடம் பெறவுள்ளது.ஒரு சர்வதேச நிகழ்ச்சியில் இந்தியத் திரையுலகின் இரு பெரும் ஜாம்பவான்களின் இசை ஒரே நேரத்தில் இடம் பெறுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த திரையுலக ரசிகர்களும், குறிப்பாக தமிழ் ரசிகர்க� �் பெரும் குஷியடைந்துள்ளனர்.லண்டன் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் இசைஞானி இளையராஜா முன்பு இசையமைத்த ராம் லட்சுமண் திரைப்படத்தில் இடம் பெற்ற நான்தான் ஙொப்பண்டா என்ற பாடல் இடம் பெறுகிறது. இந்த நிலையில், தற்போது இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் ஒலிம்பிக் தொடக்க விழாவில் இடம் பெறுகிறது. திரைப்பட இயக்குநர் டேணி பாயில் தலைமையிலான விழாக் குழுவினர்தான் தொடக்க விழா நிகழ்ச்சிகளை இறுதி செய்து வருகின்றனர். இதே பாயில் இயக்கிய ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைத்திருந்தார். இதன் மூலம் ஆஸ்கர் விருதுகளையும் அவர் வென்றார். இந்த நிலையில் பாயிலுடன் மீண்டும் இணைந்துள்ளார் ரஹ்மான். ஒலிம்பிக் தொடக்க விழாவில் எந்த மாதிரியான பங்களிப்பை ரஹ்மான் தரவுள்ளார் என்பது தெரியவில்லை. இருப்பினும் ஏற்கனவே உருவாக்கிய பாடலாக இல்லாமல்,பிரத்யேகப் பாடலாக ரஹ்மான் உருவாக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜே.பி.ஜே. நிறுவனத்தில் நிலம் வாங்க பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் உரிய ஆவணங்களுடன் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் மனு அளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.சென்னையை தலைமையிடமாகக் கொண்டு ஜே.பி.ஜே. சிட்டி டெவலப்பர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்திற்கு தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட இந்தியா முழுவதும் பல மாநிலங்களிலும் 120 கிளை நிற� �வனங்கள் உள்ளன. சென்னையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. இந்த நிறுவனத்தின் உரிமையாளராக ஜஸ்டின் தேவதாஸ் என்பவர் உள்ளார்.இந்த நிறுவனம் தமிழகம் முழுவதும் 1/4 கிரவுண்டு, 1/2 கிரவுண்டு, 1 கிரவுண்டு, 2 கிரவுண்டு என்று இடங்களை சலுகை விலையில் விற்பனை செய்வதாக அறிவித்தது.இதை நம்பி தமிழகம் முழுக்க ஆயிரக்கணக்கான மக்கள் பல கோடி ரூபாய் வரை பணம் முதலீடு செய்துள்ளதாக கூறப்� �டுகின்றது. இந்த நிலையில் சென்னை அண்ணாநகரில் உள்ள தலைமை அலுவலகம் திடீரென மூடப்பட்டது. மேலும் ஜே.பி.ஜே. நிறுவன அதிபர் ஜஸ்டின் தேவதாஸ் மோசடி வழக்கில் பெங்களூரில் கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இந்த நிலையில் ஜே.பி.ஜே. நிறுவனர் ஜஸ்டின் தேவதாஸ் ரூ.1,000 கோடி வரை ஏமாற்றிவிட்டதாகவும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் சுமார் 60 பேர் புகார் கொடுத்தனர்.இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ஜஸ்டின் தேவதாஸ் உள்ப� �� அவரது ரியல் எஸ்டேட் நிறுவன அதிகாரிகள் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.புகார்களின் எண்ணிக்கை அதிகமானதால் இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றி டி.ஜி.பி. ராமானுஜம் உத்தரவிட்டார். அதன்படி இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.இந்த நிலையில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பத� �வது,ஜே.பி.ஜே., சிட்டி டெவெலப்பர்ஸ் நிறுவனத்தினர் அதிக எண்ணிக்கையில் வீட்டு மனைகளை உருவாக்கி விற்பனை செய்ததில் முறைகேடுகள் நடந்தது தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது. வீட்டு மனை வாங்க, இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்ப கிடைக்காதவர்கள் சென்னை, அண்ணா நகர், இரண்டாவது அவென்யூ, சி-48 என்ற முகவரியில் உள்ள வீட்டுவசதி வாரிய கட்டடத்தில் செயல்படும், பொருளாதார குற ்றப்பிரிவு அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன், அடுத்த ஒரு வாரத்திற்குள் நேரில் ஆஜராகலாம் என்று அவர் அதில் தெரிவி்த்துள்ளார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஆண்டாள் பற்றிய சர்ச்சைக்குரிய பாடம் நீக்கப்பட்டுள்ளது.பல்கலைக்கழகங்களில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடங்கள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஒரு ஆண்டிற்கு முன்பே பாடக்குழு கூடி அனைத்து கல்வியாளர்கள் மற்றும் பதிப்பகங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆய்வுக் கட்டுரைகளை பரீசிலித்து பாடத்திட்டத ்தில் சேர்க்க வேண்டும்.நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 2012-13ம் கல்வியாணடில் முதலாம் பருவத்திற்கு பாடங்கள் மாற்றப்பட்டுள்ளன. பல்கலைக்கழக இணையதளத்தில் பாடத்திட்டம் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதில் தமிழ் பாடத்தில் ஆண்டாளை தேவதாசியாகவும், அவர் பெரியாழ்வாருக்கு திருட்டுத்தனமாக பிறந்ததாகவும், ஆண்டாள் மீது மன்னர் வல்லபதேவன் மோகம் கொண்டு பரிசுகள� � அனுப்பியதாகவும் சிறுகதை உள்ளது. மேலும் ஆபாச வர்ணனைகளும் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்பட்டது.இதையடுத்து தமிழக அரசும், உயர் கல்வித்துறையும் இந்த சர்சைக்குரிய பாடம் எப்படி இடம் பெற்றது என நெல்லை பல்கலைக்கழகத்திடம் விளக்கம் கேட்டன. இது மட்டுமல்லாது பல்வேறு தரப்பிடம் இருந்து எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. இதையடுத்து சர்சைக்குரிய பாடம் நீ்க்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக� ��் தெரிவித்துள்ளது.
குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து பி.ஏ.சங்மா விலக வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா விருப்பம் தெரிவித்துள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அவர் பாஜக மூத்த தலைவர் அத்வானியிடம் பேசியிருப்பதாகவும் அத்தகவல்கள் கூறுகின்றன.குடியரசுத் தலைவர் தேர்தலில் சங்மா போட்டியிடுவதாகவும் அவரைத் தாங்கள் ஆதரிப்பதாகவும் முதலில் அறிவித்தவர்கள் ஜெயலலிதாவும், ஒட� ��சா முதல்வர் நவீன் பட்நாயக்கும்தான். அதைத் தொடர்ந்து சங்மாவுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியிலும் இருவரும் இறங்கினர்.ஆனால் அவர்களது முயற்சிக்குப் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டதால் பரபரப்பு அத்தனையும் காங்கிரஸ் பக்கம் போய் விட்டது.அதேசமயம், அப்துல் கலாம் பெய� ��ை வைத்து மமதா பானர்ஜி திடீரென புதிய திருப்பத்தைக் கொண்டு வந்தார். ஆனால் அதற்கும் வரவேற்பு கிடைக்கவில்லை.இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய திருப்பம் ஏற்படும் போலத் தெரிகிறது. தான் ஆதரவளித்துள்ள சங்மா போட்டியிலிருந்து விலக வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா விருப்பம் தெரிவித்துள்ளதாக புதிய பரபப்புச் செய்தி வெளியாகியுள்ளது.இதுதொடர்பாக நேற்று தன்னிடம் தொலை� �ேசியில் அத்வானியிடம் ஜெயலலிதா கூறுகையில், வேட்பு மனுவைத் தாக்கல் செய்து விட்டு பின்னர் சங்மா போட்டியிலிருந்து விலக வேண்டும் என்று தெரிவித்தாராம். இதைக் கேட்டு அத்வானி அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.இன்று சங்மா வேட்பு மனு தாக்கல் செய்கிறார். அப்போது ஜெயலலிதாவும் டெல்லியில் இருக்கும்படி கேட்டுக் கொள்வதற்காக ஜெயலலிதாவுக்குப் போன் செய்தபோதுதான் அத்வானிக்க ு இந்த அதிர்ச்சிச் செய்தியைக் கொடுத்தாராம் ஜெயலலிதா. மேலும் தான் டெல்லிக்கு வர முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறி விட்டாராம்.கொடநாடு எஸ்டேட்டில் தான் தற்போது சிகிச்சையில் இருப்பதாகவும், ஒரு மாதத்திற்கு தன்னால் எங்கும் பயணம் செய்ய முடியாது என்றும் அத்வானியிடம் ஜெயலலிதா கூறியதாக தெரிகிறது.ஜெயலலிதாவின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இதையடுத்து பாஜக தனது நிலை குறித்து அதிர்ச்சி அடைந்துள்ளது. அடுத்து என்ன செய்வது என்பது குறித்து ஆலோசனையில் அது இறங்கியுள்ளது.தேர்தல் முடிவதற்குள் இன்னும் என்னென்ன கூத்தெல்லாம் நடக்கப் போகுதோ, நாராயணா....!
குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் முழு சுதந்திரமும், வாய்ப்புகளும் கிடைத்திருந்தால், நிச்சயம் பிரதீபா பாட்டீலைத்தான் மீண்டும் தேர்வு செய்திருப்பார் சோனியா காந்தி என்று கூறியுள்ளார் தொலைக்காட்சி செய்தி ஆய்வாளரும், இந்துஸ்தான் டைம்ஸ் இதழின் சீனியர் அசோசியேட் எடிட்டருமான சேகர் ஐயர். இதுகுறித்து அவர் ஒரு இணையதள வாசகர்களின் கேள்விகளுக்கு அளித்துள்ள பதில் வருமாறு... குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் எந்தவிதமான தவறுகளையும் செய்யவில்லை. குறிப்பாக சோனியா காந்திக்கோ அல்லது பிரதமர் மன்மோகன் சிங்குக்கோ அவர் அரசியல் சட்ட ரீதியாக எந்தவிதப் பிரச்சினையையும் கொடுக்கவில்லை. அவரது வெளிநாட்டுப் பயணங்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது என்னவோ உண்மைதான். அதேபோல அவரது புனே வீடும் கூட சர்ச்சையில் சிக்கியது உண்மைதான். இருப்பினும் ஒரு குடியரசுத் தலைவராக அவர் எந்தத் தவறையும் செய்யவில்லை. எனவே சோனியா காந்திக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால், முழு சுதந்திரமும் இருந்திருந்தால் நிச்சயம் பிரதீபா பாட்டீலைத்தான் மீண்டும் குடியரசுத் தலைவர் பதவிக்கு அவர் தேர்ந்தெடுத்திருப்பார் என்று கூறியுள்ளார் சேகர் ஐயர். குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும் மூக்குடைப்பு ஏற்பட்டது உண்மைதானே என்ற கேள்விக்கு மிக மிக சரி. அவர்கள் மிக மோசமான முறையிலும், தவறான முறையிலும் இந்தத் தேர்தலை அணுகியுள்ளனர்.இது நிச்சயம் அவர்களுக்குப் பெரும் அடிதான். குறிப்பாக பாஜகவுக்கு இது பெரும் பின்னடைவு. அவர்களது கட்சியினர், தங்களது கட்சித் தலைமை செயல்பட்ட விதம் குறித்� ��ு பெரும் அதிருப்தியுடன் உள்ளனர் என்றார் ஐயர். பிரணாப் முகர்ஜி குறித்து சொல்லுங்களேன் என்ற கேள்விக்கு, சந்தேகமே இல்லாமல் பிரணாப் முகர்ஜி நல்ல வேட்பாளர்தான். இது நல்லதேர்வுதான். அவருக்கு அரசிலும், அரசியல் சட்டத்திலும் நல்ல அறிவும், அனுபவமும் உண்டு. அவர் மிகச் சிறந்த குடியரசுத் தலைவராக செயல்பட்டு நிச்சயம் வரலாறு படைப்பார். அதேசமயம், பிரணாப் முகர்ஜியால் காங்கிரஸுக்கு பெரிய அளவில் லாபமும் கிடைக்கப் போவதில்லை, � �து நிச்சயம் அக்கட்சிக்கு அசவுகரியமான விஷயமும் கூட. காரணம், விதிமுறைகளின்படியே போகக் கூடியவர் பிரணாப் என்பதால்.நிச்சயம் 2014 லோக்சபா தேர்தல் காங்கிரஸுக்கு மிகப் பெரிய சோதனையாகவே அமையும். சுய சந்தேகத்துடன்தான் அக்கட்சி தேர்தலை எதிர்நோக்கியுள்ளது. அக்கட்சிக்கு அதன் மீதே நம்பிக்கை இல்லை என்பதே உண்மை என்றார். நிதீஷ் குமார் எடுத்த முடிவு சரியா என்ற கேள்விக்கு, நிதீஷ் குமார், தான் என்ன நினைக்கிறாரோ அதை அடைவதில் தெளிவாக இருக்கிறார். பிரதமர் வேட்பாளர் குறித்து பாஜக தொடர்ந்து அமைதி காப்பதை அவர் விரும்பவில்லை. குஜராத்தில் சட்டசபைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் வருகிறது. அது முடிந்த பிறகு பாஜகவில் மோடி கை ஓங்கும் என்பதை நிதீஷ் குமார் அறிவார். மோடியை பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவிக்காவிட்டாலும் கூட, பீகாரில் மோடியால், ஐக்கிய ஜனதாதளத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதையும் நிதீஷ் குமார் அறிவார். காரணம், வாக்காளர்களில் கணிசமான பேர் மோடிக்கு எதிராகவே உள்ளனர் இதனால்தான் அவர் இந்த முறை பிடிவாதமாக இருந்துள்ளார் என்றார் ஐயர். முலாயம் சிங் யாதவ் குறித்த கேள்விக்கு, அவர் ஒரு புத்திசாலியான அரசியல்வாதி. தனக்கு என்ன தேவையோ அதை கடுமையாக போராடி கேட்டுப் பெறத் தயங்க மாட்டார். இப்போது கூட தனது மாநிலத்திற்கு ரூ. 90,000 கோடி நிதியுதவி தேவை என்ற பெரிய பட்டியலை அவரது மகனும், உ.பி. முதல்வருமான அகிலேஷ் யாதவ் தயாரித்து டெல்லிக்கு அனுப்பவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.'பிரணாப்ப ை முதலில் சோனியா விரும்பவில்லை...! பிரணாப் முகர்ஜியை முதலிலேயே சோனியா காந்தி தேர்வு செய்தாரா அல்லது கட்டாயத்தின் பேரில் தேர்வு செய்தாரா என்ற கேள்விக்கு ஐயர் பதிலளிக்கையில், சோனியாவின் முதல் சாய்ஸ் நிச்சயம் பிரணாப் இல்லை. அவர் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லாத, புத்திசாலியான ஒருவரே குடியரசுத்தலைவர் பதவிக்கு வர வேண்டும் என்று விரும்பினார். ஆனால் பிரணாப் முகர்ஜி அரசியல் ரீதியாக அபிலாஷைகளுடன் இருந்� ��ு வந்த ஒருவர். எனவே அவரை முதலில் சோனியா காந்தி பரிசீலிக்கவே இல்லை.ஆனால் சூழ்நிலைகள் சோனியாவை பிரணாப் பக்கம் இழுத்துக் கொண்டு வந்து விட்டன. பிரணாப்புக்கு எதிராக மமதா பானர்ஜி பகிரங்கமாக போர்க்கொடி உயர்த்தியது, சரத்பவார், கருணாநிதி போன்றோர் பிரணாப்புக்கு ஆதரவு தெரிவித்தது ஆகியவை இதற்கு முக்கியக் காரணம். பிரணாப்புக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுக்கத் தொடங்கியதால் வ� ��று வழியில்லாமல் அவரைத் தேர்வு செய்யும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார் என்றார். மமதா முன்பு 2 வழிகளே... மமதா பானர்ஜி என்ன செய்வார் என்ற கேள்விக்கு, மமதா பானர்ஜி முன்பு இப்போது இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று தேர்தலில் நடுநிலை வகிப்பதாக கூறி ஒதுங்கிக் கொள்வது. 2வது, சற்று அமைதி காத்து விட்டு கடைசியில் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதாக அறிவிப்பது.பிரணாப் முகர்ஜிக்கு எதிராக வாக்களிப்போம் என மமதா கூறினால், நிச்சயம் அவரது கட்சிக்குள்ளேயே பலரும் ஆதரிக்க மாட்டார்கள். மாறாக, மாற்றி � ��ட்டுப் போட்டு விடுவார்கள். இது மமதாவுக்கும் தெரியும். அது அவரது முகத்தில் கரியடித்தது போலாகி விடும். மேலும் திரினமூல் காங்கிரஸ் கட்சியே பிளவுபடும் நிலையும் ஏற்படும். மமதாவின் இரும்புப் பிடியும் தளர்ந்து விடும். அந்த நிலையை அவர் விரும்புவாரா என்பது தெரியவில்லை. 2004ல் கலாம்-சோனியா இடையே என்னதான் நடந்தது...? இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் யாரிடமும் இல்லை. அவர்களுக்கிடையே என்ன நடந்தது என்பதை கலாமோ அல்லது சோனியாவோதான் விளக்கியாக வேண்டும். இருப்பினும் குடியரசுத் தலைவர் மாளிகையில், அப்துல் கலாமை சந்தித்து விட்டுத் திரும்பிய சோனியா காந்தி, ஆழ்ந்த சிந்தனையுடன் திரும்பினார். தனது குடும்ப உறுப்பினர்களை அவர் சந்தித்து நீண்ட ஆலோசனைகளை நடத்தினார். அதன் பின்னரே தன்னால் பிரதமர் பதவியை ஏற்க முடியாது என்று அவர் அறிவித்தார். இந்தியாவிலும், இத்தாலியிலும் கடைப்பிடிக்கப்படும் குடியுரிமை விதிமுறைகள் குறித்து ஏதாவது பேசினாரா என்பது தெரியவில்லை. அல்லது இந்தியாவைப் பூர்வீகமாக கொண்ட ஒருவருக்கு இத்தாலியில் மேயர் பதவி மறுக்கப்பட்டது குறித்த சம்பவத்தை சோனியாவிடம் அவர் தெரிவித்தாரா என்பது தெரியவில்லை. இதுகுறித்து கலாம்தான் மெளனம் கலைக்க வேண்டும். மோடியால் பிரதமராக முடியுமா...? பாஜகவுக்கு 200 எம்.பிக்களுக்கு மேல் சொந்தமாகவே கிடைத்தால் தாராளமாக மோடியால் பிரதமராக முடியும். அதைப் பெறும் முயற்சியில்தான் தற்போது மோடியும் தீவிரமாக இருக்கிறார்.ஆனால் அதற்கான வாய்ப்பு இப்போதைய அரசியல் சூழ்நிலையில் சாத்தியமா என்பதுதான் கேள்விக்குறியாகும். இந்திய முஸ்லீம்களைப் பொறுத்தமட்டில், குஜராத்தில் 2002ம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பாக இன்னும் புண்பட்ட மனதுட ன்தான் இருக்கின்றனர். அந்த புண்ணை ஆற்றும் பணிகளை இன்னும் மோடி செய்யவில்லை. அதைச் செய்தால் மட்டுமே அவரால் தேசிய அரசியல் பங்களிப்பு குறித்து யோசிக்க முடியும்.அவருக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்திக்க வேண்டும் மோடி. வளர்ச்சியை சாதித்துள்ளேன் என்று ரோபோட் போல கூறுவதை விட்டு விட்டு சாதாரண மனிதராக முதலில் அவர் மாற வேண்டும்.


Home