மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் காரணிகளை நாம் இரண்டு வகையாக பிரிக்கலாம்.
ஒன்று மாற்ற முடியாத காரணிகள் .அதாவது இயற்கையாகவே அமையப் பெற்ற காரணிகள் .இவற்றை நாம் மாற்ற முடியாது.உதாரணமாக ஆண்கள், வயதானவர்கள், இதயநோயால் பாதிக்கப்பட்ட குடும்ப அங்கத்தவர்களைக் கொண்டவர்கள் போன்றோரில் மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் சற்று அதிகம் ஆனாலும் இது சம்பந்தமாக நம்மால் எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் மேற்கொள்ள ம� �டியாது.
ஆனால் அடுத்த வகையான காரணிகள் கட்டுப் படுத்தக் கூடியவை.
மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் , ஆனால் நம்மால் கட்டுப் படுத்தக் கூடிய காரணிகள்.
நீரழிவு நோய் - இந்த நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்� ��்பம் அதிகம் ஆனாலும் இவர்கள் ஒழுங்காக மருந்துகளை பாவிப்பதன் மூலமும் , உணவுக் கட்டுப் பாட்டின் மூலமும் இந்த நோயை கட்டுப் பாட்டில் வைத்திருந்தால் மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தைகுறைக்கலாம்.
புகைத்தல்- புகைத்தல் மாரடைப்பு ஏற்படுவதற்கு காரணமான முக்கிய காரணிகளில் ஒன்றாகும். ஆனாலும் புகைக்காத நபர்களில் கூட மாரடைப� ��பு ஏற்படலாம்.
அதிகரித்த கொழுப்பு /கொலஸ்ரோல் - சரியான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி மூலம் நமது கொலஸ்ரோலை கட்டுப்பாடாக வைத்திருப்பதன் மூலம் நமக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை குறைத்துக் கொள்ள முடியும். அப்படியும் இது கட்டுப்படுத்தப் பட முடியாவிட்டால் கொலஸ்ரோலைக் குறைப ்பதற்கான மருந்துகள்பாவிக்கப்படலாம்.
உயர் குருதி அமுக்கம்(Hyper Tension) - இந்த நோய் இருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம். சரியான மருந்துகள் , உடற்பயிற்சி,உணவுக் கட்டுப் பாடு மூலம் இதையும் நாம் கட்டுப் பாடாக வைத்திருந்து மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை குறைத்துக் கொள்ள முடியும்.
மன அழுத்தம்(stressful life) - அதிகரித்த மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாகும்.தியானம் போன்ற ஆக்க பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு மன அழுத்தத்தை குறைப்பதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தைக் குறைக்கலாம்.
அதிகரித்த உடற்பருமன்(Obesity)- நமது உடல் நிறையை கட்� �ுப்பாடாக வைத்திருப்பது அவசியமாகும்.
Post a Comment