மேற்குவங்க மாநிலத்தில் நிபந்தனை ஜாமினில் கோர்டில் கையெழுத்திட வந்த அம்மாநில முன்னாள் அமைச்சரை, மர்ம ஆசாமி ஒருவர் நேற்று 'ஷூ'வினால் அடித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேற்குவங்க மாநிலத்தில் கடந்த இடது சாரி ஆட்சியின் பொது அமைச்சராக இருந்தவர் சுஷ்ஹந்தா கோஸ், தற்போது மிட்னாபூர் மாவட்டம் கர்பீட்டா தொகுதியின் மார்க். கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள இவர் உச்சநீதிமன்ற உத்தரவினால் நிபந்தனை ஜாமினில் உள்ளார். நேற்று மிட்னாபூரில் உள்ள கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அவிஜித்சோம் முன்பு ஆஜராகி கையெழுத்திட வந்தார். அப்போது கோர்ட் வளாகத்தில் இருந்த மக்கள் கூட்டத்தில் மர்ம ஆசாமி ஒருவர், திடீரென கோஷமிட்டவாறு எம்.எல்.ஏ.வை நோக்கி ஓடிவந்து, பொதுமக்கள் முன்பு தனது காலி்ல் அணிந்திருந்த 'ஷூ' வை கழற்றி சரமாரியாக தாக்க தொடங்கினான்.இதில் எம்.எல்.ஏ சுஷ்ஹந்தா கோஸ் காயமடைந்தார்.
அவன் பெயர் சியாமா பதா குண்டு என்றும் மிட்னாபூர் மாவட்டம் கார்பெட்டா பகுதியை சேர்ந்தவன் என்றும் மிட்னாபூர் சதர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொதுமக்கள் முன்னிலையில் எம்.எல்.ஏ. ஒருவர் ஷூவால் அடிவாங்கியது பரபரப்பினை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மேற்கு மிட்னாபூர் மாவாட்டத்தில் தன்னுடைய வீட்டினருகே எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதாக ஆகஸ்ட் மாதத்தில் கோஷ் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Post a Comment