விஜய்க்காக உருவாக்கப்பட்ட ஒரு கதையில் இப்போது ஹீரோவாக நடிக்கிறார் இளம் நடிகர் அச்மல்.
இயக்குநர் ருத்ரன் இயக்கும் படம் வெற்றி செல்வன். இப்படத்தின் கதையை விஜய்க்காகவே உருவாக்கினாராம் ருத்ரன்.
கதை கேட்டு தனக்குப் பிடித்திருப்பதாக சொன்ன விஜய்யால், பல்வேறு காரணங்களால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.
அஜ்மலுக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். தோனி படத்தில் நாயகியாக நடித்துப் பாராட்டுக்களைப் பெற்றவர். மதன் கார்கி பாடல்கள் எழுத இசையமைக்கிறார் மணி ஷர்மா.
இப்படத்திற்கு முதலில் சூட்டப்பட்ட பெயர் ரணம். பின்னர் சத்யவான் என்று மாற்றப்பட்டது. இப்போது அதுவும் மாறி 'வெற்றி செல்வன்' ஆகியிருக்கிறது.
இதாவது நிலைக்குமா? என்றால், 'நிச்சயமாக.. இனி தலைப்பை மாற்றுவதாக இல்லை, என்கிறார் இயக்குநர்.
home
Home
Post a Comment