முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய கொடூரங்கள் பல ஏற்கனவே வெளிவந்தன. இப்போது அந்த கொலைவெறியாட்டத்தின் வெளிவராத உண்மைகள் சில வெளிவந்துவிட்டன. கொடிய சிங்கள காமுகர்களின் கொலைவெறியாட்டத்தால் பலிகொள்ளப்பட்ட உறவுகளின் கொடூரங்கள் இவை.பெண்களை பெண்களாக எண்ணாத கொடிய சிங்கள வெறியரின் கொடூரதாண்டவத்தை இங்கே பார்க்கலாம்.
தாயக விடுதலைக்கு தங்களை கொடையாக்கிய எங்கள் பெண்புலிகளின் வரலாறு உலகறிந்த விடயம். ஆனால் முள்ளிவாய்க்கால் அந்த பெண்போராளிகளுக்கு தந்த வலி பெரிய கொடூரம். தமிழ்பெண்களை காணாத கொடிய சிங்களகாடையர்கள் இறுதிப்போரில் சரணடைந்தவர்களை. காயமடைந்தவர்களை கொடிய சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்துள்ளது.பெண்போராளிகளை குறிப்பாக இசைப்பிரியா மற்றும் இன்னொரு பெண்ணையும் சுட்டு விட்டு அவர்களின் மார்பகங்களில் முள்ளால் குத்தி சப்பாத்துக்கால்களால் மிதித்து கொலை செய்யும் கொடூரம் இங்கே பதிவாகியுள்ளது.
காயமடைந்தவர்களை மருத்துவமனையில் வைத்தே எரித்துக்கொன்ற கொடூரம் தாங்க முடியாத துயர். பாதுகாப்புத்தேடி பாரஊர்திகளுக்கு கீழ் பதுங்கியவர்கள் அதன் கீழேயே எரிக்கப்பட்ட கொடுமை. உழவு இயந்திதரத்தோடு சேர்த்தே உயிர்களும் வதைக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டு எரிக்கப்பட்ட கொடுமை. போர் நடைபெறும் எந்த நாட்டிலும் நடைபெறாத கொடூரங்களையும் சித்திரவதைகளையும் தாயக தமிழ்மக்கள் அனுபவித்துவிட்டனர்.அவர்கள் அனுபவித்த இன்னும் பல கொடூரங்களின் காணொளிகள் புகைப்படங்கள் பலவற்றை வெளியிடவுள்ளோம்.
Post a Comment