News Update :
Home » » தமிழர்களை பிளவுபடுத்த சதி: கருணா ரகசியமாக கனடா பயணம்

தமிழர்களை பிளவுபடுத்த சதி: கருணா ரகசியமாக கனடா பயணம்

Penulis : karthik on Tuesday 3 January 2012 | 09:03

 
 


விடுதலைப்புலிகள் அமைப்பில் கிழக்கு மாகாண தளபதியாக இருந்தவர் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளீதரன். சிங்களர்கள் கொடுத்த பணத்துக்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு இவர் விடுதலைப்புலிகள் அமைப்பை பிளவுபடுத்தி ஈழத்தமிழர்களுக்கு மிகப் பெரிய துரோகத்தை செய்தார். துரோகத்துக்கு பரிசாக இவருக்கு ராஜபக்சே மந்திரி பதவி கொடுத்தார்.

இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்த போது, சிங்கள படைகளுக்கு உதவியாக இருந்தார். தற்போது அவரை தங்களது சதி செயல்களுக்கு ராஜபக்சே பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. சர்வதேச அளவில் ஈழத் தமிழர்கள் ஒன்றுப்பட்டு நாடு கடந்த தமிழீழத்தை உருவாக்கியுள்ளனர். அதை உடைக்கும் குள்ளநரி வேலையில் ராஜபக்சே ஈடுபட்டுள்ளார்.இதற்கு அவர் தமிழர்களுக்கு துரோகம் செய்த கருணாவை பயன்படுத்துகிறார்.

ஈழத் தமிழர்கள் மிக அதிக அளவில் கனடாவில் வசித்து வருகிறார்கள். கனடா நாட்டு அரசும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உள்ளது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள ராஜபக்சே, தற்போது கருணாவை கனடாவுக்கு அனுப்பியுள்ளார்.

ராஜபக்சேயின் ஆலோசகருடன் மிக, மிக ரகசியமாக கருணா கனடா சென்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கனடா அரசாங்கத்திடம், வடக்கு-கிழக்கு பகுதியில் உள்ள தமிழர்கள் இணைந்து வாழ்வது சாத்தியம் அல்ல என்பதை வலியுறுத்த கருணா அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.

உலக அளவில் ஈழத் தமிழர்களிடம் பெரும் பிளவை உண்டாக்கும் வகையில் கருணாவை முன் நிறுத்தி இந்த சதி நடப்பதாக தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு கருணா பல தடவை அனுமதி கேட்டும், கனடா அவரை தன் நாட்டுக்குள் வர அனுமதிக்கவில்லை. இதனால் ராஜபக்சே சில நாடுகள் துணையுடன் கனடாவுக்கு நெருக்குதல் கொடுத்து கனடாவில் கருணாவுக்கு அனுமதி பெற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது. கருணா மேலும் மேலும் துரோக செயலில் ஈடுபடுவது, சர்வதேச ஈழத் தமிழர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger