News Update :
Home » » 2012 தான் பெஸ்ட் : சந்தானம்

2012 தான் பெஸ்ட் : சந்தானம்

Penulis : karthik on Sunday, 8 January 2012 | 01:36

2011ல் அதிக படங்களில் காமெடியனாக நடித்தவர் சந்தானம். விஜய்யுடன் '
வேலாயுதம் ', கார்த்தியுடன் ' சிறுத்தை ' ஆகிய இரண்டு படங்களும்
மக்களிடையே வரவேற்பைபெற்றது.
' சந்தானம் நடித்து இருக்கிறார்என்றால் படத்தை கண்டிப்பாக பார்க்கலாம் '
என்கிற அளவுக்கு தன் ரசிகர்களிடையே பெயர் பெற்று இருக்கிறார்.
2012ம் ஆண்டில் என்னென்ன படங்களில் நடிக்க இருக்கிறார் என்று தொடர்பு
கொண்டபோது " 2011ம் ஆண்டை விட 2012ம் ஆண்டுதான் என்னை பொருத்தவரை
சிறந்ததாக அமையப் போகிறது.
பல பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க இருக்கிறேன். கார்த்தியுடன் ' சகுனி
', உதயநிதிஸ்டாலினுடன் ' ஒரு கல் ஒரு கண்ணாடி ', சூர்யாவுடன் ' சிங்கம்-2
', கெளதம் மேனன் இயக்கத்தில் ' நீதானே என் பொன்வசந்தம் ', சேரன் இயக்கும்
படம் , சிம்புவுடன் இணைந்து ' போடா போடி ', ' வேட்டை மன்னன் '
எனவரிசையாக 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறேன்.. நடிக்கவும்
இருக்கிறேன்.
எனது திரையுலக வாழ்வில் 2011ஐ விட 2012ம் ஆண்டு தான் சிறந்தது " என்று
தெரிவித்தார்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger