மறு ஜென்மம் எடுத்து வந்திருக்கிறார் ரஜினி. இந்த மறுபிறவிக்கு காரணம் மருத்துவம்தான் என்றாலும் ரசிகர்களின் ஓயாத பிரார்த்தனையும் அன்பும் கூட இன்னொரு காரணம் என்று நம்புகிறார் ரஜினி.
அவர் எப்போது ரசிகர்களை சந்திப்பார்? மொத்தமாக அனைவரையும் வரவழைத்து சந்திப்பாரா, அல்லது மாவட்ட பொறுப்பாளர்களுக்கு மட்டும்தான் அந்த அதிர்ஷ்டம் இருக்கிறதா என்றெல்லாம் குழம்பிப் போயிருக்கிறார்கள் அதே ரசிகர்கள். இந்த நிலையில் முன்னணி வார ஏடு ஒன்று ரஜினி ஸ்பெஷல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
இதில் ரஜினி குறித்த ஏராளமான விஷயங்கள் வெளியிடப்பட்டுள்ளது. முக்கியமாக அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது இங்கு அவருக்காக பிரார்த்தனை செய்து கொண்ட ரசிகர்களை பற்றியும், அலகு காவடி இழுத்தவர்கள் பற்றியும் கூட அதில் தகவல்கள் அடங்கியிருக்கிறது.
இதையெல்லாம் வரி விடாமல் படித்து ஆனந்த கண்ணீர் வடித்தாராம் ரஜினி. இந்த அலகு காவடி இழுத்தவருக்கு மட்டும் இப்போது அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. எங்கிருந்தாலும் அவரை நான் பார்க்கணும். அழைச்சிட்டு வாங்க என்று பணித்திருக்கிறாராம் தனது உதவியாளர்களிடம்.
Post a Comment