கன்னட பட சூட்டிங்கிற்காக நடிகை ப்ரியாமணி காரில் சென்ற போது விபத்துக்குள்ளானது. இதில் அவர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தமிழில் பருத்திவீரன் படம்மூலம் பிரபலமானவர் நடிகை ப்ரியாமணி. அந்தபடத்திற்கு தமிழில் சரியான படங்கள் ஏதும் அமையாததால் பிற மொழி படங்களான தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். இப்போது கன்னடத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் சூட்டிங்கிற்காக கர்நாடக மாநிலம் முந்தாநதி காட்டுக்கு காரில் சென்றார் ப்ரியாமணி. அவருடன் மேக்கப் கலைஞர்களும் சிலர் சென்றுள்ளனர். சூட்டிங் ஸ்பாட்டை கார் நெருங்கிய போது நிலை தடுமாறி அருகில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து ப்ரியாமணி உள்ளிட்ட அனைவரையும் மீட்டனர். இந்த விபத்தில் ப்ரியாமணி காயம் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அதேபோல் அவருடன் பயணித்தவர்கள் உயிர்தப்பினர்.
விபத்து பற்றி தகவல் அறிந்ததும் படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்பதை அறிந்த படக்குழுவினர், சூட்டிங்கை சற்று தாமதமாக தொடங்கினர்.
Post a Comment