கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஸ்ரீராமலு நகரை சேர்ந்தவர் லட்சுமி (40). இவரது கணவர் தேவேந்திரன். ஓய்வுபெற்ற ராணுவவீரர். இவர்களுக்கு திவ்யா, ஆர்த்தி என்ற 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்கள்.லட்சுமி தனது கணவரிடம் விவாகரத்து பெற்று கடந்த 15 ஆண்டுகளாக தனியாக தனது மகள்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் லட்சுமி தனது 2 மகள்களையும் நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு பஸ்சில் அனுப்பி வைத்தார்.அதன் பிறகு வீட்டில் லட்சுமி தனியாக படுத்து தூங்கினார். காலையில் வீட்டு வேலைக்காரர் மற்றும் பால்காரர் வந்து கூப்பிட்டும் அவர் வெளியே வரவில்லை. அவரது தந்தை சீதாராமன் என்பவர் செல்போனில் அழைத்தபோது மணி மட்டும் அடித்தது. போனை எடுக்கவில்லை.இதையடுத்து பதறியடித்துக் கொண்டு வந்து சீதாராமன் பார்த்தபோது லட்சுமி படுக்கையில் கொலை செய்யப்பட்டுபிணமாக கிடந்தார். அதிர்ச்சி அடைந்த அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.கிருஷ்ணகிரி டி.எஸ்.பி. சந்தான பாண்டியன், தலைமையில் காவேரிப் பட்டணம் இன்ஸ்பெக்டர் ஜாபர்உசேன், சப்- இன்ஸ்பெக்டர் சசிக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் துப்பறியும் மோப்ப நாய் கொண்டு வரப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.கொலை செய்யப்பட்ட லட்சுமியின் கழுத்தில் கிடந்த நகைகள் திருடப்படவில்லை. மேலும் வீட்டில் பணமும் கொள்ளை போகவில்லை. எனவே ஆதாயத்துக்காக இந்த கொலை நடக்கவில்லை என்று போலீசார் உறுதி செய்தனர்.பின்னர் போலீசார் லட்சுமி குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது லட்சுமி தனது கணவர் தேவேந்திரனை விவாகரத்து செய்தது தெரியவந்தது. மேலும் லட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரது கணவர் பிரிந்து சென்றதும் தெரியவந்தது.இதையடுத்து லட்சுமி தனது குழந்தைகளை இங்கே அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்து இருக்கிறார். அதோடு இல்லாமல் இவர் பியூட்டி பார்லரும் நடத்தி வந்தார். இதன் மூலம் வரும் வருமானத்தை கொண்டு மகள்களை படிக்க வைத்தார்.இந்நிலையில் கிருஷ்ணகிரியை சேர்ந்த திருமணமான ஒருவருடன் லட்சுமிக்கு தொடர்பு ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து அவர்கள் திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வந்து இருக்கிறார்கள். இதோடு இல்லாமல் பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வந்ததால் லட்சுமியும் தன்னை இளமையாக காட்டி கொண்டு வலம் வந்து இருப்பதும் தெரியவந்தது.மேலும் லட்சுமி 3 செல்போன்களை வைத்து உள்ளார். இதில் ஏராளமான ஆண்களின் செல்போன் எண்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொலை செய்யப்படுவதற்கு முன்பு லட்சுமி யாருடன் செல்போனில் பேசினார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.மேலும் லட்சுமிக்கு பலருடன் தொடர்பு இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவருகிறது. எனவே தனது மகள்களை கல்லூரிக்கு அனுப்பி விட்டு லட்சுமி கொலையாளியை போன் செய்து வரவழைத்து இருக்கலாம் என்றும் அப்போது அவர்களுக்குள் ஏதாவது மோதல் ஏற்பட்டு லட்சுமி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.இந்த கொலை குறித்து விசாரணை நடத்த டி.எஸ்.பி. சந்தானபாண்டியன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஜாபர் உசேன், வெங்கடாசலம், சதீஷ்குமார், சந்திரகாந்தா, மற்றும் எஸ். ஐ. சசிகுமார் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.தனிப்படை போலீசார் லட்சுமியின்செல்போனில் பதிவாகி இருக்கும், எண்களை கொண்டும், அவருக்கு வந்தமெசேஜ்களை அடிப்படையாக கொண்டும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.அன்று சாந்தி...இன்று லட்சுமிகொலை செய்யப்பட்ட லட்சுமிக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருப்பது போலீஸ் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே இந்த காரணத்திற்காகவே அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றுதெரிகிறது. எனவே யார் இந்த கொலை செய்தார்கள் என்று போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.சேலத்தில் கடந்த வாரம் விபசார கும்பல் தலைவி கிழிஞ்ச வாய் சாந்தியும் அரை நிர்வாண கோலத்தில் வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். போலீசார் துரிதமாக செயல்பட்டு வாடிக்கையாளர்களாக வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் தான் கொலை செய்தது தெரியவந்தது.எனவே லட்சுமி கொலை வழக்கிலும் இதேபோல் ஏதாவது நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். சாந்தி கொலையில் 2 பேர் கைது செய்யப்பட்டு பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் லட்சுமி கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.பியூட்டிபார்லர் பெண் லட்சுமி கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் சென்னையில் இருந்து அவரது 2 மகள்களும் உடனடியாக காவேரிப்பட்டணம் திரும்பினர். அவர்கள் தங்கள் தாய் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்களுக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர்.இந்த கொலை குறித்து டி.எஸ்.பி. சந்தானபாண்டியன் கூறும் போது, கொலையாளியை நெருங்கி விட்டோம். விரைவில் கைது செய்வோம் என்றார்.ராணுவீரர் தேவேந்திரனை திருமணம் செய்து கொண்ட லட்சுமி ஆரம்பத்தில் சந்தோசமாக வாழ்ந்து வந்தார். பின்னர் தேவேந்திரன் ராணுவத்திற்கு சென்று விட்டதால் ஊரில் தனியாக இருந்த லட்சுமியின் வாழ்க்கை திசை மாறியது. அப்போதே அவருக்கும் வேறு ஒருவருக்கும் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதுப்பற்றி தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்த தேவேந்திரன் தனது மனைவி லட்சுமியை விட்டு பிரிந்தார். மேலும் விவாகரத்தும் பெற்று சென்றார். இதனால் லட்சுமியின் வாழ்க்கையேதிசை மாறிவிட்டது. இதையடுத்து பியூட்டிபார்லர் வைத்து நடத்திய லட்சுமி தன்னையும் அழகாக்கி கொண்டு வலம் வந்திருக்கிறார்.அவரது அழகில் மயங்கிய பலர் அவருடன் நட்பு வைத்து கொள்ள ஆசைப்பட்டு இருக்கிறார்கள். இதன் மூலம் அவருக்கு பலருடன் தொடர்பு ஏற்பட்டு வாழ்க்கையே தற்போது முடிந்து விட்டது.