கடலூர், புதுவையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நித்யானந்தா
சாமியாரின் தியான பீட ஆசிரமம் நிவாரண உதவிகளை செய்து வருகிறது. புதுவை
மாநிலம் ஏம்பலத்தில் தியான பீடம் ஆசிரமம் இருக்கிறது. இங்கிருந்து நிவாரண
உதவிகளை செய்து வருகின்றனர். நிவாரண பணிகளை செய்வதற்காக நித்யானந்தா
சாமியார் தனது பக்தர்கள் 600 பேருடன் ஏம்பலத்துக்கு வந்துள்ளார்.
இவர்களில் 35 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். அங்கு பெரிய அளவில் பந்தல்
அமைத்து சமையல் கூடத்தை உருவாக்கி உள்ளனர். அதில் நூற்றுக்கணக்கான
பாத்திரங்களை வைத்து சமைத்து வருகின்றனர்.
தினமும் ஒரு லட்சம் உணவு பொட்டலங்கள் தயாரித்து அருகில் உள்ள புதுவை,
கடலூர் மாவட்டத்தில் 80 கிராமங்களுக்கு உணவு வழங்கி வருகிறார்கள். பல
ஆயிரம் கிலோ காய்கறிகள், அரிசி மூட்டைகள், ரவை போன்றவை
குவிக்கப்பட்டுள்ளன. அவற்றை வைத்து 24 மணி நேரமும் சமையல் நடந்து
வருகிறது. அவற்றை நித்யானந்தரே நேரடியாக கண்காணித்து வருகிறார்.
தயாரிக்கப்பட்ட உணவுகளை 15 வாகனங்கள் மூலம் எடுத்துச் சென்று
கிராமங்களில் வழங்கி வருகிறார்கள். புயல் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள
மின் ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் நித்தியானந்தாஆசிரமம் மூலம்
உணவு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2-ந்தேதியில் இருந்து நிவாரண பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன.
பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப இன்னும் 3 அல்லது 4 நாட்கள் வரை உணவு
வழங்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவோம் என்று ஆசிரம நிர்வாகிகள்
கூறினார்கள்
Home »
» கடலூர், புதுவையில் தினமும் 1 லட்சம் பேருக்கு உணவு அளிக்கும்நித்யானந்தா
கடலூர், புதுவையில் தினமும் 1 லட்சம் பேருக்கு உணவு அளிக்கும்நித்யானந்தா
Penulis : karthik on Friday, 6 January 2012 | 06:33
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
Subscribe to:
Post Comments (Atom)
home
Home
Post a Comment