News Update :
Powered by Blogger.

Fw: பவர் ஸ்டாருக்கு நோஸ் கட் கொடுத்த நித்யா மேனன்!

Penulis : karthik on Wednesday 12 October 2011 | 23:05

Wednesday 12 October 2011

 
 
பவர் ஸ்டார் என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் நடிகர் டாக்டர் சீனிவாசன், நடிகை நித்யா மேனனுக்கு குறி வைத்து மூக்குடை பட்டிருக்கிறார். நித்யா மேனனுக்கு கேரளாவில் ரெட் கார்ட் போட்டிருக்கிறார்கள் என்பதால் தான் கூப்பிட்டவுடன் வந்து நடிப்பார் என்ற எதிர்பார்ப்பாலோ என்னவோ, நடிகை நித்யாவை தொடர்பு கொண்ட பவர் ஸ்டார், நான் ஹீரோவா நடிக்கிற ஒரு படத்தில் என்னுடன் ஜோடியா நடிக்க நீங்க ரெடியா? அப்படி ரெடி என்றால் ஒரு கோடி சம்பளம் தருகிறேன் என்றாராம். ஐம்பதே தாண்டாத நித்யா, ஒரு கோடி என்றதும் ஒரேயடியாக தாண்டிக்குதித்து வந்துவிடுவார் என்பது அவரது கால்குலேஷன்.
 
ஆனால் அதற்கு நித்யா மேனன் சொன்ன பதில்தான் கோடம்பாக்கமே கூடி நின்று பேசும் மேட்டர். சாரிங்க... நான் சீனியர் சிட்டிசனுடன் நடிப்பதில்லை, என்று கூறி நோஸ் கட் கொடுத்திருக்கிறார் நித்யா மேனன். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் மூன்றாவது அணியாக போட்டியிட்டு 50க்கும் குறைவான ஓட்டுக்களை வாங்கி தோற்றபோது வருத்தப்படாதவரா, நித்யாவின் பேச்சைக் கேட்டு வருத்தப்பட போகிறார். வழக்கம்போலவே சிரித்த முகத்துடன் வேறு நாயகியை தேட ஆரம்பித்து விட்டாராம்.



comments | | Read More...

விஜய்யுடன் நடித்தபோது ஜெனிலியாவுடன் மோதலா? -ஹன்சிகா

 
 
விஜய்யின் "வேலாயுதம்" படத்தில் ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா இணைந்து நடித்துள்ளனர். ராஜா இயக்கி உள்ளார். இப்படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. படப்பிடிப்பில் ஹன்சிகாவுக்கும் ஜெனிலியாவுக்கும் மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இருவரும் தனக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று ராஜாவை நிர்ப்பந்தப்படுத்தியதாகவும் கூறப்பட்டது. யார் பெரியவர் என்பதில் இருவருக்கும் ஈகோ இருந்ததாக ராஜாவும் உறுதிப்படுத்தினார்.
 
இதுபற்றி ஹன்சிகாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:- "வேலாயுதம்" படத்தில் விஜய்யுடன் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெனிலியாவுக்கும் எனக்கும் படப்பிடிப்பில் மோதல் ஏற்பட்டதாக வெளியான செய்தி எனக்கு அதிர்ச்சி அளித்தது. இயக்குனர் ராஜாவே இதை தெரிவித்தார் என்று என்னால் நம்ப முடியவில்லை. அவர் என்ன சொன்னார் என்பது எனக்கு முழுமையாக தெரியாது. நானும் ஜெனிலியாவும் நல்ல தோழிகள். அவருடன் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
 
"வேட்டை மன்னன்" படத்தில் சிம்புவுடன் நடிக்க என்னை அணுகினர். கதை பிடித்து இருந்தது. அதில் எனது கேரக்டர் என்ன என்பதை வெளிப்படுத்த முடியாது. சித்தார்த்துடன் தெலுங்கு படமொன்றிலும் நடிக்கிறேன். உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக "ஒரு கல் ஒரு கண்ணாடி" படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறேன். இவ்வாறு ஹன்சிகா கூறினார்.



comments | | Read More...

இந்தாங்க ஐம்பது லட்சம்… -விமல் செய்த பேரூதவி

 

விரலை பிடித்து உருவினால் கூட, விலகி ஓடும் நடிகர்களுக்கு மத்தியில் விமல் செய்த ஒரு காரியம் இன்டஸ்ட்ரியையே ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. பொதுவாக தான் நடிக்கும் படங்கள் ஓடாவிட்டால் அந்த படத்தின் தயாரிப்பாளரை சந்திக்கவே அஞ்சுவார்கள் பெரும்பாலான ஹீரோக்கள். படம் நல்லா ஓடுனா நமக்கா கொடுக்க போறாரு? என்றொரு கேள்வியையும் கேட்பார்கள் கூடவே.

இவர்களுக்கு மத்தியில்தான் இப்படி ஒரு காரியத்தை செய்து கண்கலங்க வைத்திருக்கிறார் விமல். என்னவாம்?

வாகை சூடவா படத் தயாரிப்பாளர் முருகானந்தம் அப்படத்தின் தோல்விக்கு பின்பு படு சிக்கலுக்குள்ளாகியிருக்கிறார். அவருக்கு உதவும் விதத்தில், தான் வாங்கிய ஐம்பது லட்ச ரூபாய் சம்பளத்தையும் சுளையாக திருப்பி கொடுத்துவிட்டார் விமல்.

தன் கையில் பணமில்லாத நிலையிலும் இரண்டு படங்களை ஒப்புக் கொண்டு அதில் கிடைத்த அட்வான்சுடன், மிச்ச மீதி தொகையை நாலு இடத்தில் புரட்டியும் கொடுத்தாராம். இதோடு நிறுத்தியிருந்தால் கூட ஆச்சர்யமில்லை. ஒரு படத்தில் இலவசமாகவே நடிச்சு தர்றேன். கவலைப்படாதீங்க என்றும் கூறியிருக்கிறாராம்.

ஈசான்ய மூலையில் எப்பவாவது மேகம் திரளுதுன்னா அது இவங்களை மாதிரி ஆட்களால்தான்…

comments | | Read More...

வேதனை அல்ல வியப்பு அடைந்தேன்! * ஹர்பஜன் சிங் ஆவேசம்

 

புதுடில்லி: "இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட போது என் மனம் வேதனைப்படவில்லை. மாறாக வியப்பு தான் ஏற்பட்டது," என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து ஒருநாள் மற்றும் ஒரே ஒரு "டுவென்டி-20′ போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நாளை ஐதராபாத்தில் நடக்கிறது. முதலிரண்டு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து அனுபவ சுழற்பந்துவீச்சாளரான ஹர்பஜன் சிங் நீக்கப்பட்டார். சமீப காலமாக விக்கெட் வீழ்த்த திணறியதால் தான், தேர்வாளர்கள் இம்முடிவை எடுக்க நேர்ந்தது.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறியதாவது:
இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு ஒருநாள் போட்டிக்கு தேர்வு செய்யப்படாதது மனவேதனை அளிக்கவில்லை. மாறாக, வியப்பு தான் ஏற்படுத்தியது. எனது "பார்ம்' குறித்து வீணாக விமர்சிக்கின்றனர். பொதுவாக, ஒருநாள் போட்டியில் பவுலர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பது தவறு. ஏனெனில், ஒவ்வொரு போட்டியிலும் 10 ஓவரில் 5 விக்கெட் எடுப்பது கடினம். மாறாக, எதிரணியின் ரன் வேட்டையை தடுக்க வேண்டும் என எதிர்பார்க்கலாம். குறைந்த ஸ்கோர் எடுத்த போட்டிகளில், பவுலர்கள் அதிக விக்கெட் வீழ்த்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
சமீபத்தில் ஆன்டிகுவாவில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் 10 ஓவரில் வெறும் 24 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினேன். இப்போட்டியில் பேட்டிங்கில் 41 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டேன். எனவே எனது "பார்ம்' குறித்து வரும் சர்ச்சைகள் குறித்து கவலைப்பட போவதில்லை. கடந்த 13 ஆண்டுகளாக இந்திய அணியின் வெற்றிக்கு என்னால் முடிந்த அளவு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன்.
இங்கிலாந்து தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இளம் வீரர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இளம் வீரர்களுடன், எனது அனுபவத்தை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகமான காலகட்டத்தில், சச்சின், கங்குலி, கும்ளே உள்ளிட்ட சீனியர் வீரர்கள் நிறைய ஆலோசனைகள் வழங்கினர். இவர்களது ஆலோசனைகள், போட்டியில் சாதிக்க உதவியது.
பழிதீர்க்குமா?:
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடுகிறேனா என்பது முக்கியமல்ல. இங்கிலாந்து மண்ணில் சந்தித்த தோல்விக்கு இந்திய வீரர்கள் இம்முறை பழிதீர்க்க வேண்டும் என்பதே எனது விருப்பம். இத்தொடருக்கு திறமையான இளம் மற்றும் அனுபவ வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதால், இங்கிலாந்து அணியை வீழ்த்தி பதிலடி கொடுப்பார்கள் என நம்புகிறேன். டெஸ்ட் அரங்கில், "நம்பர்-1′ இடத்தை அடைய, இந்திய வீரர்கள் கடுமையாக போராடினர். சமீபத்தில் இங்கிலாந்து மண்ணில் இழந்த முதலிடத்தை, மீண்டும் கைப்பற்றும் வரை இந்திய வீரர்கள் ஓய்வில்லாமல் போராட வேண்டும்.
மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் தொடரில், எனது தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. சச்சின் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லாத நிலையில், கோப்பை வென்றிருப்பது உற்சாகமாக உள்ளது. "டுவென்டி-20′ போட்டிகளுக்கு கேப்டனாக இருப்பது சுலபமான காரியமல்ல. ஏனெனில் ஒவ்வொரு பந்தின் முடிவிலும் புதிய முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறினார்.

comments | | Read More...

அஜீத்துக்கு தைரியம் அதிகம்

 

ரா.ஒன்' படத்தின் தமிழ் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. ஷாருக்கான், மணிரத்னம், சுஹாசினி மணிரத்னம், சந்தோஷ் சிவன், அபிராமி ராமநாதன், செளந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய ஷாருக்கான் " இந்தியாவில் மிகவும் சந்தோஷமான நடிகர் நானாக தான் இருக்க முடியும். கமல் சாருடன் இணைந்து 'ஹே ராம்' படத்தில் நடித்து இருக்கிறேன். அவருடன் இணைந்து நடனம், சண்டை என அனைத்தையும் ஒரே படத்தில் செய்து விட்டேன். ரஜினி சாருடன் 'ரா.ஒன்' படத்தில் நடித்து இருக்கிறேன். அஜீத் சாருடன் 'அசோகா' படத்தில் நடித்து இருக்கிறேன். 'அசோகா' படத்தில் எனது தம்பியாக, ஒரு கெட்ட பையனாக நடித்து இருந்தார். அது போன்ற வில்லன் கதா பாத்திரத்தில் நடிப்பதற்கு தைரியம் வேண்டும். அந்த தைரியம் அஜீத்திடம் இருக்கிறது." என்று கூறினார்.

comments | | Read More...

பிறந்த நாள்… மாற்றுத் திறனாளிகளுக்கு தன் கையால் பரிமாறிய சினேகா!

 

தனது பிறந்த நாளான இன்று, சென்னையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தன் கையால் உணவு பரிமாறி மகிழ்ந்தார் நடிகை சினேகா.

தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளாக புன்னகை இளவரசி என அழைக்கப்படுபவர் சினேகா. இன்று வரை தனக்கான தனித்தன்மையை இழக்காமல் நடித்து வருபவர்.

அவருக்கு இன்று பிறந்த நாள். இதையொட்டி, காலையில் மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் தனது பெற்றோருடன் சென்று வழிபட்டார் சினேகா. அவருக்காக சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அங்கிருந்த கொடிமரம் அருகில் தரையில் விழுந்து கும்பிட்டார். பின்னர் நேராக பார்வையற்றோர் மற்றும் திறன் குன்றியோர் காப்பகத்துக்கு சென்று அவர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். அவர்களின் விருப்பத்திற்கிணங்க ஆட்டோகிராப் படத்திலிருந்து ஒவ்வொரு பூக்களுமே பாட்டையும் பாடினார்.

பார்வையற்றவர்கள் அனைவரும் அவருடன் சேர்ந்து கைத்தட்டி பாடினர். பின்னர் எல்லோரும் ஒருமித்தக் குரலில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். அவர்களுக்கான மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவருக்கும் தன் கையாலேயே உணவு பரிமாறினார் சினேகா.

தனது பிறந்த நாள் குறித்து தட்ஸ்தமிழுக்கு அவர் கூறுகையில், "ஒவ்வொரு பிறந்த நாளிலும் நான் வேண்டுவது ஒன்றுதான். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். அன்பும் அமைதியும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். நன்றாக உழைக்க வேண்டும், நேர்மையோடு வாழ வேண்டும்.

கடந்த பல ஆண்டுகளாகவே என் பிறந்த நாள் பிறருக்கும் உபயோகமாக இருக்கும்படி கொண்டாடி வருகிறேன். மாற்றுத் திறனாளிகளுடன் இந்த நாளைக் கொண்டாடுவது மனசுக்கு நிறைவாக உள்ளது. அவர்கள் சந்தோஷத்தில் தனி திருப்தி கிடைக்கிறது," என்றார்.

comments | | Read More...

2-வது கணவருடன் கருத்து வேறுபாடு: நடிகை வனிதா விவாகரத்து மனு

 
 
நடிகை வனிதா சின்னத்திரை நடிகர் ஆகாஷை ஏற்கனவே திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார். அவர்களுக்கு ஹரி என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். பின்னர் ராஜன் ஆனந்த் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.
 
ஆகாஷூடன் வசிக்கும் மகன் ஹரியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வனிதா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் ஹரி தாயுடன் செல்ல மறுத்து விட்டான்.
 
தற்போது இரண்டாவது கணவர் ராஜன் ஆனந்துடனும் வனிதாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. முதல் கணவர் ஆகாஷுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக சமீபத்தில் வனிதா பேட்டி அளித்து இருந்தார்.
 
இந்த நிலையில் வனிதாவும், 2-வது கணவர் ராஜன்ஆனந்தும் இன்று காலை ஐகோர்ட்டில் உள்ள குடும்பநல கோர்ட்டுக்கு வந்தனர். இருவரும் பரஸ்பர முறையில் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்தனர்.
 
2007ல் திருமணம் நடந்து. கடந்த ஆகஸ்டு முதல் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறோம். பரஸ்பர முறையில் இருவரும் பிரிந்து செல்ல முடிவெடுத்திருப்பதால் எங்களுக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
 
நீதிபதி ராஜா சொக்கலிங்கம் முன்னிலையில் இந்த மனுவை தாக்கல் செய்தனர். அப்போது அவர்களின் வக்கீல் விஜயராஜ் உடன் இருந்தார்.



comments | | Read More...

2ஜி வழக்கு : நீதிமன்றத்தின் நேரங்களை வீணடிக்காதீர்கள் : சிபிஐ-க்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

 
 
 
உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் 2ஜி ஸ்பெக்டரம் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த அக்டோபர் 10-ந்தேதி மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறுகையில், முதலீட்டாளர்களை சிறையில் அடைத்துவிட்டால் முதலீடுகள் வருமா? இதன்மூலம் இந்தியாவின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என கூறியிருந்தார்.
 
அமைச்சர் சல்மான் குர்ஷித்-ன் இக்கருத்துக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிபிஐயிடம் விளக்கம் கேட்டனர். அதற்கு சிபிஐ அமைச்சரின் பேச்சுக்கு தாங்கள் எந்தவித ஆதரவும் தெரிவிக்கவில்லை என்று கூறியது. மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இதுபோன்ற கருத்துக்களால் நீதிமன்றத்தின் நேரங்களை வீணடிக்காதீர்கள் என்று சிபிஐ-க்கு கண்டனம் தெரிவித்தனர்.
 
இந்நிலையில் கனிமொழி ஜாமீன் மனு மீது சிபிஐ எந்தவித எதிர்ப்பும் கூறவில்லை என்ற செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளது சிபிஐ.



comments | | Read More...

விஜயகாந்த்தும் அன்னா ஹசாரரேவும்.. பிரேமலதா பேச்சு

 
 
 
ஊழல் இல்லாத நல்லாட்சி வழங்கப்படும் என்று தலைவர் விஜயகாந்த் அறிவித்த பின்னர் தான் அன்னா ஹசாரரே போன்றவர்கள் ஊழலுக்கு எதிராக சட்டம் கொண்டு வர முயன்று வருகிறார்கள் என்று விஜய்காந்தின் மனைவி பிரேமலதா கூறினார்.
 
நீலகிரி மாவட்டத்தில் தேமுதிக சார்பில் போட்டியிடும் உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசுகையில்,
 
தேமுதிக சார்பில் மக்களுக்கு ஊழல் இல்லாத நல்லாட்சி வழங்கப்படும் என்று தலைவர் விஜயகாந்த் அறிவித்து உள்ளார். அவர் அறிவிப்புக்கு பின்புதான் டெல்லியில் அன்னா ஹசாரரே போன்றவர்கள் ஊழலுக்கு எதிராக சட்டம் கொண்டு வர முயன்று வருகிறார்கள்.
 
நீலகிரி மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சிகளில் நல்ல சாலை அமைக்க, நல்ல குடிநீர் வழங்க, ஏழைகளுக்கு பட்டா வழங்க, ஊட்டி மணி கூண்டு அருகே மேம்பாலம் அமைக்க தேமுதிக வேட்பாளர்களுக்கு ஆதரவு தாருங்கள் என்றார்.
 
ரமணா ஸ்டைல் தான் சரி-விஜய்காந்த்:
 
இந் நிலையில் திருச்சி மாநகராட்சி மேயர் தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் சித்ரா விஜயகுமார் மற்றும் கவுன்சிலர் வேட்பாளர்களை ஆதரித்து பல இடங்களில் அவர் பேசுகையில்,
 
நான் நடித்த ரமணா படத்தில் ஊழல் அதிகாரிகள் தூக்கி செல்லப்படுவார்கள். அதை பார்த்து மற்ற அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதற்கு யோசித்து லஞ்சம் வாங்க மறுப்பார்கள். அதேபோல்தான் ஊழலின் ஆணிவேர் எங்கு இருப்பதை கண்டுபிடித்து அதை நீங்கள் போடும் ஓட்டு மூலம் பிடுங்கி எறிய வேண்டும்.
 
அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளுமே பொற்கால ஆட்சி, பொற்கால ஆட்சி என கூறிக்கொண்டு நாட்டை கொள்ளை அடித்து வருகின்றனர். இவர்களுக்கு நீங்கள் மாறி, மாறி ஓட்டு போட்டது போதும் இனியும் ஏமாறாதீர்கள். நல்லவர்களை தேர்தலில் தேர்ந்தெடுங்கள்.
 
5 ஆண்டுகள் கழித்து நாங்கள் சரியில்லை என்றால் கேள்வி கேளுங்கள். கேள்வி கேட்டால் தான் நியாயம் பிறக்கும். ஊழல் செய்தால் விஜயகாந்துக்கு பிடிக்காது. ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டான் இந்த விஜயகாந்த்.
 
நாங்களும், கம்யூனிஸ்டுகளும் லஞ்சம் வாங்க மாட்டோம். ஆட்சிகள் மக்களுக்காக தான் இருக்க வேண்டும். சுயநலத்துக்காக இருக்க கூடாது. மீண்டும், மீண்டும் உங்களை கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். உள்ளாட்சி தேர்தலில் எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் அளித்து பாருங்கள் என்றார்.
 
முன்னதாக மதுராந்தகத்தில் தனது கட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்த விஜய்காந்த், தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம் தான் பொற்கால ஆட்சியாகும். அவர் தொடர்ச்சியாக 11 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அவருக்குப்பின் வந்தவர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறி, மாறி ஆட்சிக்கு வந்து ஊழல் ஆட்சி தான் செய்தனர். நான் காசு மேலே துளி கூட ஆசைப்பட மாட்டேன். நல்லது செய்வது தான் எனது கொள்கை என்றார்.



comments | | Read More...

தமிழ்நாட்டில் காங்கிரஸ் இனிமேல் தனித்தே போட்டியிடும்: தங்கபாலு பேட்டி

 
 
 
சத்தியமூர்த்தி பவனில் உள்ளாட்சி தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தேர்தல் அறிக்கையை வெளியிட, அதை மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் பெற்றுக் கொண்டார். பின்னர் தங்கபாலு நிருபர்களிடம் கூறியதாவது:-
 
ராஜீவ்காந்தி நமது நாட்டுக்கு தந்த உன்னதமான திட்டம் பஞ்சாயத்து ராஜ். உள்ளாட்சி அமைப்புகளில் மக்களுக்கே முழு அதிகாரம் என்பது இதன் சிறப்பு. பஞ்சாயத்து ராஜ் முறை இந்தியா முழுவதும் சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் இதுவரை "பஞ்சாயத்து ராஜ்" சட்டம் முழுமையாக செயல்படுத்தப் படவில்லை. மற்ற மாநிலங்களைப்போல தமிழ்நாட்டிலும் இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்பதற்காகவே தமிழகத்தில் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம்.
 
தேவைப்பட்டால் தமிழ் நாட்டில் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை அமல்படுத்தக் கோரி காங்கிரஸ் போராட்டம் நடத்தும். மத்திய, மாநில அரசுகளைப்போல பஞ்சாயத்து அமைப்புகளும் தனி அதிகாரம் பெற்றவை. மாவட்ட பஞ்சாயத்து தலைவருக்கு அமைச்சருக்குரிய அந்தஸ்து உண்டு. ஆனால் தமிழ்நாட்டில் உள்ளாட்சி அதிகாரங்களை அதிகாரிகளே வைத்து இருக்கிறார்கள். அடிப்படை உரிமைகளை வழங்கவில்லை. மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதற்காகவே மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தோம்.
 
இனி தமிழ்நாட்டில் காங்கிரஸ் பஞ்சாயத்து முதல் பாராளுமன்ற வரை தனித்தே போட்டியிடும். பல ஆண்டுகளாக காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என்று தொண்டர்கள் விரும்பினார்கள். இப்போது அது நிறைவேறி இருக்கிறது.
 
திருச்சி இடைத்தேர்தலில் கூட்டணி தர்மத்தை காப்பாற்றுவதற்காகவே, காங்கிரஸ் போட்டியிடவில்லை.மத்திய தேர்தல் ஆணையத்தைப் போல மாநில தேர்தல் கமிஷனும் தனி அமைப்பாக செயல்பட வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக, சுதந்திரமாக நடைபெற வேண்டும்.
மாநில தேர்தல் ஆணையம் இதை செயல்படுத்தும் என்று நம்புகிறோம். நேர்மையாக தேர்தலை நடத்த வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
தேர்தல் அறிக்கையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரம், கூடுதல் நிதி, நேர்மையான ஊழல் இல்லாத நிர்வாகம், மக்கள் பங்கேற்கும் ஜனநாயகம் அமைய காங்கிரஸ் பாடுபடும் என்று கூறப்பட்டுள்ளது.
 
நிகழ்ச்சியில் கிருஷ்ண சாமி எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பீட்டர் அல்போன்ஸ், யசோதா, வட சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ, நிர்வாகி கள் தாமோதரன், மக்புல் ஜான், சிவலிங்கம், தமிழ் செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



comments | | Read More...

TM Soundararajan in critical condition

The legendary singer TM Soundararajan fondly known as TMS who is associated with the voice of MGR, Sivaji Ganesan, Gemini Ganesan and several others stars beloning to that era, is battling for his life at a hospital in Teynampet. Neurological deterioration has tormented the singer for the past month and he suffered from severe memory loss. Doctors have diagnosed the condition as nerve damage and he was admitted for treatment.

Shortly after, he slipped into a coma and doctors are doing their best for him. Prominent film personalities like Vairamuthu and P Sushila paid him a visit and offered their support for his family. His condition is still critical and he is being kept under observation in the Intensive Care Unit.

comments | | Read More...

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – வந்துசென்ற மாத்தாய் உறுதி


இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் காணப்படும் மீன்பிடித்துறை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மாத்தாய் உறுதியளித்துள்ளார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த ரஞ்சன் மாத்தாய் விஜயத்தை முடித்துக் கொண்டு இந்தியாவிற்குச் சென்று ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். மீனவர்கள் பிரச்சினை குறித்து மீனவர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு வருவதற்கு முன்னர் தமிழக முதலமைச்சரை சந்தித்த ரஞ்சன் மாத்தாய் மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் கருத்துக்களை பரிமாறிக் கொண்டார். கடற்பரப்பில் இருநாட்டவர்களும் அமைதியை கடைபிடிக்க வேண்டுமென முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதற்கும் தங்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லை என இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை, தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுகின்றமைக்கு மத்திய அரசு இலங்கைக்கு கண்டம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். பாகிஸ்தான் மற்றும் சீன மீனவர்கள் குறித்து எடுக்கப்படும் நடவடிக்கையை இலங்கை குறித்தும் இந்திய மத்திய அரசு எடுக்க வேண்டும் என ஜெயலலிதா தனது கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார்.

comments | | Read More...

முன்பு 'ஊழலுக்கு எதிராக அன்னா'... இப்போது 'அன்னாவுக்கு எதிராக இந்தியா'!

 
 
ஊழல் எதிர்ப்புப் போராட்டம் என்ற பெயரில் அன்னா ஹஸாரேவும் அவரது கோஷ்டியினரும் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் குதித்துள்ளதாக கருத்து எழுந்துள்ளது. இதையடுத்து அவரை ஆதரித்தவர்களில் பலரும் அவரை எதிர்க்க ஆரம்பித்துள்ளனர்.
 
ஹஸாரே எங்கள் நம்பிக்கைகளைத் தகர்த்துவிட்டார் என்றும், ஹஸாரே ஒரு நம்பிக்கை துரோகி, அரசியல் புரோக்கர் என்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக இணையத் தளங்களில் எதிர்ப்புக் கருத்துக்களை அவரது ஆதரவாளர்களே வெளியிட்டு வருகின்றனர்.
 
மேலும் மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்துவிட்டார் என அவர் மீது நம்பிக்கை துரோக வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
 
ஊழலுக்கு எதிரான போர் என்ற பெயரில் அன்னா ஹஸாரே உண்ணாவிரதத்தைத் தொடங்கியபோது நாடே அவருக்கு ஆதரவாகத் திரண்டது. ஜந்தர் மந்தரில் நடந்த முதல் போராட்டத்துக்கு பிரமாண்ட ஆதரவு கிடைத்தது. அடுத்து, ராம்லீலா மைதானத்தில் அவர் 12 நாட்கள் தண்ணீரை மட்டும் பருகி, உண்ணாவிரதம் இருந்தார். இந்தப் போராட்டம் பல்வேறு சர்ச்சைகளுக்கு வழிவகுத்தாலும், அவருக்கு ஆதரவு பெருகியது.
 
ஒரு நல்ல நோக்கத்துக்காக இவராவது போராட முன்வந்தாரே என்பதால் அவருக்கு ஆதரவு பெருகியது. பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக இணைய தளங்களிலும் அவருக்கென தனி பக்கங்களைத் தொடங்கி, I'm with Anna, என்ற கோஷத்தை முன்வைத்தார்கள்.
 
இன்று அவர்களில் பெரும்பாலானோர் அன்னா ஹஸாரேவை மிகக் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.
 
காரணம், அன்னாவின் ஒருதலைப்பட்சமான அரசியல் நிலைப்பாடு. ஊழலுக்கு எதிரான போர் என்று அவர் மக்களிடம் திரட்டிய அபரிமிதமான ஆதரவை அப்படியே பாஜகவுக்கு திருப்பி விட அன்னா முயல்கிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
 
ஊழல் என்று வந்துவிட்டால், அதில் பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளுக்குமே வித்தியாசம் இல்லை. காங்கிரஸாவது, அன்னாவின் கோரிக்கையை பரிசீலிப்பதாகச் சொன்னது. ஆனால் அதற்கான அவகாசமே கொடுக்காமல் அன்னா பாஜகவுக்கு ஓட்டுப் போடுமாறு பிரச்சாரம் செய்வது, அவரது உண்மையான நோக்கத்தைக் காட்டிவிட்டது என அன்னா ஆதரவாளர்களாக இருந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
ஹஸாரேவை நம்பி அவருக்கு ஆதரவளித்து, இப்போது அவரது அரசியல் நிலைப்பாட்டால் வெறுத்துப் போன பலரும் 'fed up with Anna' எனும் பெயரில் பேஸ்புக்கில் தனி பக்கம் ஆரம்பித்துள்ளனர். இந்தப்பக்கம் ஆரம்பிக்கப்பட்ட சில நொடிகளில் நூற்றுக்கணக்கானோர் அன்னாவைத் திட்டியடி, இந்த குழுவில் இணைந்துவிட்டனர்.
 
ஊழலை மட்டுமல்ல, அன்னாவையும் அவரது குழுவைச் சேர்ந்தவர்களையும் கடுமையாக எதிர்ப்பதாக அனைவரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைக்கு அன்னா துரோகம் செய்துவிட்டார் என்றும், அரசியல் தரகரைப் போல உள்ளது அவரது செயல்பாடு என்றும், தாங்கள் அளித்த ஆதரவை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டார் என்றும் கடுமையாக கருத்து தெரிவித்துள்ளனர்.
 
நம்பிக்கை துரோகம்- அன்னாவுக்கு நோட்டீஸ்:
 
இதற்கிடையே, அன்னா மீது நம்பிக்கை துரோக வழக்கு தொடர்ந்துள்ளார் குரு கோவிந்த் சிங் இந்திரப் பிரஸ்தா பல்கலைக் கழகத்தில் சட்டம் பயிலும் மாணவர் வினோத் ஆனந்த். இது தொடர்பாக அன்னாவுக்கும் அவரது குழுவுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
 
ஊழலுக்கு எதிராகப் போராடுவதை விட்டுவிட்டு ஒரு தனிப்பட்ட கட்சியை மட்டும் எதிர்த்து போராடுவதன்மூலம் இந்தியர்களின் உணர்வுகளை அவமதித்து விட்டார்கள் என்றும், நாட்டு மக்களை அன்னா ஹசாரேவும் அவரது குழுவினரும் தவறாக வழி நடத்துகின்றனர் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும் லட்சக்கணக்கான மக்களின் உணர்வுகளை அவமதித்த குற்றத்துக்காக ஹசாரே குழுவினர் மீது குற்ற நடவடிக்கையை தொடங்க வேண்டும் என்று கேட்டு உள்துறை அமைச்சகம், டெல்லி போலீஸ் கமிஷனர், ஹரியானா டிஜிபி ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.



comments | | Read More...

ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், ரிக்கி பான்டிங் உள்ளிட்டோர் மீது மேட்ச் பிக்சிங் புகார்

 
 
 

லண்டன்: இந்திய கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் மீது மேட்ச் பிக்சிங் புகார் எழுந்துள்ளது. இதனால் கிரிக்கெட் உலகில் மீண்டும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட்டை உலுக்கி எடுத்த ஸ்பாட் பிக்சிங் விவகாரம் அம்பலத்திற்கு வர முக்கியக் காரணம் மஜார் மஜீத் என்ற பெரும் பணக்கார புரோக்கர்தான். பாகிஸ்தான் கேப்டன் சல்மான் பட், முகம்மது உள்ளிட்ட மூவர் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டது தொடர்பான புகாரைக் கூறியதோடு வீடியோவையும் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து மூவரும் பாகிஸ்தான் அணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு லண்டன் சவுத்வார்க் கிரவுன் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.

தற்போது சல்மான் பட், ஆசிப் மீதான வழக்கில் விசாரணை நடந்து வருகிறது. இதன் நான்காவது நாள் விசாரணையின்போது மேலும் சில குண்டுகள் வீசப்பட்டன. இதை வீசியவர் மசார் மகமூது என்ற பத்திரிக்கையாளர். இவர் ஒரு புலனாய்வுப் பத்திரிக்கையாளர். இவர் கூறுகையில், மஸார் மஜீத் என்னிடம் பேசுகையில், கிரிக்கெட் உலகின் பிரபலங்களான ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், கிறிஸ் கெய்ல், பிரட் லீ, ரிக்கி பான்டிங் ஆகியோருடன் தனக்குத் தொடர்பு உள்ளதாக தெரிவித்தார்.

அதேபோல பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் இஜாஸ் பட்டுடன் தான் பேசியதாகவும் கூறினார். 2010 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது பாகிஸ்தான் அணி ஒரு, ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை விட்டுக் கொடுக்க முன்வந்ததாகவும் அவர் கூறினார்.

மேலும் பாகி்ஸதான் முன்னணி வீரர்கள் சிலரும், சில ஆஸ்திரேலிய வீரர்களும் போட்டியை விட்டுக் கொடுக்க முன்வந்ததாகவும் மஜீத் தெரிவித்தார் என்று மஹமூத் தெரிவித்தார். மேலும், விசாரணையின்போது ஒரு வீடியோ ஒன்றையும் அவர் போட்டுக் காட்டினார். அதில் காரில் இருந்தபடி மஜீத் பேசுகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டியில் விளையாடியபோது, முதல் நாள் ஆட்டத்தின்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அதில் மஜீத் கூறுகையில், தாங்கள் பங்கேற்கும் போட்டியில் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் பெட்டிங் செய்யலாம் என ஆஸ்திரேலிய வீரர்கள் கூறியதாக தெரிவித்துள்ளார் மஜீத். இதற்கு பிராக்கெட் என்று பெயர். ஒரு போட்டிக்கு 10 பிராக்கெட் வரை ஆஸ்திரேலியர்கள் தயாராக உள்ளனர்.

ஒரு பிராக்கெட்டுக்கு 50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பவுண்டு வரை செலவாகும். இதுவே டுவென்டி 20 போட்டிக்கு 4 லட்சமாகவும், டெஸ்ட் போட்டிகளில் 10 லட்சம் பவுண்டு வரையும் ஆகும் என்று மஜீத் கூறியுள்ளார்.

அந்த வீடியோல் மஜீத், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிதி குறித்தும் பேசியுள்ளார். அவருடன் தான் இணைந்து செயல்பட விரும்பவில்லை என்றும் மஜீத் தெரிவித்துள்ளார். ஒரு ஆபாசமான வார்த்தையைக் கூறி அவரிடம் போய் எப்படி பணியாற்றுவது என்று தெரிவித்துள்ளார் மஜீத்.

இந்த பரபரப்பு புகாரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உடனடியாக மறுத்துள்ளது. மஜீத் யார் இந்தப் புகார்களைச் சொல்ல. அவருக்கு என்ன அருகதை உள்ளது. தகுதியே இல்லாத ஒருவர் ஆஸ்திரேலிய வீரர்கள் குறித்துப் புகார் கூறுவதை ஏற்க முடியாது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் கூறியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் முன்னணி வீரர்களாக அசாரூதீன், அஜய் ஜடேஜா உள்ளிட்டோர் மீது கிரிக்கெட் சூதாட்ட புகார் எழுந்தது. இதன் விளைவாக அசாருதீனுக்கு வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய வீரர்கள் ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் ஆகியோர் மீது சூதாட்டப் புகார் எழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

comments | | Read More...

இலங்கையில் களைகட்டிய வேலாயுதம்

 
 
 
விஜயின் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் வேலாயுதம்.காவலன் வெற்றிப்படத்திற்கு பின் விஜய் நடிப்பில் வெளிவர உள்ள படம் என்பதாலும் வழமையான விஜய் படத்திற்கு இலங்கையில் வரவேற்பு உள்ளதனாலும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.விஜய் ஜெனிலியா ஹன்சிகா சரண்யாமோகன் பாண்டியராயன் சூரி சந்தானம் சாயாசின்டே என பல முண்ணனி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். விஜய் விஜய் அன்டனி கூட்டணியில் இலங்கையில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது வேலாயுதம் பட பாடல்கள் . இலங்கை வானொலிகளில் முதல் இடத்தில் இருக்கும் பாடல் வேலாயுதம் ஆகும்.வேலாயுதம் படத்தை இலங்கையின் முண்ணனி திரையரங்குகள் ஆக்கிரமித்துள்ளன. ஈரோஸ் (பாமன் கடை) ரூபி (மாளிகாவத்தை) வசந்தி (வவுனியா) சரஸ்வதி (திருகோணமலை) சினிவேல்ட் 1,2,3 (கொட்டாஞ்சேனை) ஆகியன இதுவரை வேலாயுதம் படத்தை வெளியிடும் திரையரங்குகள் ஆகும்.மட்டக்களப்பு அம்பாறை மலையகம் மற்றும் யாழ்ப்பாண திரையரங்குகள் இன்னும் முடிவாகவில்லை . யாழ்ப்பாணத்தில் வேலாயுதம் திரைப்படத்தை வெளியிட மூன்று முக்கிய திரையரங்குகள் போட்டியிடுகின்றன.ராஜா மனேகரா மற்றும் நெல்சன் ஆகியன ஆகும். ராஜாவில் அடுத்த வெளியீடு வேலாயுதம் என பல மாதங்களுக்கு முன்னே விளம்பரம் தொடங்கியிருந்த நிலையில் நெல்சனும் அடுத்த வெளியீடு வேலாயுதம் எனக்கூறியுள்ளது.பொறுத்திருந்து தான் பார்க்கனும் எந்த திரையரங்கு அதிக பணம் கொடுத்து வாங்கும் என்று.எனினும் வேலாயுதம் இலங்கையில் அதிக திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெறும் என்பது உண்மை.இதற்கு விஜயின் சமீபத்து படங்கள் சான்றாகும்.
comments | | Read More...

நண்பனை வாங்கியது சன்பிக்சர்ஸ்

 

எந்திரன் வெற்றிக்குப் பிறகு நண்பனை இயக்கும் ஷங்கர் படப்பிடிப்பு செய்திகளை என் அனுமதியில்லாமல் வெளியிடாதீர்கள் என்று கட்டளையிட்டுள்ளார்.
இந்தியில் மெஹா ஹிட்டான த்ரீ இடியட்ஸ் திரைப்படம் தமிழில் வரவிருக்கிறது.
நண்பன் என்ற பெயரில் வரவுள்ள இப்படத்தை பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்குகிறார்.
நண்பனை பற்றிய செய்திகள் அடிக்கடி வெளியானாலும் சில கோடம்பாக்க தகவல்கள் நம்மை சந்தோஷமடைய செய்கின்றன.
நண்பன் படத்திற்கான வகுப்பறை காட்சிகளை ஏவி.எம்.மிலும், சண்டைக்காட்சிகளை பிரசாத் லேப்பிலும் செட் போட்டு படமாக்கிவிட்டார் ஷங்கர்.
படத்தில் விஜய், ஸ்ரீகாந்திற்கு நாயகிகள் உண்டு ஆனால் ஜீவாவுக்கு ஜோடி கிடையாது.
கதாநாயகி இலியானாவுக்கு ஆண்ட்ரியா டப்பிங் பேசியுள்ளார்.
படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் குழுமம் வாங்கியுள்ளது. படம் பொங்கலுக்கு வெளிவரும் .
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger