News Update :
Powered by Blogger.

விகடன் சொன்னது உண்மையா?

Penulis : karthik on Tuesday, 2 October 2012 | 17:28

Tuesday, 2 October 2012

விகடன் சொன்னது உண்மையா?
ஆனந்த விகடன் 3-10-12 இதழில் விகடன்
டீமின் விகடன் ஜன்னல் பகுதியில் இச்
செய்தி வெளியாகியுள்ளது..
"தமிழர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்..
'தமிழர்கள் ராஜீவ் காந்தியைக்
கொன்றவர்கள்.அவர்கள் மிகவும்
ஆபத்தானவர்கள்/ -ராஜபக்க்ஷேவின் இந்திய
வருகையின் போது பாதுகாப்புக்காக
இருந்த இந்திய
படை வீரர்களுக்கு மத்திய அரசு கூறிய
எச்சரிக்கை வார்த்தைகள் இவை'
இது உண்மையா?
யாரேனும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ்
அறிய இயலுமா?
இது உண்மையாயின்..தமிழக அரசியல்
தலைவர்கள் ஏன் மன்மோகன் சிங் காய்
மாறிவிட்டார்கள் இவ்விஷயத்தில்.
comments | | Read More...

நெல்லை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

Penulis : karthik on Monday, 1 October 2012 | 02:48

Monday, 1 October 2012



நெல்லை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு நெல்லை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

நெல்லை, அக். 1-

நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் கடையநல்லூர் தொகுதியில் அதிகபட்சமாக 2,28,312 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக வாசு தேவநல்லூர் தொகுதியில் 1,96,968 வாக்காளர்கள் உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பின் கலெக்டர் செல்வராஜ் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் கடந்த 5-1-2012 அன்று 21,16,014 வாக்காளர்கள் இருந்தனர். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க கடந்த 15-9-2012 வரை 9,629 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீதான பரிசீலனையில் 4003 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ள 5,623 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்த விண்ணப்பதாரர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டன.

இது தவிர இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் என 1,779 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இன்று முதல் வருகிற 31-ந்தேதி வரை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய, நீக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி வருகிற 6 மற்றும் 9-ந்தேதிகளில் கிராமசபைகளில் வாக்காளர் பட்டியல் வாசிக்கப்பட்டு சரி பார்க்கப்படும்.

அதில் பெயர் விடுபட்டவர்கள் தங்களது பெயரை புதிதாக சேர்க்க வேண்டும். இதற்காக வருகிற 7, 14, 21 ஆகிய 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அந்தந்த வாக்குச் சாவடிகளில் நடக்கும் இந்த முகாம்களில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம். 1-1-2013 அன்று 18 வயது பூர்த்தி அடைவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு 5-1-2013 அன்று இறுதி வாக்காளர் பட்டியில் வெளியிடப்படும். இவ்வாறு கலெக்டர் செல்வராஜ் கூறினார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி, தேர்தல் பிரிவு தனி தாசில்தார் ராமச்சந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் மதிமாறன் ஆகியோர் உடனிருந்தனர்.

comments | | Read More...

சுவிட்சர்லாந்தில் ஹன்சிகாவிடம் கொள்ளை: பணம், ஐ போனை பறித்துச் சென்றனர்



சுவிட்சர்லாந்தில் ஹன்சிகாவிடம் கொள்ளை: பணம், ஐ போனை பறித்துச் சென்றனர் சுவிட்சர்லாந்தில் ஹன்சிகாவிடம் கொள்ளை: பணம், ஐ போனை பறித்துச் சென்றனர்

'எங்கேயும் காதல்' படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா. விஜய்யுடன் 'வேலாயுதம்', உதயநிதியுடன் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' ஆகிய படங்களில் நடித்தார்.

தற்போது 'சேட்டை', 'வாலு', 'வேட்டை மன்னன்', 'சிங்கம்-2' படங்களில் நடித்து வருகிறார். 'சேட்டை' படத்துக்காக ஆர்யா ஹன்சிகா ஆடிப்பாடும் டூயட் பாடல் காட்சியோன்று சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்டது.

இதில் நடித்துக்கொண்டிருந்த போது ஹன்சிகாவின் கைப்பை திருட்டு போனது. மர்ம நபர் அந்த பையை பறித்துக்கொண்டு ஓடிவிட்டான். பைக்குள் விலை உயர்ந்த ஐ-போன், ஐ-பாட், உயர் ரக மேக்கப் பொருட்கள் சுவிட்சர்லாந்து நாட்டு பிராங்க் (பணம்), அமெரிக்க டாலர் போன்றவை இருந்தன. ஷாப்பிங் செலவுக்காக அவற்றை வைத்து இருந்தார். எல்லாம் பறிபோய்விட்டது.

இதனால் ஹன்சிகா அதிர்ச்சியாகி கண்கலங்கினார். இந்த திருட்டு குறித்து அங்குள்ள போலீசில் புகார் செய்தார். படிப்பிடிப்பு முடிந்து விமானத்தில் இந்தியா புறப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக இந்த திருட்டு நடந்தது.

இதுகுறித்து ஹன்சிகா கூறும்போது, திருட்டு போன பையில் எனது கம்ப்யூட்டர் சாதன பொருட்கள் இருந்தன. அவற்றில் எனது தனிப்பட்ட படங்கள், சினிமா தொடர்பான ஸ்கிரிப்ட் போன்றவை இருந்தன. அவை தொலைந்ததால் பெரும் அதிர்ச்சியாகியுள்ளேன் என்றார்.

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger