News Update :
Powered by Blogger.

ஓசூர் அருகே 600 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை உயிரோடு மீட்டது எப்படி?: தீயணைப்பு படையினரின் மின்னல் வேக மீட்புபணி

Penulis : karthik on Sunday, 30 September 2012 | 22:50

Sunday, 30 September 2012



ஓசூர் அருகே 600 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை உயிரோடு மீட்டது எப்படி?: தீயணைப்பு படையினரின் மின்னல் வேக மீட்புபணி ஓசூர் அருகே 600 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை உயிரோடு மீட்டது எப்படி?: தீயணைப்பு படையினரின் மின்னல் வேக மீட்புபணி

ஓசூர், அக். 1-

ஓசூர் அருகே 600 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் 4 1/2 மணி போராட்டத்துக்கு பின்பு உயிரோடு மீட்கப்பட்டான். தீயணைப்பு படையினரின் மின்னல் வேக மீட்பு பணியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார். கிருஷ்ணகிரி மாவட்டம் அகலகோட்டை ஊராட்சிக்கு உட்பட்டது மந்தையூர். இந்த பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (30), இவரது மனைவி பத்மா (26), இவர்களுக்கு பூஜா (3 1/2) என்ற பெண் குழந்தையும், 2 1/2 வயதில் குணா என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். ஆனந்தனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நேற்று முன்தினம் 600 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டது. இரவு நேரம் என்பதால் அதை மூடாமல் அப்படியே விட்டு சென்றனர்.

இந்நிலையில் நேற்று காலை 10 மணியளவில் பத்மா தனது 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு விவசாய நிலத்திற்கு துணி துவைக்க சென்றார். அப்போது குழந்தைகள் 2 பேரும் விளையாடிக் கொண்டு இருந்தனர். பத்மா துணி துவைத்து கொண்டு இருந்தார். அப்போது மூடாமல் இருந்த 600 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் சிறுவன் குணா காலை உள்ளே விட்டு விளையாடு கொண்டு இருந்தான். அப்போது திடீரென அவன் தவறி அந்த குழிக்குள் விழுந்தான். இதைப் பார்த்த பூஜா தனது தாய் பத்மாவிடம் கூறினாள்.

குழிக்குள் விழுந்த சிறுவன் குணா அம்மா... அம்மா... என்று அலறி துடித்தான். இதைப்பார்த்து செய்வதறியாத தவித்த பத்மா கூச்சல் போட்டார். இதையடுத்து தோட்டத்தில் வேலைப்பார்த்து கொண்டு இருந்தவர்கள் அனைவரும் அங்கு ஓடிவந்தனர். அவர்கள் குழந்தையை மீட்கும் முயற்சியும் மேற்கொண்டனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து அவர்கள் தேன்கனிக்கோட்டை தாசில்தார் சித்ராவுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வருவாய் அலுவலர் பால்ராஜ், வி.ஏ.ஓ. மாதேஸ், ஆகியோர் விரைந்து வந்தனர். ஓசூர் சப்-கலெக்டர் பிரவீன் நாயர் உடனடியாக மீட்பு பணிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தேன்கனிக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் நடராஜன் தலைமையில் 10 வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர்.

மேலும் 108 ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டது. டாக்டர்களும் தயார் நிலையில் இருந்தனர். மேலும் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டால் ஆக்சிஜன் செலுத்த ஆக்சிஜன் சிலிண்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. தீயணைப்பு துறையினர் ஆழ்துளை கிணற்றில் கயிறு விட்டு பார்த்த போது உள்ளே சிறுவன் 20 அடி ஆழத்தில் சிக்கி இருப்பது தெரியவந்தது. உடனடியாக 2 ஜே.சி.பி. எந்திரங்கள் அங்கு வரவழைக்கப்பட்டது. காலை 11-30 மணிக்கு ஆழ்துளை கிணற்றின் அருகே பள்ளம் தோண்டப்பட்டது. பகல் 1 1/2 மணிக்கு 15 அடி ஆழத்தில் பாறை சிக்கியதால் மேற்கொண்டு தோண்ட முடியவில்லை.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் குழியின் பக்கவாட்டில் குழி தோண்டினர். அப்போது அந்த இடத்தில் இருந்து ஆழ்துளை கிணற்றில் 4 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியிருந்தான். இதனால் சிறுவனை மீட்க முடியவில்லை. இதையடுத்து 5 அடி நீள கொக்கி கம்பி மற்றும் நூல்கயிறு கொண்டு வரப்பட்டது. சிறுவனின் சட்டை காலரில் கம்பியை மாட்டி ஒருவர் பிடித்துக் கொள்ள, சிறுவனின் கையில் கயிற்றால் சுருக்கு மாட்டப்பட்டது. அந்த கயிறை மற்றொருவர் பிடித்து கொண்டார். இதையடுத்து தீயணைப்பு வீரர் வெங்கடசாமி என்பவர் துளையின் உள்ளே சென்று சிறுவனை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தார். அப்போது அங்கு தயாராக இருந்த டாக்டர் சிறுவன் குணாவுக்கு ஆம்புலன்சில் அவசர சிகிச்சை அளித்தனர்.

பின்னர் அவனை ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் மகேஸ்வரன் ஆஸ்பத்திரிக்கு சென்று சிறுவனை சந்தித்தார். மேலும் அவரது பெற்றோருக்கும் ஆறுதல் கூறினார். சுமார் 4 1/2 மணி நேரம் நடந்த மீட்புப்பணி மாலை முடிவடைந்தது. சிறுவனை உயிரோட மீட்க தீயணைப்பு துறையினர் பல நடவடிக்கைகளை எடுத்தனர். மின்னலாக செயல்பட்ட அவர்களின் மீட்பு நடவடிக்கையை பார்த்து பொதுமக்கள் அவர்களை பாராட்டினர்.

comments | | Read More...

அதிபர் பராக் ஒபாமாவிற்கு வலுவான ஆதரவளிக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள்



அதிபர் பராக் ஒபாமாவிற்கு வலுவான ஆதரவளிக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் அதிபர் பராக் ஒபாமாவிற்கு வலுவான ஆதரவளிக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள்

வாஷிங்டன், அக். 1-
 அமெரிக்க வாழ் இந்தியர்கள், கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சிக்கு காட்டிய ஆதரவை காட்டிலும் இப்போது அதிகமானோர் அக்கட்சிக்கு தங்கள் ஆதரவை காட்டியுள்ளனர்.  ஆளும் ஜனநாயகக் கட்சியின் அதிபர் பராக் ஒபாமாவிற்கே 68 சதவிகிதம் அமெரிக்க இந்தியர்கள் தங்களின் வாக்குகளை அளிப்பார்கள் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. 5 சதவிகிதம் இந்தி யர்களே ரிபப்ளிக்கன் கட்சித் தலைவர் ரோம்னியை ஆதரிப்பார்கள் என்றும் அது கூறுகிறது.  குறைந்த எண்ணிக்கையிலான அமெரிக்க இந்தியர்கள் தங்களின் சொத்துக்களை காப்பற்றவே குடியரசு கட்சியின் ஆதரவை நாடுகின்றனர் என்று கூறப்படுகிறது.

comments | | Read More...

அரசியல் அழுக்கு நிறைந்தது; நாட்டுக்கு நல்ல எதிர்காலத்தை தராது: அன்னா ஹசாரே பேட்டி




அரசியல் அழுக்கு நிறைந்தது; நாட்டுக்கு நல்ல எதிர்காலத்தை தராது: அன்னா ஹசாரே பேட்டி அரசியல் அழுக்கு நிறைந்தது; நாட்டுக்கு நல்ல எதிர்காலத்தை தராது: அன்னா ஹசாரே பேட்டி

புதுடெல்லி, அக். 1-

ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் சட்டம் கொண்டு வர வலியுறுத்தி பிரபல காந்தியவாதியான அன்னா ஹசாரே போராடி வருகிறார். இனி உண்ணாவிரதம் இருக்க மாட்டேன், ஆனால் எனது போராட்டம் தொடரும் என்று ஏற்கனவே அறிவித்துள்ள அன்னா ஹசாரே, அடுத்தக்கட்டமாக மேற்கொள்ள வேண்டிய போராட்டம் குறித்து தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்துவதற்காக நேற்று டெல்லி சென்றார்.

அங்கு அவர் ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசியல் பாதை என்பது புனிதமான ஒன்றல்ல. அரசியல் என்பது முழுக்க அழுக்குகள் படிந்த ஒன்றாகும். ஆனால் போராட்டப்பாதை என்பது புனிதமானது. நாட்டுக்கு அரசியலால் ஒரு எதிர்காலத்தை வழங்க முடியாது. ஆனால் ஒரு பெரிய இயக்கத்தால் அது முடியும்.

அந்த வகையில்தான் அரசியல் என்பது சரியான இலக்காக இருக்காது என்று நான் கூறினேன். நான் மாற்று சக்தியாக எதையும் அளிக்கவில்லை. மாற்றாக ஒன்றைத் தரவேண்டும் என்று என்னைக் கேட்டபோது, இது நல்ல யோசனைதான், ஆனால் அதற்கு (எப்படி ஒரு மாற்றுசக்தி அமைய வேண்டும் என்பது குறித்து) நான் கேட்கிற 5 அல்லது 6 கேள்விகளுக்கு விடை தேவை என்று கூறினேன். ஆனால் அந்தக் கேள்விகளுக்கு எனக்கு விடை கிடைக்கவில்லை.

(புதிய கட்சிக்கு உறுப்பினர்களை சேர்ப்பது எப்படி, பணம் எங்கிருந்து வரும், தேர்தல்களில் வேட்பாளர்களை எப்படி தேர்வு செய்வது என்பது உள்ளிட்ட கேள்விகளையே அன்னா ஹசாரே கேட்டார்.).

நான் அரசியலில் குதிக்க வேண்டும் என்று கருதியிருந்தால், அதை நான் முன்பே செய்திருக்க முடியும். நான் ஊராட்சி தேர்தலில்கூட போட்டியிட்டது இல்லை. நான் மாற்று சக்தி பற்றி பேசியபோது, அரசியலை மாற்று சக்தியாக கூறியது கிடையாது.

அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக தொண்டர்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள், மற்றவர்களை இரண்டு நாட்கள் சந்தித்துப் பேசுவேன். அரசியல் நமக்கு நல்லதொரு எதிர்காலத்தை வழங்கும் என்றால், பொன் வாத்து என்று கருதப்பட்ட இந்தியா ஏன் பொன்னை அடமானம் வைக்கிற நிலைக்கு வரவேண்டும். அரசியல் மூலமாக இந்த நாடு பிரகாசமான எதிர்காலத்தை அடைய முடியாது.

இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.

தனது குழுவின் முக்கிய உறுப்பினராக திகழ்ந்த அரவிந்த் கெஜ்ரிவாலை விட்டுப் பிரிந்து வந்த பின்னர் அன்னா ஹசாரே டெல்லி பயணம் மேற்கொண்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger